Skip to main content

அஸ்லம் தேவ்பந்தியின் தில்லுமுல்லு அம்பலப்படுத்திய:- அஃலா ஹள்ரத் மாத இதழ் (பரேலவி ஷரீஃப்)

*காஸிம் நானோத்தவியின் கொள்ளு பேரன் அஸ்லம் தேவ்பந்தியின் தில்லுமுல்லு...*

*அம்பலப்படுத்திய:- அஃலா ஹள்ரத் மாத இதழ் (பரேலவி ஷரீஃப்)*

ஜுலை 2020 தர்ஹா மாத இதழிலிருந்து

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 
அன்னவர்களின் மீலாது - பிறப்பு குறித்து  (மவ்லிதுகளில்) வரும் போது பெருமானாரின் மீதுள்ள மரியாதையால் எழுந்து நிற்பது முஸ்லிம் மக்களின் வழக்கமாக உள்ளது. இது பித்அத் ஆகும்...


இவ்வாசகம் முஸ்லிம் அறிஞர்கள் அங்கீகரித்துள்ள ஸூரத்து ஹலபிய்யா நூலின் முதல் பாகத்திலேயே உள்ளது என்று மேற்படி வஹ்ஹாபிய மதவாதி அஸ்லம் தேவ்பந்தி மிகப்பெரிய பொய்யைக் கூறியுள்ளார்.


பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மங்கா புகழோ, மாசறு கீர்த்தியோ, மவ்லிதோ, மீலாதோ. மரியாதையோ, மகத்தான ஸ்தானமோ... யூத, கிருஸ்தவ... பாசிசத்தின் கள்ளக்  குழந்தையாம் வஹ்ஹாபிய மதவாதிகளுக்குத் தானே எரிச்சலையும், ஆத்திரத்தையும் உண்டாக்கும். 

ஸூரத்து ஹலபிய்யா போன்ற சிறப்பான நூல்களை எழுதியுள்ள முஸ்லிம் அறிஞர்களின் நிலைப்பாடு அதுவல்லவே. இந்த தேவ்பந்தி சொல்வது போல் அதில் 
அப்படிதான் இருக்கிறதா? என்றால், அப்படி இல்லை! 

மாறாக மிஸ்டர் அஸ்லம் தேவ்பந்தி ஃபேர்ஜரி  மேற்படி வாசகத்தோடு சம்பந்தப்பட்ட முக்கியமான வாசகங்களை எல்லாம் விட்டுவிட்டு ஃபிராடு வேலை செய்து தம் வஹ்ஹாபிய மதக் கொள்கைக்கு தகுந்தபடி மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆதார மோசடி தேவ்பந்திகளுக்கு பழகிப்போன ஒன்றுதான். அந்த வரிசையில் இது இன்னுமொன்று. மற்றபடி இந்த தில்லுமுல்லு இன்றுதான் ஏதோ தெரியாமல் செய்துவிட்டார் என நாம் ஏமாறாமல் இருக்க வேண்டும். 

சரி... ஸீரத்து ஹலபிய்யாவில் உள்ள முழு விளக்கம் என்ன? என்று இப்போது பாருங்கள்... மேற்படி ஆதார மோசடி ஆசாமி அஸ்லம் தேவ்பந்தி இது பித்அத் ஆகும் என்பதோடு நிறுத்திவிட்டார் அல்லவா? இதோ, அதனைத் தொடர்ந்து ஸீரத்து ஹலபிய்யாவில் வரும் வாசகம்....

ஆனாலும் இந்த பித்அத் நன்மையாகும். பொதுவாக பித்அத்து என்றாலே கெட்டது தான், மார்க்கத்தில் நிராகரிக்கப்பட்டது தான் என்று கிடையாது. இந்த பித்அத்து எப்படிப்பட்டதென்றால்... தனித்தனியாக தராவீஹ் தொழுது கொண்டிருந்த மக்களை ஜமாஅத்தாக தொழ ஏற்பாடு செய்து விட்டு இது நல்ல பித்அத்து என்று ஹஜ்ரத் உமர் ரலிய்யல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள் அல்லவா? அதைப் போன்றதுதான்.

