Skip to main content

மஜ்லிஸ் உலமாயி அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் செயற்குழு கூட்டமும் – தீர்மானங்களும் செய்திக் கட்டுரை

 

தர்கா மாத இதழ்லில்  ஷஃபானுல் முஅஜ்ஜம் - 1442 (மார்ச்சு - 2021 ) ல் வெளியிடப்பட்ட

 

மஜ்லிஸ் உலமாயி அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் செயற்குழு கூட்டமும் – தீர்மானங்களும் செய்திக் கட்டுரை

 


Pdf Download-A4

Pdf Download

இக்கட்டுரையை ஆடியோவாக கேட்க

👇👇👇

https://anchor.fm/online-islam/episodes/ep-e1reern

31.1.2021 ல் மஜ்லிஸ் உலமா செயற்குழு கூட்டம் காயல்பட்டணம், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறும் என்ற அழைப்பைக் கண்டோம். அதில் குறிப்பாக...

 

1. நூரிஷாஹ் கூட்டத்தின் பெருகிவரும் குழப்பங்களும், அதற்கான தீர்வுகளும்,

 

2. தரீக்காக்களில் வஹ்ஹாபிய ஊடுருவல்களும் தீர்வுகளும் எனும் பிரச்சினைகள் பற்றி மஜ்லிஸ் ஒன்றுகூடி தக்க வாத பிரதிவாதங்கள் செய்து ஆய்வின் முடிவில் தீர்மானமாக நிறைவேற்றப்படும் என அழைப்பிதழில் கூறப்பட்டிருந்தது. நாமும் செய்தி சேகரிக்கும் நோக்கோடு திருச்செந்தூர் விரைவு வண்டியில் பயணப்பட்டு காலை 7:00 மணிக்கு ஆஜரானோம்.

 

குளித்து முடித்து தயாராகி ஏற்பாட்டாளர்கள் மூலம் குளம் ரிழ்வான் அவர்கள் வழங்கிய சிற்றுண்டியை உண்டு அவுலியாக்களின் புனிதப் பட்டினமாம் காயல்பட்டினத்தில் அவுலியாக்களின் ஜியாரத்துகளுக்கு ஆஜரானோம். இம்முறை கூடுதலாக நமது மஜ்லிஸின் வாழ்நாள் தலைவராய் இருந்து சிறப்புடன் நடத்திய ஷைகுத் தரீகத் மௌலானா மெளலவி முஹம்மத் அலி எஸ்.எம்.ஹெச்.முஹம்மத் அலி சைபுத்தீன் ரஹ்மானி காதிரி ஸுபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் அழகிய கும்பதுடன் கூடிய தர்காவை ஜியாரத்து செய்தபோது அவர்கள் அடிக்கடி கூறும் சொற்றொடரான நமது அவுலியாக்களின் தர்காக்களில் பூவும் சந்தனமும் மணமாக மணக்க, பச்சைப் போர்வை அழகாக காட்சித்த தர நமது வலிமார்களின் சன்னிதானங்கள் உள்ளும் புறமும் சொர்க்கத்தின் சோலைகளாக காட்சியளிக்கின்றன.

 

அதே வேளையில் வஹ்ஹாபிகளின் கப்ருகள் உள்ளே அஜாபு இருப்பதைப்போலவே முள்ளும் காடுமாக இருக்கிறன என்பார்கள்.

 

ஸலாம் பைத்துகள் ஓதி ஃபாத்திஹா முடித்து தர்காவை விட்டு கீழே இறங்கி வந்த போது காயல்பட்டணத்தில் வஹ்ஹாபிய மத சித்தாந்தங்களுக்கு எந்த வித இடமும் கொடுக்காமல் இறுதிவரை ஸுஃபியாக்களின் சொர்க்க நிழலில் வாழ்ந்து மறைந்த, எல்லோராலும் மஹ்மூது காக்கா என்று அழைக்கப்படுகின்ற அன்னவர்களின் கப்ரையும் ஜியாரத்து செய்து துஆ கேட்டு, முவ்வொளிகள் அடங்கிய காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளிவாசல் ஜியாரத்துகளை முடித்து வளாகத்தை வலம் வந்த போது நமது தர்கா இதழின் தேவ்பந்திய தப்லீக் வஹ்ஹாபிய எதிர்ப்பு பேனர்களும், ஸுஃபியாக்கள், ஷைகுமார்களின் நூரானிய்யத்தான கம்பீர புகைப்படங்களும், வலிமார்களின் தர்கா நிழற்படங்களும், சிறப்பாய் காட்சியளித்தன. 10:30 மணிக்கு மஜ்லிஸ் உலமாயி அஹ்லிஸ் ஸுன்னத்தி வல் ஜமாஅத் கூட்டம் துவங்கியது.

 

மஜ்லிஸின் முதுபெரும் தலைவரும் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவருமான ஷைகுல் ஹதீஸ் மெளலானா மௌலவி கே. என். சையத் நூஹ் முஹ்யித்தீன் ஆலிம் உலவியு உடன்குடி அவர்கள் தமது வயோதிகத்தின் காரணமாக உடல் நிலையை அனுசரித்து மஃரிபுக்குப் பின் நடைபெறும் மஜ்லிஸின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்திருந்தார்கள். அதே போல் மஜ்லிஸின் கொள்கை பரப்புச் செயலாளர் மௌலானா மௌலவி ஹாபிள் முஹம்மத் காஸிம் மஹ்ளரி ரப்பானி கலீஃபயே ஹல்லாஜியா அவர்கள் நாகூர் ஷரீஃபில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலவில்லை என தெரிவித்துவிட்டார்கள்.

