Skip to main content

Posts

Showing posts from November, 2022

ஹைதராபாத்தைச் சேர்ந்த நூரிஷாஹ்வைப் பற்றியும், அவருடைய தரீகாவைப் பற்றியும்

ஹைதராபாத்தைச் சேர்ந்த நூரிஷாஹ்வைப் பற்றியும், அவருடைய தரீகாவைப் பற்றியும் நாகப்பட்டிணம் நஸீஹத்துல் இஸ்லாமிய சங்கத்தினர் கேட்ட கேள்விகளுக்கு கேரளாவைச் சேர்ந்த " ஜன்னத்துல் உலூம் " அரபிக் கல்லூரியின் முதல்வர் E.K. ஹஸன் முஸ்லியார் (பாக்கவி) அவர்கள் அளித்த இந்த விளக்கவுரையை ஆடியோவாக கேட்க 👇👇👇 https://anchor.fm/online-islam/episodes/ep-e1renkb 👆👆👆 விளக்கவுரை. நூரிய்யா தரீக்காவைச் சேர்ந்தோர் செய்து வருகின்ற சில செயல்களைப் பற்றி பதில்கள் கேட்டு அனுப்பிய தங்களுடைய கடிதம் கிடைத்தது. பதில்கள் பின்வருமாறு : நூரிஷாஹ் என்ற பெயர் கொண்ட மனிதர் ஆரம்பத்தில் தான் 'காதிரியா' 'சிஷ்திய்யா' தரீகாவிற்கு ஒரு ஷைகு என்பதாகக் கூறிக் கொண்டு கேரளாவில் நுழைந்தார். பொதுமக்களும் சில உலமாக்களும் அவரை அங்கீகரித்தனர். மக்கள் மனதில் நல்ல மதிப்பை பெற்ற பின்னர் 'தரீக்கத்தே நூரீஷாஹ்' என்ற ஒரு தரீக்காவிற்கு தான் தனியொரு ஷைகு என்பதாக தாவாச் செய்தார். தம்மை பின்பற்றிய சீடர்களுக்குப் பற்பல தவறான கருத்துக்களை போதித்தார். அவை அல்லாஹ்வுடைய வாக்கு என்றும், தான் அல்லாஹ்வுடைய தானமென

மஜ்லிஸ் உலமாயி அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் செயற்குழு கூட்டமும் – தீர்மானங்களும் செய்திக் கட்டுரை

  தர்கா மாத இதழ்லில்   ஷஃபானுல் முஅஜ்ஜம் - 1442 ( மார்ச்சு - 2021 ) ல் வெளியிடப்பட்ட   மஜ்லிஸ் உலமாயி அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் செயற்குழு கூட்டமும் – தீர்மானங்களும் செய்திக் கட்டுரை   Pdf Download-A4 Pdf Download இக்கட்டுரையை ஆடியோவாக கேட்க 👇👇👇 https://anchor.fm/online-islam/episodes/ep-e1reern 31.1.2021 ல் மஜ்லிஸ் உலமா செயற்குழு கூட்டம் காயல்பட்டணம் , காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறும் என்ற அழைப்பைக் கண்டோம். அதில் குறிப்பாக...   1. நூரிஷாஹ் கூட்டத்தின் பெருகிவரும் குழப்பங்களும் , அதற்கான தீர்வுகளும் ,   2. தரீக்காக்களில் வஹ்ஹாபிய ஊடுருவல்களும் தீர்வுகளும் எனும் பிரச்சினைகள் பற்றி மஜ்லிஸ் ஒன்றுகூடி தக்க வாத பிரதிவாதங்கள் செய்து ஆய்வின் முடிவில் தீர்மானமாக நிறைவேற்றப்படும் என அழைப்பிதழில் கூறப்பட்டிருந்தது. நாமும் செய்தி சேகரிக்கும் நோக்கோடு திருச்செந்தூர் விரைவு வண்டியில் பயணப்பட்டு காலை 7:00 மணிக்கு ஆஜரானோம்.   குளித்து முடித்து தயாராகி ஏற்பாட்டாளர்கள் மூலம் குளம் ரிழ்வான் அவர்கள் வழங்கிய சிற்றுண்டியை உண்டு அவுலியாக்களி