Skip to main content

ஜமாஅத்துல் உலமா தலைவர் அவர்களே மௌனம் கலைப்பீர்களா ?

தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா தலைவர்  PA காஜா முஈனுதீன் பாக்கவி  அவர்களுக்கு

வருகின்ற ஜனவரி மாதம் திருச்சியில் மௌலானா முஹம்மது சஃது சாஹிப் காந்தலாவி அவர்கள் தலைமையில் தப்லீக் இஜ்திமா நடக்கவிருக்கிறது...

இந்த இஜ்திமாவில் கலந்து கொள்வது கூடுமா ? அவ்வாறு கலந்து கொள்வது ஷரியத்திற்கு உட்பட்ட செயல் ஆகுமா ?

ஹஜ்ரத் அவர்களே இவ்வாறு கேள்வி கேட்பதில் மூலக் காரணம் கிட்டதட்ட ஒரு வருடங்களுக்கு முன்பாக

மக்களை வழிகேட்டிலிருந்து பாதுகாப்பதற்காக  என்று தாருல் உலூம் தேவ்பந்த் பத்வா வெளியிட்டு இருந்தார்கள்

அதில் மௌலானா முஹம்மது சஃது சாஹிப் காந்தலாவி அவர்கள் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் வழிமுறைகளுக்கு மாற்றமான கருத்துகளை பேசுவதால் தாருல் உலூம் தேவ்பந்த் முறைப்படி எழுத்துப் பூர்வமாக  சஃது சாஹிப் காந்தலாவி அவர்களுக்கு தெரிவித்து அந்த தவறான கருத்துக்கலிருந்து ருஜுஃ செய்வதற்கு முன்று நாட்கள் கால அவகாசம் கொடுத்தும்  சஃது சாஹிப் காந்தலாவி அவர்கள் முறையாக ருஜீஃ செய்யவில்லை . எனவே மக்களை வழிகேட்டிலிருந்து பாதுகாப்பதற்காக தாருல் உலூம் தேவ்பந்த் அவருடைய பேச்சுக்கள் வழிகேட்டில் இழுத்துச் செல்லும் என்று ஒரு மனதாக முடிவு வெளியிட்டுள்ளது.

இதை மளாஹிருல் உலூம், சஹாரன்பூர் ஷுரா கமிட்டியினரும் தாருல் உலூம் தேவ்பந்த் வெளியிட்டுள்ள விஷயங்களை ஆமோதித்து எழுத்துப் பூர்வமாக வழி மொழிந்து கையொப்பமிட்டு நாங்களும் இதை வழி மொழிகிறோம் என்றுள்ளார்கள்.

மேலும்  முஸ்லீம் சகோதரர்களிடம்
மௌலானா முஹம்மது சஃது சாஹிப் காந்தலாவி அவர்கள் தங்களின் தவறான கருத்துக்கள் , சிந்தனையிலிருந்து ருஜுஃ செய்யும் வரை அவர்களின் பயான்களை கேட்பது பிறருக்கு எடுத்து சொல்வதைவிட்டும் தவிர்ந்து கொள்வதில் பேனிக்கையாக இருக்க வேன்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்

ஹஜ்ரத் அவர்களே !
இந்த பத்வா வெளியிட்டதற்கு பிறகும் இதுவரை சஃது சாஹிப் காந்தலாவி அவர்கள் ருஜுஃ செய்ததாக ஆதாரப்பூர்வமான  தகவல் இல்லை  இந்நிலையில் இவரின் ஏற்பாட்டிலும் , தலைமையிலும் நடக்கவிருக்கும் தப்லீக் இஜ்திமாவில் எவ்வாறு கலந்து கொள்ளவது !!! சஃது சாஹிப் காந்தலாவி அவர்களின் தலைமையில் கலந்து கொண்டால் அவருக்கு அங்கிகாரம் அளித்தது ஆகாதா ? அவருக்கும் அவரின் வழிகேட்டிற்கும் துனை போனதாக ஆகாதா ?

மக்களை வழிகேட்டிலிருந்து பாதுகாப்பதற்காக தாருல் உலூம் தேவ்பந்த் பத்வா வெளியிட்டுள்ளது.

ஆனால் இதுவரை தாங்களோ ஜமாஅத்துல் உலமாவோ இதுவரை இஜ்திமாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று எந்த எச்சரிக்கையும் விடவில்லை இது தான் மக்களை வழிகேட்டிலிருந்து பாதுகாக்கும் செயலா ?

அவருடைய பேச்சுக்கள் வழிகேட்டில் இழுத்துச் செல்லும் என்ற பிறகும் அச்சமுட்டி எச்சரிக்கை செய்ய,வேண்டிய தாங்கள் அமைதியாக இருப்பது மக்களை வழிகேட்டில் தள்ளிவிடும் செயல் ஆகாதா ?