 

கூட்டத்தின் துவக்கம்

 

துணைத் தலைவர்களான மௌலவி எம்.எஸ்.ஏ.முஹம்மது அபூபக்கர் ஹம்மாத் மஹ்ளரி ஸுபி காதிரி அவர்களும் மௌலானா மௌலவி தஸ்தகீர் ஹஜ்ரத் அவர்களும், மஜ்லிஸின் உறுப்பினர்களான இன்னபிற உலமாக்கள் முன்னிலை வகிக்க கிராஅத்தும் நபிகீதமும் இனிதே முழங்கப்பட கூட்டம் துவங்கியது.

 

மெளலவி சையத் வஜீஹுன்னகி சக்காப் சாஹெப் அவர்கள் மஜ்லிஸிஸ் 1984ல் ஸ்தாபிதம் செய்யப்பட்ட நோக்கமும் இதுவரை நடத்தப்பட்ட கூட்டங்கள்,  ஃபத்வாக்கள், தீர்மானங்கள் போன்றவற்றை சுருக்கமாகவும் அதே வேளையில் தெளிவாகவும் புரிந்து கொள்ளும்படி விளக்கம் தந்து இன்றைய கூட்டத்தின் முக்கிய நோக்கமான தரீக்காக்களில் வஹ்ஹாபிய ஊடுருவல்களும் குறிப்பாக தமிழகத்தில் நூரிஷாஹ் தரீக்கா தேவ்பந்து வஹ்ஹாபியத்தை ஆதரித்து வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஏற்படுத்திவரும் குழப்பங்களுக்கு தக்க தீர்வு காண வேண்டும் என்ற வரைவு தீர்மானத்தை முன்மொழிந்ததோடு 17.02.1995 ல் தஞ்சையில் மஜ்லிஸ் கூடிய போது நூரிஷாஹ் தரீக்காவைப் பற்றிய சர்ச்சை விவாதிக்கப்பட்ட போது...

 

மெளலானா மௌலவி ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி மட்டும், நூரிஷாஹ் தரீக்காவை வஹ்ஹாபிகளை ஆதரிக்கும் தரீக்கா என்று அறிவிக்கக் கூடாது என்றும் நாம் நேரடியாக லால்பேட்டை சென்று பைஜிஷாஹ்விடம் தெளிவான பதில் பெற்று அறிவிக்கலாம் என்றும் கூறினார்கள்.

அதை செவியுற்ற அனைத்து உலமாக்களும் நிராகரித்ததோடு, அன்றைய பொதுச் செயலாளராக இருந்த மெளலானா மெளலவி ஹாபிள் எப்.எம்.இப்ராஹீம் ரப்பானி பாக்கவி அவர்கள் மிகத் தெளிவாக, நான்! பைஜிஷாஹ் அவர்களிடமே விளக்கமும் கேட்டிருக்கிறேன்...

 

அவர் குஃப்ரு ஃபத்வா வழங்கப்பட்ட மௌலவி அஷ்ரப் அலி தானவியை ரஹ்மதுல்லாஹி அலைஹி என்றும், பன்னூற்கள் எழுதிய மாமேதை என்றும் புகழ்ந்து பேசினார்.

 

தவிர 1986ல் தரீகத் மாநாடு சென்னையில் நடந்தபோது என்னை பேச்சாளராக அழைத்திருந்தார்கள். நான் மேடைக்கும் அழைக்கப்பட்டேன்! மைக் முன் சென்று பேசத் துவங்கும் முன் அறிவிப்பாளராக இருந்த பைஜிஷாஹ் அவர்கள் என் ஜிப்பாவை பிடித்து இழுத்து இஷாரா காட்டி அழைத்து மெளலானா நீங்கள் எதைப் பற்றியும் பேசலாம். ஆனால் அஷ்ரஃப் அலி தானவியைப் பற்றி ஏதும் கூறக் கூடாது என்றார். அதை செவிமடுத்த நான் இது தரீக்கா மாநாடு தானே! நான் அஷ்ரஃப் அலி தானவி வஹ்ஹாபி என்பதைப் பற்றி மட்டுமே பேசுவேன் என்றார். அப்படியானால், உங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டார்கள்.

 

இந்நிகழ்வு, அன்று மேடையில் இருந்த அத்தனை பேர்களுக்கும் நன்றாகத் தெரிந்த ஒன்று. குறிப்பாக தரீக்கா மாநாட்டின் அமைப்பாளரான ஆலி ஜனாப் கனீ சிஷ்த்தி அவர்கள் நன்றாக அறிவார்கள். இதைக் கேட்ட பின்பும் மௌலானா மௌலவி ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் பிடிவாதமாக இருந்த போது, நமது மஜ்லிஸின் அப்போதைய தலைவராக இருந்த மௌலானா மௌலவி அஷ்ஷைகு எஸ்.எம்.ஹெச். முஹம்மத் அலி சைபுத்தீன் ரஹ்மானி காதிரி ஸுபி அவர்கள்....

 

மெளலானா ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களே! தற்போது இந்த சபையின் உலமாக்கள் அனைவரின் ஏகோபித்த கருத்துப்படி நூரிஷாஹ் தேவ்பந்து வஹ்ஹாபிய ஆதரவு தரீக்கா என்ற தீர்மானத்தை நிறைவேற்றிவிடுகின்றோம் மௌலானா நீங்களும், மௌலானா காஸிம் மஹ்ளரி ஹஜ்ரத் அவர்களும் நேரடியாகச் சென்று எழுத்துப்பூர்வமான தேவ்பந்து வஹ்ஹாபிகள் பற்றிய பதிலை சமர்ப்பித்தால் அதன் படி அறிவிப்பு வெளியிடுகின்றோம்! என்று கூறி முடித்தார்கள்.

