Skip to main content

திருட்டுத்தனம் செய்து மாற்றப்பட்ட பாக்கியாத்தின் ஃபத்வாகள்

*திருட்டுத்தனம் செய்து மாற்றப்பட்ட  பாக்கியாத்தின் ஃபத்வாகள்..*
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

        🔥கந்தூரி விழாக்கள் குறித்து...🔥
 வேலூர்_பாக்கியத்துஸ்_ஸாலிஹாத்_அரபிக்கல்லூரியின்_ஃபத்வா...
(மார்க்க_தீர்ப்பு)

இப்படி ஒரு தலைப்பில் ஒரு பதிவை போட்டு பார்த்தீர்களா..? பாக்கியாத் மதரசாவே தர்ஹாகளை பற்றி , நேர்ச்சை பற்றி , அவ்லியாக்கள் பற்றி , ஸியாறத் பற்றி இப்படி ஒரு மார்க்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது . 

மேற்கண்ட_ஃபத்வா...
பாகிய்யாத்துஸ் ஸாலிஹாத் ஃபத்வாத் தொகுப்பு ஓர் அறிமுகம் " எனும் சிறு நூலில் (பக்கம் 57. 58 - ல்) இடம் பெற்றுள்ளது...

இந்நூலை தொகுத்தது...
சென்னை காஷிஃபுல் ஹுதா அரபிக் கல்லூரி முதல்வர் 
முஹம்மது யாகூப் அவர்கள் ஆகும்.
எனவே தங்களை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்வோர் பாக்கியாத் உடைய மார்க்க தீர்ப்பை ஏற்று ஃபத்வாவில் கண்டுள்ள தடை செய்யப்பட்ட அனாச்சாரங்களை விட்டொழிக்க வேண்டும்...

இப்படி... பாக்கியாத் மதரசா வெளியிட்டதாக ஒரு பொய்யான ஃபத்வாவை தூக்கி கொண்டு தளங்களில் போட்டிருக்கிறார்கள்.
இதன் உண்மைத்தன்மையை பாக்கியத்தை பற்றிய கடந்த கால வரலாற்றை அறிந்த ஓர் பாகவி என்கிற முறையில் ஆலிம்கள் சமூகத்தில் சொல்லவேண்டிய கடமை எனக்கு உண்டு.

*மரணித்தவர்களின் நன்மைகளை பேசுங்கள் குறைகளை பேசாதீர்கள்* என்கிற நபி மொழி காதில் ஒலித்துக் கொண்டிருப்பதால்  ஃபத்வாவை தொகுத்ததாக சொல்லப்பட்ட கண்ணியத்திற்குரிய மர்ஹும் அமீரே ஷரீஅத்தை இதில் இழுக்க மனம் வரவில்லை.

*தென்னிந்தியாவின் மூத்த முன்னோடி மதரஸாவான  , தாய்க்கல்லூரி என்று பெயர் பெற்ற பாக்கியாத் என்கிற ஓர் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கொண்ட நிறுவனத்தை* பணம் படைத்த ஒரு சிலருடன் கூட்டணி அமைத்துக்கொண்டு  சன்னம் சன்னமாக சிதைத்த மோசமான வரலாற்றுக்கு சிலர் சொந்தக்காரர்களாக கடந்தகாலத்தில் திகழ்ந்தார்கள்.

அப்படித்தான் பாக்கியாத் ஃபத்வா வின் விஷயத்திலும் தன் குள்ள நரி தந்திரத்தை சிலர் காட்டினார்கள் .

*அன்றைய முஸ்லிம்களிடையே, ஏன் இன்றும் கூட "பாக்கியாத் ஃபத்வா" விற்கென தனி அடையாளம் தமிழக முஸ்லிம்கள் இடையே உண்டு...* 

ஆனால் அந்த புகழ் பெற்ற ஃபத்வாக்கள் தன் வஹ்ஹாபிஸ மஸ்லக்கிற்கு மாற்றமாக ... குறிப்பாக பல ஃபத்வாக்கள் சுன்னத் ஜமாத் கொள்கைக்கு ஆதரவாக இருப்பது  பூந்தமல்லி வஹ்ஹாபிகளின் கண்களை உறுத்தியது...

எனவே சில பணம் படைத்த நிர்வாகிகளின்..? ஆதரவோடு அஃலா ஹலரத் அவர்களின் ஃபத்வாக்களின் உண்மைத்தன்மையை மறைத்து சில உள்ளடி வேலைகளை செய்து தன் வஹ்ஹாபிச கொள்கைக்கு தோதுவாக அதை மாற்றம் செய்து 24.04.1988 அன்று நடை பெற்ற பாக்கியாத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட *பாக்கியாத் ஃபத்வா தமிழ் மொழி பெயர்ப்பு* என்ற புத்தகத்தை  வெளியிட்டார்கள் . 

வெளியிடப்பட்ட இந்த "ஃபத்வா பாக்கியாத்" என்ற புக்  அசல் பாக்கியாத் ஃபத்வாவின் உண்மையான மொழிபெயர்ப்பு அல்ல.
 மாறாக உட் சொருகளும்,  தவறான அர்த்த மாற்றங்களும் உடையவை என்பதற்கான ஆதாரம் என்ன தெரியுமா..?

