Skip to main content

Posts

Showing posts from December, 2022

தப்லீக் ஜமாத்தைப்பற்றி தமிழக மாமேதையின் தீர்ப்பு தலைசிறந்த நபிமொழிகளின் கருத்துக்கள்

  தப்லீக் ஜமாத்தைப்பற்றி        தமிழக மாமேதையின் தீர்ப்பு தலைசிறந்த நபிமொழிகளின் கருத்துக்கள்   தொகுப்பாசிரியர்: சையத் இஸ்மத் பாஷா சக்காப் பெரிய தைக்கால் , கிள்ளை - 608 102, தமிழ்நாடு.   அஹலே சுன்னத் வ ஜமாஅத் , 1438, வரகப்பையர் சந்து , தெற்குவீதி , தஞ்சாவூர் - 613009     பிஸ்மிஹி தஆலா மதிப்புரை. அன்புடையீர்! அஸ்ஸலாமு   அலைக்கும் , வரஹ் இப்போது எங்கு பார்த்தாலும் , ஜமா அத்தே இஸ்லாமி என்றும் , தப்லீகு ஜமாஅத் என்றும் , இப்படி இஸ்லாமிய கொள்கைக்கு மாறுபட்ட பல கூட்டங்கள் வெளியாகி நேரிய கொள்கையில் இருந்த மக்களை குழப்பி , மௌலூது ஓதுவது கூடாது , பாத்திஹா கூடாது , மீலாது நடத்தக்கூடாது , அவ்லியாக்களை ஜியாரத்து செய்யக்கூடாது என்றெல்லாம் பாமர மக்களிடையே பரப்பி அவர்களை வீணாக ஊர்ஊராக கூட்டிச் சென்று மக்களின் மனதில் வஹ்ஹாபியத்தின் விஷத்தை ஊட்டி விடுகின்றனர் நாங்கள் நன்மையை ஏவுகிறோம் தொழுகைக்கு அழைக்கிறோம் என்று சொல்லி ஒரே ஒரு கடமையை மட்டும் செய்வதாக சொல்லித்திரிகின்றனர் தப்லீக்வாலாக்கள். பாமர மக்கள் பலரின் தொழில் , குடும்ப விஷயங்கள் , தர்மங்கள் எல்லாம்