 

இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்பது வேறு விஷயம்! மறுபடியும் அதே நூரிய்யா தரீக்காவின் குழப்பம் தற்போது திரும்ப முளைத்ததால் மஜ்லிஸில் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களை திரும்ப நினைவூட்டுகின்றோம்.

 

17.02.1995 அன்று மஜ்லிஸ் உலமாயி அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் (தமிழ்நாடு) தீர்மானம் இப்படி மக்களை எச்சரிக்கிறது.

 

தரீக்கா என்னும் போர்வையில் தப்லீக் ஜமாஅத்தினர் செய்யும் துரோக செயல்களை தடுப்பதென்றும், இந்த சூழ்ச்சியிலிருந்து உம்மத்தே முஹம்மதியாவை காப்பதென்றும், காபிர் என தீர்ப்பளிக்கப்பட்ட மௌலவி அஷ்ரஃப் அலி தானவி, ரஷீத் அஹ்மத் கங்கோஹி போன்ற வஹ்ஹாபிகளை ரஹ்மதுல்லாஹி அலைஹி எனக் கூறி தன்னை ஷெய்குமார்களாக சொல்லிக் கொண்டு தரீக்காவாதிகள் போல் திரியும் மெளலவி எம்.ஜே.முஹம்மது கமாலுத்தீன் பாகவி (ஆரணி) அவர்களையும் அவரது கலீபாக்களையும் வழிகேடர்கள்! என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது. மேலும் இத்தகைய ஷைகுமார்களிடம் பெறப்பட்ட பைஅத் செல்லாது என்றும் பைஅத் வாங்கியவர்கள் தமது முரண்பட்ட ஷைகுமார்களை விட்டும் உடனடியாக விலக வேண்டும் என்றும் இச்சபை கேட்டுக்கொள்கிறது.

 

இன்னும் இதே உலமா சபை 08.08.2006ல் நிறைவேற்றிய தீர்மானத்தின் சாரமிது.

 

டில்லி ஹஜ்ரத் நிஜாமுத்தீன் அவுலியா பாரம்பரியத்தைச் சார்ந்த காஜா ஹஸன் நிஜாமி அவர்கள் எழுதிய இஃப்திராகே பைனல் முஸ்லிமீன்கே அஸ்பாப் எனும் நூலில், வஹ்ஹாபிகள் கூட தரீக்காவில் புகுந்து முரீது கொடுக்கிறார்கள், அவர்கள் தான் தேவ்பந்திகள்! என்கிறார்கள்.

 

நூரிஷாஹ் என்பவரும் அவரை சார்ந்து தம்மை கலீஃபாக்கள் என கூறிக் கொள்வோரும் அந்தரங்கமாகவும், சில வேளைகளில் வெளிப்படையாகவும் தேவ்பந்திய தப்லீக் வஹ்ஹாபிய தலைவர்களான அஷ்ரப் அலி தானவி, ரஷீத் அஹ்மத் கங்கோஹி போன்றவர்களை ஆதரிக்கிறார்கள்.

 

ஹகீகதே கிதாபவி வக்புல் இக்லாஸ் இஸ்தான்புல் துருக்கி நாட்டை சேர்ந்த ஹஜ்ரத் ஹுஸைன் ஹில்மி என்பவர் நூரிஷாஹ் தரீகா வழிகெட்டது என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

 

சமஸ்த கேரளா உலமா சபை 30.07.1996 அன்று சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளுக்கு மாற்றமான நூரிஷாஹ் தரீக்காவை விட்டு பொதுமக்கள் ஒதுங்கி இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

அஸ்ராரே கலிமதுத்தய்யிபா என்ற நூலில் நூரிஷாஹ் அஷ்ரப் அலி தானவியை புகழ்ந்து தள்ளுகிறார்.

 

இவையெல்லாவற்றையும் விட நூரிஷாஹ் ஜாமியா இலாஹிய்யாத்தே நூரிய்யா என்ற மதரஸாவை ஹைதரபாத்தில் துவங்கிய போது தேவ்பந்து ஸ்தாபகரின் பேரரான மௌலானா காரி தைய்யிப் சாஹிப் தேவ்பந்தியை வைத்தே திறப்புவிழா நடத்தினார் என்றால் நூரிஷாஹ் தரீக்கா எதை சார்ந்தது என்பது தெளிவாகிறது.

 

பைஜிஷாஹ் 19 ஆண்டுகள் தப்லீகில் சுற்றியதும், தேவ்பந்திகளை மிகப் புகழ்ந்தும் நூருன் நூர் என்ற நூலில் 11வது பக்கத்தில் எழுதியிருப்பதும் வஹ்ஹாபிய அடையாளங்களின் எச்சங்களே!