மேலும், தாங்களும்,தங்கள்,தலைமையில் இயங்கும் தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபையும் இம்மாநாட்டில் பாமரமக்களும்,ஆலிம்களும், கலந்துக் கொள்வதற்க்காக,மாவட்ட, அளவில் முத்தவல்லி அலோசனை கூட்டங்கள் நடத்தியும், அந்த நேரத்தில்,எவ்வித நிகழ்ச்சியும்,தமிழ் நாட்டில் பாமர மக்கள் வீடுகளிலும் நடத்த வேண்டாம் என ஜமாதுல் உலமா சபையின் முகநூல் வாயிலாக கட்டளையிட்டது மக்களை வழிகேட்டின் வாசலை துறந்துவிடும் செயல் ஆகாதா ?

ஹஜ்ரத் அவர்களே ! இதன் பிறகும் தாங்கள் அமைதியாக இருப்பது வழிகேட்டிற்கு துனை போனதாக அமைந்துவிடுமே !

பிறகு  அதிகாரம்
இருந்தும் என்ன பயன் ஹஜ்ரத் அவர்களே ! மேலும் பேருக்கும் புகழுக்குமே தலைவர் பதவில் அமர்ந்தார் என்ற பழி சொல்லுக்கு ஆளாக நேரிடும் !

அதனால் ஹஜ்ரத் அவர்களே !
சத்தியத்தை சத்தியமாகவும் அசத்தியத்தை அசத்தியமாகவும் இனம் காட்ட முன்வாருங்கள்...

நிச்சயமாக ( யூதர்களிலும்
கிறிஸ்தவர்களிலும் உள்ள உலமாக்கள் ) அவர்களில் ஒரு பிரிவினர் நன்கறிந்திருந்தும் உண்மையை மறைக்கின்றனர்.

அல்குர்ஆன்: 2:146

குறிப்பு : சன்மார்க்க சட்டப் பிரகாரம் சத்தியத்தை மறைப்பது  குற்றமும்   பாவமும்  ஆகும் . இன்னும் யூதர்களிலும் கிறிஸ்தவர்களிலும் உள்ள உலமாக்களின் நடைமுறை ஆகும் என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாகும் .

மேலும் ஒரு ஹதீஸில் கூறப்பட்டுள்ளது நரகத்தின் மலக்குகள் முதலில், சிலை வணக்கம் புரிபவர்களைவிடுத்து வழிதவறிய ஆலிம்களை பிடித்துச் செல்வார்கள்

அதற்கு இந்த ஆலிம்கள் கேட்பார்கள்

சிலைவணக்கம் புரிபவர்ககளைவிடுத்து எங்களை ஏன் முதலில் கொண்டு செல்கிறீர்கள் ? என்று கேட்பார்கள் அப்பொழுது மலக்குமார்கள் கூறுவார்கள் , என்ன ; அறிந்தவரும் அறியாதவரும் ஒன்றாவார்களா ?

ஷுஃபுல் ஈமான் அல் பைஹகீ 1900

இறுதியாக ஹஜ்ரத் இதன் பிறகாவது
சன்மார்க்க சட்டப் பிரகாரம் சத்தியத்தை மறைக்காமல் மௌனத்தை கலைத்து உண்மையை உரைக்க முன் வாருங்கள்....

Comments

Popular posts from this blog

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல்

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல் https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post.html மௌலவி  சதீதுத்தீன்  பாகவி , அவர்களுக்கு, மௌலவி, பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி,  எழுதும்  பகிரங்க மடல் தப்லீக் ஜமாஅத் பற்றி  நீங்கள்  பேசிய ஒரு பதிவை  வட்சொப்  தளங்களில்  நான் கேட்டேன். அதில்., இஸ்மாயீல் திஹ்லவி  பற்றியும், அவரது தக்வியத்துல் ஈமான் என்ற நூல் பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளீர்கள். இப்பேச்சு  செவிவழிச்  செய்தியாக இல்லாமல் அறிவுபூர்வமானது  என்பதை," தக்வியத்துல் ஈமான்  என்ற  நூல், தன்னிடமிருப்பதையும், அதை நீங்கள் படித்ததையும் உரையில் குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. உங்களின்  இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள்   தேவ்பந்து  கொள்கையைச் சார்ந்தவர்   என்று உங்களை  விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். மௌலவி, அவர்களே! நீங்கள் படித்த  தக்வியத்து  ஈமான்  என்ற  நூல் தமிழில், "ஏகத்துவமும், இணைவைத்தலும் ."   என்ற பெயரில் 'அப்துல்ஹமீது  ஆமிர...

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்...