எல்லா பித்அத்தும் வழிகேடு என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அன்னவர்கள் கூறியது மார்க்கத்திற்கு முரணான காரியங்களையே குறிக்கும் என்பது வெள்ளிடைமலை.பித்அத்து ஐவகை சட்டப்பிரிவுகளில் அடங்கும் அறிஞர்கள் என்று கூறி உதாரணங்களோடு அல்லாமா இக்கத்தின் இப்னு அப்துஸ் ஸலாம் ரஹ்மதுல்லாஹி அலைஹி
அவர்கள் தம் நூலில் விரிவாக விளக்கியுள்ளார்கள். பொய்யைக் குர்ஆன். சுன்னா. இஜ்மா... அல்லது நம் முன்னோர் வழிமுறைக்கு மாற்றமாக ஒன்றை புதிதாக செய்தால் அது வழிகெட்ட பித்அத்து. அன்றி மார்க்கத்திற்கு, முரணாக இல்லாத நல்ல விஷயங்களை புதிதாக செய்தால் மகத்தான அது வரவேற்கப்பட்ட பித்அத்து ஆகும் என்று இமாம் ஷாஃபிஈ ரலியல்லாஹு அன்ஹு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஹிஜ்ரி 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய மேதைகளில் ஒருவரான இமாம் தகியுத்தீன் ஸுப்க நூல்களை ரஹ்மதுல்லாஹி அலைஹி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருப் பெயர் கேட்டு மரியாதை நிமித்தம் எழுந்து நின்றதும், அவர்களைப் பின்பற்றி அக்காலத்தில் வாழ்ந்த
ஃபேர்ஜரி ஷைகுமார்களும் எழுந்து நின்றதும் வரலாற்றில்
பதியப்பட்டுள்ளது.

வேலை ஒருமுறை அறிஞர் குழு ஒன்று இமாம் தகியுத்தீன்
தகுந்தபடி ஸுப்ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் முன்னிலையில் ஹஜ்ரத் (அபூ இகரிய்யா யஹ்யா பின்
யூசுஃப்) சர்சரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின்
நபிபுகழ்பா - மதஹ் ஃகைரில் பரிய்யா - வை ஓதிக்
கொண்டிருந்த போது....
பெருமானார் திருப்புகழ். வெண் தகட்டில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.

மேற்படி சான்றோரெல்லாம் அது கேட்க ஸஃப்கட்டி நிற்பர் -
அணியணியாய், வாகனித்தே போனாலும் (திருநபி புகழ்
, காதில் கேட்டதும்) முழந்தாழிட்டு மண்டியிடுவரே! என்ற வைரவரிகளைக் கேட்ட மாத்திரத்தில் இமாம் ஸுப் அவர்களும், சபையோர் யாவரும் பெருமானாரின்
திருப்புகழைசங்கை செய்யும் வண்ணம் அடக்கத்தோடும்,
பணிவோடும் எழுந்து நின்றார்கள். ஆக. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மீதான நேசத்தால்
கொண்டாடப்படும் மீலாதாகட்டும். நபி திருப் புகழ்பாக்களான மவ்லிதுகளாகட்டும். பெருமானார் மீதான மரியாதையில் மீலாது. மவ்லிதுகளில் எழுந்து நிற்பதாகட்டும் இது போன்ற மார்க்க முரணற்ற நல்லவை 
யாவும் பெருமானார் காலத்தில் வழமையாக்கப்படாத 
புதியனவான போதும், பித்அத்து ஹஸனா எனும் அழகிய உலகின் புதியனவே என்பதை இஸ்லாமிய உலகம் ஒப்புக் கொண்டுள்ளது. தேவ்பந்திய வஹ்ஹாபிய மதவாதிகள் தான் எதிர்க்கிறார்கள். ஏனென்றால் அவர்களது வஹ்ஹாபிய மதம் அவர்களுக்கு அதைத்தான் சொல்லிக் கொடுக்கிறது. 

