Skip to main content

ஹைதராபாத்தைச் சேர்ந்த நூரிஷாஹ்வைப் பற்றியும், அவருடைய தரீகாவைப் பற்றியும்

ஹைதராபாத்தைச் சேர்ந்த நூரிஷாஹ்வைப் பற்றியும், அவருடைய தரீகாவைப் பற்றியும்

நாகப்பட்டிணம் நஸீஹத்துல் இஸ்லாமிய சங்கத்தினர் கேட்ட கேள்விகளுக்கு கேரளாவைச் சேர்ந்த " ஜன்னத்துல் உலூம் " அரபிக் கல்லூரியின் முதல்வர் E.K. ஹஸன் முஸ்லியார் (பாக்கவி) அவர்கள் அளித்த


இந்த விளக்கவுரையை ஆடியோவாக கேட்க

👇👇👇
👆👆👆

விளக்கவுரை.

நூரிய்யா தரீக்காவைச் சேர்ந்தோர் செய்து வருகின்ற சில செயல்களைப் பற்றி பதில்கள் கேட்டு அனுப்பிய தங்களுடைய கடிதம் கிடைத்தது.

பதில்கள் பின்வருமாறு :

நூரிஷாஹ் என்ற பெயர் கொண்ட மனிதர் ஆரம்பத்தில் தான் 'காதிரியா' 'சிஷ்திய்யா' தரீகாவிற்கு ஒரு ஷைகு என்பதாகக் கூறிக் கொண்டு கேரளாவில் நுழைந்தார். பொதுமக்களும் சில உலமாக்களும் அவரை அங்கீகரித்தனர். மக்கள் மனதில் நல்ல மதிப்பை பெற்ற பின்னர் 'தரீக்கத்தே நூரீஷாஹ்' என்ற ஒரு தரீக்காவிற்கு தான் தனியொரு ஷைகு என்பதாக தாவாச் செய்தார். தம்மை பின்பற்றிய சீடர்களுக்குப் பற்பல தவறான கருத்துக்களை போதித்தார். அவை அல்லாஹ்வுடைய வாக்கு என்றும், தான் அல்லாஹ்வுடைய தானமென் றும், அல்லாஹ்வுடைய காலம் என்றும், அவனுடைய தூதரின் 'நிழ லென்றும் வாதிட்டார். 

இப்படிப்பட்ட தவறான கொள்கைகளை அவர் கொண்டிருந்ததுடன் மார்க்க அறிஞர்களையும் நிந்தனை செய்தார். சமஸ்த கேரள ஜம்இய்யத்துல் உலமா சபை யின் ஆலிம்கள் இவருடைய தீமைகளை அறிந்ததும், இவர் விஷயமாக கலந்து ஆலோசித்தனர். இறுதியில் இந்த தரீகாவானது வழி கேடானதும், சத்தியப் பாதையை விட்டு நீங்கியதுமாகும் எனத்தீர்ப்பளித்தனர் பின்னர் சமஸ்தகேரள ஜம்இய்யத்துல் உலமா சபையின் உலமாக்கள் இந்த ஷைகையும், இந்த தரீக்காவினரையும்' விவாதத்திற்கு அழைத்தனர் அதற்கு அவர்கள் முன் வராததால் கேரளாவை விட்டு அவர்களை விரட்டி விட்டனர்.

உண்மை என்னவென்றால் இந்த தரீக்காவானது மார்க்கத்திற்குப் புறம்பானதும், அதனுடைய அந்தரங்கம் குஃப்ரின்பால் சேர்ந்ததுமாகும். (அதிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவானாக!)

விடைகள்:

முதலாவது:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருநாமங்களான 'முஹம்மத்' 'அஹ்மத்' என்பனவற்றை திக்ரு செய்வது, மார்க்கத்திற்கு முரண்பட்ட சில சூஃபிய்யாக்கள் பித்அத்தாக (புதியதாக) உண்டாக்கிக் கொண்ட செயலாகும். அது பழிப்பிற்குரிய தீமை யாகும். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரியாதையைக் குறைப்பதாகும். காளீ இயாள் ரஹிமஹுல்லாஹ்  அவர்கள் எழுதிய ஷரஹ் ஷிபா என்ற நூலில் இமாம் புல்கைனீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கின்றனர். மேலும் அல்லாஹ் அல்லாஹ் என்று திக்ரு செய்வதற்கும் முஹம்மத் முஹம்மத் என திக்ரு செய்வதற்கும் உள்ள வேற்றுமையைக் கூறி, அல்லாஹ் அல்லாஹ் என திக்ரு செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்றும் முஹம்மத் முஹம்மத் என திக்ரு செய்வது தடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்கள். ஆகவே, அல்லாஹ் அல்லாஹ் என்று திக்ரு செய்வதற்கு இதனை ஒப்பிடலாகாது.

இரண்டாவது:

நல்லோர் சாலிஹானவர்களின் கை,கால்களைமுத்தமிடுதல் அனுமதிக்கப்பட்டதும் விரும்பத்தக்கதுமாகும். ஆனால், முத்தமிடப்படுபவர் அதனைப் பொருந்திக் கொள்ளுவதோ, தூண்டிவிடுவதோ கூடாது, என்பது நிபந்தனையாகும். ஆனால், நூரிய்யா தரீக்கா விலும் அதனுடை ஷைகு நூரிஷாஹ்விடத்திலும் இருக்கின்ற தன்மை மாகிறது. பழிப்பிற்குரியதும் ஹராமானதுமாகும். தன்னுடைய கால்களை முத்தமிடவும் கண்ணியப்படுத்தவும், அதனை சூப்புவதற்கும் நீட்டித்தருகிறார். அதனைச் செய்யத் தூண்டுகிறார். அதனைப் பொருந்திக் கொள்ளவும் செய்கிறார். ஏனெனில், அவர் தன்னுடைய கால்களை முத்தமிடுவதற்கும், கண்ணியபடுத்துவதற்கும், சூப்புவதற்கும் நீட்டிதருகிறார்.அதை செய்ய தூண்டுகிறார்,அதை பொருந்திகொள்கிறார்.      