இதுபற்றி முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமத் அவர்கள் 15/09/1988 மணிச்சுடர் இதழில்  *"பாக்கியாத் பெயரால் மோசடி பிரசுரம்"* என்ற தலைப்பிட்டு இந்த ஃபத்வா பாக்கியாத்  குறித்து மதிப்புரை எழுதி இருக்கிறார்கள். 
 அதில்  .. *"அஃலா ஹல்ரத் காலமாகி அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் பாக்கியாத் பதிவு ஏட்டில் உள்ள சுமார் 375 ஃபத்வா களை மட்டும் ஒரு குறிப்பிட்ட மஸ்லக்கை பின் பற்றும் குழப்பவாதிகள் சிலர் தந்திரமாக தங்களின் கொள்கைகளை உட் புகுத்தி வெளியிட்டிருக்கிறார்கள்"..* என்கிறது அவர்களின் மதிப்புரை.. 

ஃபத்வாக்கள் வெளியிடப்படும் முன் அது முதல்வர் ( அப்துல் ஜப்பார் ஹழ்ரத்) அவர்களின் அனுமதியையோ பேராசிரியர்களின் அனுமதியை யோ பெற்றதாகவும் தகவல் இல்லை ... என்றும் இது மிகப்பெரும் மோசடித் தனத்தொடு வெளியிடப் பட்ட ஃபத்வா..  என்று மணிச்சுடர் பத்திரிக்கையின் உரிமையாளரான அப்துல் ஸமத் அவர்கள்  கடும் கண்டனத்தை தன் இதழில் பதிவு செய்தார்கள் . 

இவரது தந்தை யார் தெரியுமா..? திருக்குர்ஆனை முதன்முதலாக தமிழாக்கம் செய்த அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் ஆகும் 

*பாக்கியாத்தில்  ஓதியவர்கள் மட்டுமல்ல .. அவர்களின் வாரிசுகளின் ரத்தத்தில் கூட பாக்கியாத்தின் பிரியம் இருக்கும் என்பதற்கான உதாரணம் அது*.. 
 அந்த பிரியத்தினால்தான்  தன் பெயரில் எழுதாமல் *பாகவியின் மைந்தன்* என்ற பொருள்படும் *இப்னுல் பாகவி* என்ற பெயரில் அப்துஸ்ஸமத் அவர்கள் இந்த ஃபத்வாவுக்கு எதிரான கடுமையான பதிவை தன் இதழில் வெளியிட்டு இருந்தார்கள்.  இதுதான் உண்மை ..

*இறைநேசர்களின் விஷயத்தில் , தர்ஹாக்களின்  விஷயத்தில் , ஸியாரத் விஷயத்தில் பாக்கியாத்தின் கொள்கை என்ன ? என்பதற்கு பல்லாயிரக் கணக்கான பாகவிகள் உயிருள்ள சாட்சிகளாக வெளியுலகில் உலா வருகிற போது சூரியனுக்கு டார்ச் அடித்து வெளிச்சம் காட்டிய கதையாக  "பாக்கியாத்தின் ஃபத்வா  என்பது இதுதான்" .. என்று ஒரு வஹ்ஹாபிஸ மாயத் தோற்றத்தை ஆலிம் சமூகத்தில் காட்ட முனைந்திருக்கிற இந்த பதிவும் , திருட்டுத்தனமாக மாற்றப்பட்ட இந்த ஃபத்வாகளும் பொய்யானவை என்பதை ஆலிம் சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும்.* 
~~~~~~~~~~~~~~~~~
*செய்யது அஹமது அலி . பாகவி*

Comments

Popular posts from this blog

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல்

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல் https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post.html மௌலவி  சதீதுத்தீன்  பாகவி , அவர்களுக்கு, மௌலவி, பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி,  எழுதும்  பகிரங்க மடல் தப்லீக் ஜமாஅத் பற்றி  நீங்கள்  பேசிய ஒரு பதிவை  வட்சொப்  தளங்களில்  நான் கேட்டேன். அதில்., இஸ்மாயீல் திஹ்லவி  பற்றியும், அவரது தக்வியத்துல் ஈமான் என்ற நூல் பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளீர்கள். இப்பேச்சு  செவிவழிச்  செய்தியாக இல்லாமல் அறிவுபூர்வமானது  என்பதை," தக்வியத்துல் ஈமான்  என்ற  நூல், தன்னிடமிருப்பதையும், அதை நீங்கள் படித்ததையும் உரையில் குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. உங்களின்  இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள்   தேவ்பந்து  கொள்கையைச் சார்ந்தவர்   என்று உங்களை  விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். மௌலவி, அவர்களே! நீங்கள் படித்த  தக்வியத்து  ஈமான்  என்ற  நூல் தமிழில், "ஏகத்துவமும், இணைவைத்தலும் ."   என்ற பெயரில் 'அப்துல்ஹமீது  ஆமிர...

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்...