Skip to main content

Posts

Showing posts from January, 2021

திருட்டுத்தனம் செய்து மாற்றப்பட்ட பாக்கியாத்தின் ஃபத்வாகள்

*திருட்டுத்தனம் செய்து மாற்றப்பட்ட  பாக்கியாத்தின் ஃபத்வாகள்..* ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️         🔥கந்தூரி விழாக்கள் குறித்து...🔥  வேலூர்_பாக்கியத்துஸ்_ஸாலிஹாத்_அரபிக்கல்லூரியின்_ஃபத்வா... (மார்க்க_தீர்ப்பு) இப்படி ஒரு தலைப்பில் ஒரு பதிவை போட்டு பார்த்தீர்களா..? பாக்கியாத் மதரசாவே தர்ஹாகளை பற்றி , நேர்ச்சை பற்றி , அவ்லியாக்கள் பற்றி , ஸியாறத் பற்றி இப்படி ஒரு மார்க்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது .  மேற்கண்ட_ஃபத்வா... பாகிய்யாத்துஸ் ஸாலிஹாத் ஃபத்வாத் தொகுப்பு ஓர் அறிமுகம் " எனும் சிறு நூலில் (பக்கம் 57. 58 - ல்) இடம் பெற்றுள்ளது... இந்நூலை தொகுத்தது... சென்னை காஷிஃபுல் ஹுதா அரபிக் கல்லூரி முதல்வர்  முஹம்மது யாகூப் அவர்கள் ஆகும். எனவே தங்களை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்வோர் பாக்கியாத் உடைய மார்க்க தீர்ப்பை ஏற்று ஃபத்வாவில் கண்டுள்ள தடை செய்யப்பட்ட அனாச்சாரங்களை விட்டொழிக்க வேண்டும்... இப்படி... பாக்கியாத் மதரசா வெளியிட்டதாக ஒரு பொய்யான ஃபத்வாவை தூக்கி கொண்டு தளங்களில் போட்டிருக்கிறார்கள். இதன் உண்மைத்தன்மையை பாக்கியத்தை பற்றிய கடந்த கால வரலாற்றை அறிந்த ஓர் பாகவி என்கிற மு