Skip to main content

Posts

Showing posts from January, 2023

உருதெரியாமல் போன உருப்படி இல்லாத தப்லீக் ஜமாத்

உருதெரியாமல் போன உருப்படி இல்லாத தப்லீக் ஜமாத். உருதெரியாமல் போன உருப்படி இல்லாத தப்லீக் ஜமாத். ஒரு காலத்தில் தப்லீக் ஜமாத்தை பற்றி மிகவும் உயர்வாக மக்களிடம் புகழ்ந்து பேசி வந்த ஆலிம்சாக்கள் தற்போது தலைமறைவாக இருப்பது ஏன்? இனத்துரோகம் செய்த அந்த அமைப்பை தன் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு உயர்த்திப் பேசிவந்த ஆலிம்கள் தற்போது எங்கே போனார்கள்? தற்பொழுது ஏன் தப்லீக் ஜமாத்தை பற்றி புகழ்ந்து பேசுவதற்கு பயந்து நடுங்குகிறார்கள்? மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையும் காட்டுவது போன்ற நயவஞ்சகத்தனமான மனதை உடையவர்களே இப்படிப்பட்ட போலி ஆலிம்சாக்கள். இந்தக் கள்ள ஆலிம்சாக்கள் தற்போது தப்லீக் ஜமாத்தை பற்றி புகழ்ந்து பேசாததற்கு காரணங்கள் பல உண்டு. தப்லீக் ஜமாத்தை பற்றிய விழிப்புணர்வு பொதுபொதுமக்களிடையே இல்லாத காலகட்டத்தில் இந்த கள்ள ஆலிம்சாக்கள் பொதுமக்களை மடைமாற்றம் செய்து வந்தார்கள். அப்பாவி பொதுமக்களை மூளை சலவை செய்து வந்தார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் இந்த கள்ள ஆலிம்சாக்கள் தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுத்தனர். ஆனால் தற்போது அவர்களுடைய பருப்பு வேகாது. தப்லீக் ஜமாத்தினுடைய வழிக