அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல் https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post.html மௌலவி சதீதுத்தீன் பாகவி , அவர்களுக்கு, மௌலவி, பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி, எழுதும் பகிரங்க மடல் தப்லீக் ஜமாஅத் பற்றி நீங்கள் பேசிய ஒரு பதிவை வட்சொப் தளங்களில் நான் கேட்டேன். அதில்., இஸ்மாயீல் திஹ்லவி பற்றியும், அவரது தக்வியத்துல் ஈமான் என்ற நூல் பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளீர்கள். இப்பேச்சு செவிவழிச் செய்தியாக இல்லாமல் அறிவுபூர்வமானது என்பதை," தக்வியத்துல் ஈமான் என்ற நூல், தன்னிடமிருப்பதையும், அதை நீங்கள் படித்ததையும் உரையில் குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. உங்களின் இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள் தேவ்பந்து கொள்கையைச் சார்ந்தவர் என்று உங்களை விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். மௌலவி, அவர்களே! நீங்கள் படித்த தக்வியத்து ஈமான் என்ற நூல் தமிழில், "ஏகத்துவமும், இணைவைத்தலும் ." என்ற பெயரில் 'அப்துல்ஹமீது ஆமிர...