 

ஆகவே இந்த ஆதாரங்களால் நூரிஷாஹ்விடம் பெற்ற பை அத்தும் - கிலாபத்தும் செல்லாது என மஜ்லிஸ் உலமாயி அஹ்லிஸ் ஸுன்னத்தி வல் ஜமாஅத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 ( தர்கா இதழ் ஜுலை 2009)

 

இந்த செயற்குழு கூட்ட விவாதத்தில் கலந்து கொண்ட உலமாக்களில் மௌலானா மௌலவி முஹம்மத் அலி பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் மேலும் தெளிவான கருத்துகளுக்காக தன்னுடைய விளக்கத்தை முன்வைத்தார்கள். தேவ்பந்து துவங்கப்பட்ட போது வஹ்ஹாபிய ஆதரவு நிலை ஏற்படவில்லை, ஆனால் பிற்காலத்தில் வந்த ரஷீத் அஹ்மத் கங்கோஹியும் அஷ்ரப் அலி தானவியும் வஹ்ஹாபிய கொள்கைகளை ஆதரித்தனர் என்றார்கள்.

 

மௌலவி எம். சையத் அஹ்மத் லத்தீபி எம்.ஏ. தர்கா இதழ் ஆசிரியர் அவர்கள் அதற்கு பதில் உரையாக தேவ்பந்து என்பது ஒரு சிற்றூர் அதில் வாழ்ந்த பொதுமக்களுமே சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் அங்கு வஹ்ஹாபிய சித்தாந்தத்தை விதைத்து முஸ்லிம்களை பிளவுபடுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே காஸிம் நானோத்தவி அனுப்பப்பட்டார். இது ஆங்கிலேயர்களின் டிவைடு அண்டு ரூல் பாலிஸி ஆகும். எனவே தேவ்பந்து மதரஸாவின் முதல் கோணல் முற்றும் கோணல் என்கிற ரீதியில் ஆரம்பம் முதல் வஹ்ஹாபியர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள் என விளக்கமளித்தார்கள்.

 

மெளலானா மெளலவி தஸ்தகீர் ஹஜ்ரத் அவர்கள் தன் கருத்தை முன் வைத்த போது ஆமிர் கலீமி ஷாஹ் அவர்கள் தப்லீக்வாதிகளை வஹ்ஹாபிகள் என்று தான் கூறியிருக்கிறார்களே என்று சொன்னார்கள்.

 

அதற்கு நூரிஷாஹ்வின் கலீஃபாவாகிய ஆமிர் கலீமிஷாஹ் அவர்கள் தப்லீக் வஹ்ஹாபிகளை நிராகரித்திருக்கலாம், ஆனால் தேவ்பந்தின் அஷ்ரஃப் அலி தானவி ரஷீத் அஹ்மத் கங்கேஹி காஸிம் நானோத்தவி, கலீல் அஹ்மத் அம்பேட்வி போன்ற குஃப்ரு ஃபத்வா வழங்கப்பட்ட உலமாக்களில் அஷ்ரஃப் அலி தானவியை ஆதரிப்பது கண்கூடு.

 

அதிலும் உருது தமிழ் முஸ்லிம்கள் என்ற நிலையில் தப்லீகர்களை அவர்கள் நிராகரிப்பதும், பைஜிஷாஹ் 17 ஆண்டுகள் தப்லீகில் புடம்போட்ட தங்கமாக வந்ததும் நூரிஷாஹ் கலீஃபாக்களின் முரண்பட்ட வஹ்ஹாபிய ஆதரவு நிலைகள் அல்லவா? என்று முஹம்மத் ஷரீஃப் ஸுபி காதிரி அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.

 

எனவே நூரிஷாஹ் கலீஃபாக்களின் ஆமிர் கலீமி ஷாஹ், பைஜி ஷாஹ், ஜுஹுரி ஷாஹ், கிலீ ஷாஹ். கதீரி ஷாஹ், நிஜாமி ஷாஹ் இன்னும் அவர்களைத் தொடர்ந்த பிலாலி ஷாஹ், அன்வாரி ஷாஹ் அனைத்து கலீஃபாக்களும் தரீக்காவும் தேவ்பந்து அஷ்ரப் அலி தானவி வஹ்ஹாபிய குட்டையில் ஊறிய மட்டைகளே! என்பது தெளிவாகிறது.

 

மௌலானா மௌலவி தாஜுத்தீன் அஹ்ஸனி ஹஜ்ரத் அவர்கள் கூறும் போது குஃப்ரு பத்வா வழங்கப்பட்டதில் நமக்கு கருத்து பேதம் உள்ளது என்று சொன்னபோது இந்த மஜ்லிஸ் உலமாயி அஹ்லே ஸுன்னத் வல் ஜமாஅத் ஷைகுமார்கள் சங்கை நிறைந்த உலமா பெருமக்களால் நிறுவப்பட்டபோதே அஃளா ஹஜ்ரத் அஜீமுல் பரக்கத் அவர்களின் தலைமையின் கீழ் பரேல்வி, பதாயூன், ஃபரங்கிமஹில், சூரத், ஹைதராபாத், மதராஸ் மாகாணம், குஜ்ரான்வாலா, ஒருங்கிணைந்த இந்தியாவின் உலமா பெருமக்கள் அரபு தேசத்து உலமாகள் என அத்தனை பேர்களும், தேவ்பந்து வஹ்ஹாபிகளான குறிப்பிட்ட உலமாக்கள் மீது குஃப்ரு பத்வா வழங்கியுள்ளதை ஏற்றுக் கொண்டவர்கள்கள் தான். தமிழக ஜமாஅத்துல் உலமா தேவ்பந்து வஹ்ஹாபிகளை ஆதரித்ததால் தான் இந்த மஜ்லிஸ் உலமா குப்ரு பத்வா வழங்கப்பட்டது சரிதான் என்று ஆதரவு தெரிவித்த உலமாக்களை மட்டும் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது.