மூன்றாவது: 

போட்டோ எடுப்பது எவ்வகையிலும் கூடாத ஹராமான செயலாகும். அதுபெரும் பாவமாகும். அதனைச் செய்பவர்கள் சாபத்திற்குரியவர்களென ஆதாரப்பூர்வமான ஹதீஸ் வந்துள்ளது. 

நான்காவது:

 இவ்வாறே இசையுடனுள்ள பாடல்களும் கூடாததாகும். திருக்குர்ஆனை அல்லது திக்ரை அவ்வாறு இசையுடன்ஓதினாலும், கூடாததாகும். ஆனால் இந்த (நூரீஷாஹ்வுடைய) தரீக்காவைச் சேர்ந்தவர்களிடம் அவர்களின் ஷைகுடைய போட்டோ கண்ணியப் படுத்தப்படுகிறது. இவ்வாறு போட்டோவை கண்ணியப்படுத்துவது கருத்து வேற்றுமையின்றி ஹராமானதாகும். இத்தகைய உருவங்கள் வரைபவர்களை அல்லாஹ் சபிப்பானாக!

ஐந்தாவது: 


ஒரு ஆண் அந்நியப் பெண்ணையோ ஒரு பெண் அந்நிய ஆணையோ பார்ப்பது கூடாத செயலாகும். அது இச்சையைத் தூண்டாவிட்டாலும் சரி, தீமையின் பயம் இல்லையானாலும் சரி கூடாததாகும். ஆனால், சில சமயங்களில் சில சட்டங்களில் தவிர அந்த சட்டங்களை உலமாக்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர். ஆனால் நூரீஷாஹ் விஷயமாக நீங்கள் கேட்டிருப்பது அனுமதிக்கப்பட்ட பிரச்சினைகளில் உள்ளதல்ல எனினும், ஷைகும் அவருடைய கலீபாக்களும் பெண் களுடன் (நேரடியாகப்) பேசுவது தீமைகளைத் தூண்டி விடுவதாகவே இருக்கிறது. மேலும் இவர்கள் (நூரீஷாஹ் குழுவினர்) வெறும் பேச்சுடன் நிறுத்திக் கொள்வதில்லை. அப்பெண்கள் ஷைகுடைய கால்களையும் கலீபாக்களுடைய கால்களையும் பிடித்து விடுகின்றனர். இவை அனைத்தும் சந்தேகமின்றி ஹராமானவையாகும்.

ஆறாவது: 

ஆண்கள் போன்று பெண்களுக்கும் பைஅத் இருக்கிறது. ஆனால், திரைக்குப் பின்னாலிருந்து பேச்சின் மூலமே அதனைச் செய்ய வேண்டும். சிறப்பிற்குரிய ஹதீஸில் இவ்வாறே வந்துள்ளது இதுவும் அந்த ஷைகு நல்லவராக (ஸாலிஹானவராக) இருந்தால் தான் நீங்கள் கேட்டுள்ளவரைப் போன்று (நூரீஷாஹ்வைப் போன்று) மோசக் காரராக இருந்தால் அதுவும் கூடாது.



எச்சரிக்கை.



எவர் தன்னை ஷைகு என்று தாவா செய்து கொண்டு மேற்கூறிய செயல்களைச் செய்கின்றாரோ அவர் முழுப் பொய்யராவார். குழப்பத்திற்கும், மனோ இச்சைக்கும் அவர் ஷைகாவார். அவரைவிட்டு நீங்கு வதும், முஸ்லிம்களை விட்டு அவர்களை விரட்டுவதும் வாஜிப் எனும் கடமையாகும். அல்லாஹ் நல்லுதவி செய்வானாக!

(ஒப்பம்)

E.K.ஹஸன் உபிய அன்ஹு.

Kerala

1-3-77.

அச்சிட்டு வெளியிடுபவர்:

ஹாஜி. M. அப்துல்ஹகீம் ஸாஹிப்,

ஆயங்குடி, 15-5-77.

நேஷனல் பவர் பிரஸ்,

காட்டுமன்னார்குடி

Comments

Popular posts from this blog

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல்

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல் https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post.html மௌலவி  சதீதுத்தீன்  பாகவி , அவர்களுக்கு, மௌலவி, பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி,  எழுதும்  பகிரங்க மடல் தப்லீக் ஜமாஅத் பற்றி  நீங்கள்  பேசிய ஒரு பதிவை  வட்சொப்  தளங்களில்  நான் கேட்டேன். அதில்., இஸ்மாயீல் திஹ்லவி  பற்றியும், அவரது தக்வியத்துல் ஈமான் என்ற நூல் பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளீர்கள். இப்பேச்சு  செவிவழிச்  செய்தியாக இல்லாமல் அறிவுபூர்வமானது  என்பதை," தக்வியத்துல் ஈமான்  என்ற  நூல், தன்னிடமிருப்பதையும், அதை நீங்கள் படித்ததையும் உரையில் குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. உங்களின்  இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள்   தேவ்பந்து  கொள்கையைச் சார்ந்தவர்   என்று உங்களை  விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். மௌலவி, அவர்களே! நீங்கள் படித்த  தக்வியத்து  ஈமான்  என்ற  நூல் தமிழில், "ஏகத்துவமும், இணைவைத்தலும் ."   என்ற பெயரில் 'அப்துல்ஹமீது  ஆமிர...

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்...