 

தற்போது புதிதாக... நூரிஷாஹ் தரீக்கா வஹ்ஹா பிய தரீக்கா அல்ல என்று முழு பூசணிச்காயை சோற்றில் வைத்து புதைக்கும் முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பித்னா ஃபஸாது குழப்பத்தை மக்களுக்கு எடுத்துக் காட்டிட நூரிஷாஹ் தரீக்கா தேவ்பந்து வஹ்ஹாபிகளின் ஆதரவு தரீக்கா தான் என்பதற்கு பழைய தீர்மானங்களுக்கு மேலும் வலுவான ஆதாரத்தைச் சேர்க்கும் விதமாக, நூரிஷாஹ்வால் ஹைதரப்பாத்தில் நிறுவப்பட்ட ஜாமிஆ இலாஹியாத்தே நூரிய்யா மதரஸாவின் கல்வெட்டில் தாருல் உலூம் காஸிமிய்யா - தேவ்பந்து வஹ்ஹாபிய மதரஸாவின் ஸ்தாபகரும், குஃப்ரு பத்வா வழங்கப்பட்டவருமான மௌலவி காஸிம் நானோத்தவி யின் பேரரான மௌலவி காரி தையப் தேவ்பந்தியை அழைத்துத் தான் மதரஸாவை திறந்து வைக்கப்பட்டுள்ள ஆதாரம் கிடைத்துள்ளது. அதை நேரில் சென்று பார்த்தவர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதும் பேனாராக உலமாக்களுக்கு காண்பிக்கப்பட்டது.

 

ஆகவே இந்த கருத்து பரிமாற்றங்களுக்குப் பின் ஏகமனதாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தீர்மானங்கள்

 

1. புனித ஹரமைனுஷ் ஷரீஃபைன் மற்றும் இந்தியாவின் உலமா பெருமக்களால் குஃப்ரு ஃபத்வா வழங்கப்பட்ட வழிகேடர்களான

 

1.      குலாம் அஹ்மத் காதியானி

2.      காஸிம் நானோத்தவி

3.      கலீல் அஹ்மத் அம்பேட்வி

4.      அஷ்ரஃப் அலி தானவி

5.ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆகியோர்களும் அவர்களைப் பின்பற்றுவோரும் காஃபிர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

 

2. நூரி ஷா ஹைதராபாத்தில், ஜாமிஆ இலாஹியாத்தே நூரியா என்ற மதரஸாவை, வழிகெட்ட தேவ்பந்து வஹ்ஹாபி மதரஸாவை ஸ்தாபித்த காஸிம் நானோத்தவியின் பேரரான மௌலவி காரி தையப் காஸிமியை வைத்து நடத்திய திறப்பு விழா கல்வெட்டு ஆதாரம் (பார்க்க தர்கா இதழ் ஜனவரி 2021) கிடைத்துள்ளபடியாலும், நூரிஷா மதரஸாவின் பைலாவில் மதரஸாவை தொடர்ந்து நடத்தமுடியாமல் போனால் தேவ்பந்து அதை தத்தெடுத்துக்கொள்ளும் என்னும் ஷரத்து உள்ளது என்ற செய்தி தெரியவந்திருப்ப தாலும் ஹைதராபாத் நூரிஷா தரீகாவினருக்கும், வழிகேடர்களான தேவ்பந்து வஹ்ஹாபிய முல்லாக்களுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சமாகியுள்ள படியாலும், மேலும் நூரிஷா தரீக்காவின் கொள்கை கோட்பாடுகள் ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதா கொள்கைகளுக்கு மாறுபட்டு இருப்பது தெரிய வந்திருப்பதாலும் நூரிஷா தரீகாவும் வழிகேடு என்பது நிரூபணமாகிறது.

 

3. மேற்கண்ட வழிகேடர்கள் வழிவரும், அல்லது அவர்களை பின்பற்றும் அல்லது அவர்களை பரிந்து பேசும், இயக்கங்கள், அமைப்புகள், மற்றும் நூரிஷா மற்றும் அதன் கிளை தரீகாவினர் மற்றும் அவர்களை ஆதரித்து தங்களை சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் என கூறிக்கொள்ளும் நபர்களை விட்டும் இஸ்லாமிய அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் பொதுமக்கள் விலகி இருக்க வேண்டும்.

 

4. ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதா அடியொற்றி வாழ்ந்து காட்டி வழிநடத்திய வலிமார்கள், நாதாக்களின் தர்காக்கள், தைக்கால்கள், ஆஸ்தானாக்களில் சுன்னத் வல் ஜமாஅத் வழிமுறைகளான மீலாது, மௌலிது, உருஸ், கந்தூரி விழாக்கள் கொண்டாடுவது, ஃபாத்திஹா ஓதுவது, திக்ரு மஜ்லிஸ் நடத்துவது, நஅதே ஷரீஃப் என்னும் நபி கீதம் படிப்பது என தரீக்கா வேடம் தரித்து உள்ளே நுழைய முற்படும் ஆரணி கமாலுத்தீன் மற்றும் தேவ்பந்திய தரீக்காவினர் மற்றும் நூரிஷா மற்றும் அதன் கிளை தரீக்காவினரிடமிருந்தும் கவனமாக இருக்கும் படியும் முத்தவல்லிகள், ஹக்தார்கள், மக்கான்தார்கள், சாபுமார்கள், தைக்கால் நிர்வாகிகள், லெப்பைமார்களை இச்சபை வேண்டுகோள் விடுக்கிறது.

 

5. தமிழக ஜமாஅத்துல் உலமாவில், குஃப்ரு பத்வா வழங்கப்பட்ட தேவ்பந்திய தப்லீக் வஹ்ஹாபிய தலைவர்களை ஆதரிக்கும் பலர் ஊடுருவிட்ட காரணத்தினால் தான் ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதா உலமாக்களால் மஜ்லிஸ் உலமாயி அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் துவக்கப்பட்டது. எனவே இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்ற உறுதியான

 

நிலைப்பாட்டுடன் மஜ்லிஸின் ஆரம்ப நோக்கத்தை கருத்தில் கொண்டு தேவ்பந்திய வஹ்ஹாபிய வழிகேடர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தமிழக ஜமாஅத்துல் உலமா மற்றும் இன்ன பிற வஹ்ஹாபிய அமைப்புகளைவிட்டும் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் தங்களை விடுவித்துக் கொள்ளும்படி இச்சபை கேட்டுக்கொள்கிறது.

 

மேற்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின் மினிட் புத்தகத்தில் கையொப்பமிட்ட சில உலமா

 

பெருமக்களின் பெயர்கள்...

1.எம்.ஏ.எஸ்,அபூபக்கர் ஹம்மாத் ஹஜ்ரத்,

2. ஸெய்யிது அப்துர் ரஹ்மான் பாக்கவி தங்கள் ஹஜ்ரத்,

3. ஏ.நாகூர் மீரான் பாஜில் பாக்கவி ஹஜ்ரத்,

4. எம். சையத் ரியாஸுத்தீன் ஹஜ்ரத்,

5.கே.எம்.ஏ.உமர் ஃபாரூக் அஃழம் ஹஜ்ரத்,

6. முஹம்மது அன்வரி ஹஜ்ரத்,

7.ஷுஐபு ரஹ்மான் அஹ்ஸனி ஹஜ்ரத்,

8.முஹம்மத் இம்ரான் அஹ்ஸனி ஹஜ்ரத்,

9.ஏ.முஹம்மத் அஸாருத்தீன் மஹ்ளரி ஹஜ்ரத்,

10.எம்.இஸட். முஹம்மது அப்துல் காதிர் மஸ்லஹி ஹஜ்ரத்.

11.எம். நிஜாமுத்தீன் ஃபாஜில் அஹ்ஸனி ஹஜ்ரத்,

12.எம்.கே.திஹ்யத்துல் கல்பி ஜமால் மன்பயீ ஹஜ்ரத்

,13.ஏ.முஹம்மது சுல்தான் மிஸ்பாஹி ஹஜ்ரத்,

14.கத்தீப் ஏ.பி.மக்தூம் முஹம்மது மஹ்ளரி ஹஜ்ரத்,

15.எஸ். எம். முஹம்மது ஹம்ஜா ஸமதானி ஹஜ்ரத்,

16.எம். ஏ. காஜா முகைதீன் கௌஸி ஹஜ்ரத்,

17.எஸ்.முஹம்மத் அலி நூரி ஹஜ்ரத்,

18.கே.ஏ.ஜாஸிர் மஹ்ளரி ஹஜ்ரத்,

19.கே.முஹம்மது இப்ராஹீம் ஸுபி ஹஜ்ரத்,

20.ஏ.தாஜுத்தீன் ஜமாலிஹஜ்ரத்,

21.எம்.எஸ்.இ. முஹம்மத் அலி பாக்கவி ஹஜ்ரத்,

22.எல்.முஹம்மத் ஷரீஃப் ஸுஃபி ஹஜ்ரத்,

23.ஏ.எம்.ஏ.மன்ஸுர் ஆலிம் கௌஸி ஹஜ்ரத்

24. காஜா ஆரிஃப் பில்லாஹ் ரப்பானி ஹஜ்ரத்

25. ஜே. ஷாஜஹான் கௌஸி ஹஜ்ரத்,

26. எம். ஐ. அப்துர் ரஹீம் உலவிய்யு ஹஜ்ரத்.

 

மஜ்லிஸில் கலந்து கொண்ட ஸுன்னத் வல் ஜமாஅத் பொதுமக்களின் சில பெயர்கள்...

1. சையத் மத்தீன் அஹ்மத் சக்காப் தஅஜீம் தரக் காதிரி ஷீத்தாரி,

2. சையத் கலீமுல்லாஹ் ஷாஹ் சிஷ்த்தியுல் காதிரி,

3.முஹம்மத் உஸ்மான் மோத்தி சேட் காதிரி ரப்பானி,

4.அப்துல் அஜீஸ் உருது முன்ஷி,

5.ஐ.மொய்தீன்,

6. கே. முஹம்மது சுல்தான் ரப்பானி,

7. எம். சையத் ஜைனுத்தீன் ஹக்கானி சக்காப்,

8.வெ.மக்தூம் அப்துல் காதர்,

9.பி. காதர் சுலைமான்,

10.எம்.எஸ்.மஹ்மூத் ரஜ்வி.

11. எஸ்.எம்.ஷாஹுல் ஹமீத்,

12.கே.ஏ.எம்.உத்மான்,

 13. எஸ். எம்.பி.மஹ்மூத் தீபி,

14.எம்.எம்.எஸ். ஷேக்,

15. எம். கே. மஹ்மூத் ஹஸன்,

16. எம்.ஏ.கிள்று முஹம்மத்,

17. எஸ்.டி. மஹ்மூத்,

18. குளம் ஜமால்,

19.குளம் ரிழ்வான்,

20.எம்.ஹெச்.பயாஸ் முஹம்மத் புஹாரி,

21. ஷேக் ஃபரீதுத்தீன்,

 22. ஹிமாயத் கான்,

23.எல்.எஸ்.ஐ. அப்துல் காதர்,

24. எல். எஸ். ஐ. சாகுல் ஹமீத்,

25.கே.எம். என்.முஹம்மது உமர்,

 26. குளம் காதர்.

 

மஜ்லிஸ் கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளியின் முத்தவல்லி சாளை எம்.ஏ.சுல்தான் சலாஹுத்தீன் செயலாளர் எம்.டி. முத்து முஹம்மது, எம்.டி. அபுசாலிஹ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட உள்ளூர் வெளியூர் உலமாக்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

 

மஜ்லிஸின் துணைத் தலைவரான எம்.ஏ.எஸ்,அபூபக்கர் ஹம்மாத் ஹஜ்ரத் அவர்கள், அல் ஆரிபு பில்லாஹ் அல் முஹிப்புர் ரஸுல் அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் முஹம்மத் அலி சைபுத்தீன் ஹஜ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் நினைவு மலரை அனைவருக்கும் வழங்கினார்கள்.

 

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீது ஸலாம் பைத்து ஓதி சங்கை மிகு நபிகளாரின் பரம்பரையில் வந்த காயல்பட்டிணம் மஹ்ளராவின் உஸ்தாதான ஸெய்யித் அப்துர் ரஹ்மான் தங்கள் அவர்களின் துஆவுடன் மஜ்லிஸ் இனிதே நிறைவுற்றது.

 

மதியம் லுஹர் தொழுகைக்குப் பின் மஜ்லிஸின் தலைவராக இருந்து மறைந்த மௌலானா மௌலவி அஷ்ஷைக் எஸ். எம்.ஹெச். முஹம்மத் அலி சைபுத்தீன் ரஹ்மானி ஸுபி, காதிரி அன்னவர்களின் உருஸ் தினமான அன்று அன்னவர்களின் கலீஃபாவும் மகனாருமான மெளலவி அஷ்ஷைகு எஸ்.எம்.ஹெச் முஹம்மது அபூபக்கர் ஹம்மாது மஹ்ளரி ஸுஃபி காதிரி அவர்களின் இல்லத்தில் கந்தூரி விழாவிற்காக கேரளம் மற்றும் தமிழகத்தின் சென்னை, தஞ்சை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, என பல மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஸூபி ஹஜ்ரத் அவர்களின் முரீது பிள்ளைகளுக்கும், மஜ்லிஸ் உலமா கூட்டத்தில் கலந்து கொண்ட ஆலிம்கள் முக்கியஸ்தர்களுக்கும் வெகு சிறப்பான கந்தூரி சஹன் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

அதனைத் தொடர்ந்து மாலை அஸருக்குப் பின் அன்னவர்களின் தர்கா ஷரீஃபில், மஜாரே ஷரீஃபிற்கு சந்தனம் பூசி, புனித போர்வை போர்த்தி, மலர்அலங்காரம் செய்து அவர்களின் முரீதும், கலீஃபாவுமான மவ்லானா மவ்லவி அஷ் ஷைகு நாகூர் மீரான் சூபி காதிரி ஹஜ்ரத் அவர்கள் ஃபாத்திஹா துஆ ஓதி கலந்து கொண்ட அனைவருக்கும் தபர்ருக் வழங்கப்பட்டது.

 

தொடர்ந்து மேற்படி கலீஃபாக்களின் தலைமையில் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் மவ்லிது மஜ்லிஸ் நடந்த பின் கந்தூரி நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன.

 

அத்தோடு அன்று காலை பஜ்ருக்குப் பின் குர்ஆன் ஷரீஃப் கத்தம் ஓதும் நிகழ்ச்சியும், அதற்கு முன் சனி இரவு பின்நேரம் ராத்திபு மஜ்லிஸும் வெகு சிறப்பாக நடந்து முடிந்திருந்தன. அனைத்து நிகழ்வுகளிலும் முரீது பிள்ளைகளும், காயல் மாநகர மக்களும் வெகு ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

கொள்கை விளக்க பொதுக் கூட்டம்

 

மஜ்லிஸ் உலமா சபையின் அடுத்த நிகழ்வாக அஹ்லே ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதா கொள்கை விளக்கவுரை பொதுக்கூட்டம் காயல் குத்துக்கல் தெருவில் அமைந்துள்ள, மகான் தைக்கா ஷெய்கு முஹம்மது சாலிஹ் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு நினைவு அரங்கம் முஹ்யித்தீன் பள்ளி வளாகத்தில் மக்ரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்றது.

 

மெளலானா மௌலவி கே.என். சையத் நூஹ் முஹ்யித்தீன் ஆலிம் மஹ்ளரி- தலைவர் மஜ்லிஸ் உலமாயி அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் அவர்கள் தன் விளக்கவுரையில் ஹஃப்து மஸ்அலா என்னும் இந்த நூல் வழிகெட்ட தப்லீக் தலைவர்களுக்கு எதிராக எழுதப்பட்டது. ஹஃப்து மஸ்அலா என்பதன் அர்த்தம் ஏழு மஸாயில்கள் என்பதாகும். ஃபாத்திஹா ஓதுதல், மீலாது கொண்டாடுதல், உருஸ் கவ்வாலி, இன்னபிற சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளில் முரண்பட்ட வழிகெட்ட தேவ்பந்திகளான காஸிம் நானோத்தவி, ரஷீத் அஹ்மத் கங்கோஹி, அஷ்ரப் அலி தானவி போன்றோரை எச்சரிக்கும் முகமாக அல்லாமா இம்தாதுல்லாஹ் முஹாஜிரே மக்கி அவர்களால் எழுதப்பட்டது தான் இந்த நூல். அப்படிப்பட்ட புத்தகத்தை எரிக்கச் சொல்லியது அஷ்ரஃப் அலி தானவி தான்! என்பது வரலாறு. ஆனால், அருகில் இருந்து அதை எழுதியது அஷ்ரஃப் அலி தானவி என்று சொல்வதும், அதை தமிழ்படுத்தி வெளியிடும் நூரிஷாவின் அடிவருடிகள் நடுநிலை பேணுவீர் என அந்த நூலுக்கு தவறான தலைப்பை வைத்து வெளியிடுவதும் இவர்கள் பொய்யர்கள், வரலாற்று திரிபுகளை செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது! என விளக்கமாக தன் உரையை முன்வைத்தார்கள்.

 

அடுத்து உரை நிகழ்த்திய மஜ்லிஸின் செயலாளரான மௌலானா மெளலவி சையத் ஷாஹ் வஜீஹுன்னக்கி சக்காப் ஹஜ்ரத் அவர்கள் தரீகத் என்றால் என்ன அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத் பார்வையில் இன்றைய தரீக்காக்கள் என விளக்கமாக உரையாற்றும் போது தேவ்பந்து தரீக்கா வஹ்ஹாபிகள் சிஷ்திய்யா ஸில்ஸிலாவில் உட்புகுந்து மக்களை எவ்வாறு வழிகெடுக்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்கினார்கள்.

 

பின் குறிப்பு :

 

மஜ்லிஸ் உலமாயி அஹ்லிஸ் ஸுன்னத்தி வல் ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்குழு கூட்டத்தின் நிகழ்வுகளை கேபிள் மற்றும் இணைய தளம் வழியாக ஒளிபரப்ப முஹ்யத்தீன் டிவி நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.


இதற்கு மேல் வரும் விஷையங்கள் அனைத்தும் தீர்மானத்தில் இல்லாதது


முக்கிய குறிப்பு:- 


இதில் என்பவர் 18.கே.ஏ.ஜாஸிர் மஹ்ளரி இப்பொழுது சந்தேக கண் கொண்டு பார்க்க வேண்டிய நபராக பார்க்கப்படுகிறார்


ஏனெனில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் நகலையும் அவர் பெற்றிருக்கிறார்..


இத்துனை காலம் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்துவிட்டு 


தீர்மானம் வெளியே பரவ துவங்கியதும் பிறழ் சாட்சியாக பேசுவது சந்தேக கண் கொண்டு பார்க்க வேண்டியது அவசியமாகும். மேலும் இவரை வைத்து சதிகள் ஏதும் பின்னப்படுகிறதா என்றும் யோசிக்க தோன்றுகிறது.


இது போக அவர்களும் தன் பங்கிற்கு ஒரு செய்தியை What's app தளங்களில் பதிவிட்டார் அது பின் வருமாறு 



இந்நிலையில் அவர்களையும் சந்தேக கண் கொண்டு பார்க்க நேரிடும்

தேவ் மத்திய வஹ்ஹாபிய தப்லீக் ஜமாஅத் நூரிஷாக்களின் முன்னோடிகள்  காஃபிர் என்ற விஷயத்தில் மட்டுமே மாறுபடுகிறார் இதை அவரே சில வருடங்களுக்கு முன் ஒரு வாட்ஸ் அப் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார் அதையும் பாருங்கள்








அல்லாஹ் ﷻ வே அனைத்தையும் அறிந்தவன்






Comments

Popular posts from this blog

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் 136 பக்கத

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். Download  Pdf 1. புனித ஹரமைனுஷ் ஷரீஃபைன் மற்றும் இந்தியாவின் உலமா பெருமக்களால் குஃப்ரு ஃபத்வா வழங்கப்பட்ட வழிகேடர்களான 1.குலாம் அஹ்மத் காதியானி 2.காஸிம் நானோத்தவி 3.கலீல் அஹ்மத் அம்பேட்வி 4.அஷ்ரஃப் அலி தானவி 5.ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆகியோர்களும் அவர்களைப் பின்பற்றுவோரும் காஃபிர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 2. நூரி ஷாஹைதராபாத்தில் ஜாமிஆ இலாஹியாத்தே நூரியா என்ற மதரஸாவை, வழிகெட்ட தேவ்பந்து வஹ்ஹாபி மதரஸாவை ஸ்தாபித்த காஸிம் நானோத்தவியின் பேரரான மௌலவி காரி தையப் காஸிமியை வைத்து நடத்திய திறப்பு விழா கல்வெட்டு ஆதாரம் (பார்க்க தர்கா இதழ் ஜனவரி - 2021) கிடைத்துள்ள படியாலும், நூரிஷா மதரஸாவின் பைலாவில் மதரஸாவை தொடர்ந்து நடத்தமுடியாமல் போனால் தேவ்பந்து அதை தத்தெடுத்துக் கொள்ளும் என்னும் ஷரத்து உள்ளது என்ற செய்தி தெரியவந்திருப்பதாலும் ஹைதராபாத் நூரிஷா தரீகாவினருக்கும், வழிகேடர்களான தேவ்பந்து வஹ்ஹாபிய முல்லாக்களுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சமாகியுள்ள படியாலும், மேலும் நூரிஷா தரீக்காவின்