இமாம் நவவீரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஞானாசிரியர் இமாம் அபூ ஷாமா ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்:

நமது காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நல்ல விஷயங்களில் ஒன்று... வருடந்தோறும் பெருமானார் 
ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த நாளில் புத்தாடை அணிந்து, நறுமணம் பூசி, தான தர்மங்கள் செய்து, அன்பளிப்புகளை வழங்கி, பரஸ்பரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி (பெருநாளாக) 
கொண்டாடுவது. இதில் நலிவடைந்த மக்கள் 
பயனடைகின்றனர். மக்கள் பெருமானார் மீது வைத்துள்ள 
நேசத்தையும், மரியாதையையும் இது காட்டுகிறது. ரஹ்மதுல்லாஹி இதற்காக தன் ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை அகிலத்தாருக்கு அருளாக அனுப்பிய அல்லாஹ்விற்கே நாம் நன்றி செலுத்த வேண்டும்.
இமாம் ஸகாவீ கூறுகிறார்கள்....
ஃகு ரூனே சலாஸா என்னும் நபிகளார் -ஸஹாபாக்கள், தாபயீன்கள், தபவுத்தாபயீன்கள் போன்ற

ஸலஃப் ஸாலிஹீன்கள் காலத்தில் இவை எல்லாம் நடைமுறை படுத்தப்படவில்லை. ஆனால், அதன் பின் உலகின் மூலை முடுக்கெல்லாம் வெகு விமரிசையாக மீலாது விழாக்கள் நடக்க ஆரம்பித்தன. மீலாது நாள் இரவில் செய்யப்படும் தர்மங்களும், ஓதப்படும் மவ்லிதுகளும் சகல பரகத்துகளும் உண்டாக காரணமாக அமைந்துவிட்டது.

அல்லாமா இப்னு ஜவ்ஸீ கூறுகிறார்கள்...

மீலாது விழா அவ்வாண்டை பரக்கத் மிக்கதாக ஆக்கிவிடுகின்றது. பாதுகாப்பானதாக ஆக்கிவிடுகின்றது. நாட்டங்கள் நிறைவேற காரணமாகிறது. அரசர்களில் ஷாஹே அர்பல் தான் முதன் முதலில் மீலாது விழா ஏற்பாடு செய்தார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மீலாது விழா மஜ்லிஸில் பெருமானாரின் சிறப்புகளை தொகுத்து அத்தன்வீர் ஃபிமவ்லிதில் பஷீரின் நதீர் என்ற நூலை அல்லாமா இப்னு வஹ்யா கோர்வை செய்து
கொடுத்தார்கள். அதற்கு அன்பளிப்பாக அரசர் 1000 தீனார் (ஆயிரம் பொற்காசுகள்) வழங்கி சிறப்பித்தார். 

ஹாபிஸ் இப்னு ஹஜர் அஸ்கலானீ, ஹாபிஸ் ஸுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹிமா இருவரும் மீலாது. மவ்லிதுக்கு  ஹதீஸில் ஆதாரம் உள்ள தென கூறியிருக்கிறார்கள்.

நன்றி; அஃலா ஹஜ்ரத் உருது மாத இதழ். ஏப்ரல் 2020.

தமிழில் : மௌலவி முஹம்மது ஷரீஃப் ஸுபி.

குறிப்பு : அரபி மூல இபாரத்துகளை வேண்டுவோர் தர்கா இதழ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல்

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல் https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post.html மௌலவி  சதீதுத்தீன்  பாகவி , அவர்களுக்கு, மௌலவி, பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி,  எழுதும்  பகிரங்க மடல் தப்லீக் ஜமாஅத் பற்றி  நீங்கள்  பேசிய ஒரு பதிவை  வட்சொப்  தளங்களில்  நான் கேட்டேன். அதில்., இஸ்மாயீல் திஹ்லவி  பற்றியும், அவரது தக்வியத்துல் ஈமான் என்ற நூல் பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளீர்கள். இப்பேச்சு  செவிவழிச்  செய்தியாக இல்லாமல் அறிவுபூர்வமானது  என்பதை," தக்வியத்துல் ஈமான்  என்ற  நூல், தன்னிடமிருப்பதையும், அதை நீங்கள் படித்ததையும் உரையில் குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. உங்களின்  இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள்   தேவ்பந்து  கொள்கையைச் சார்ந்தவர்   என்று உங்களை  விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். மௌலவி, அவர்களே! நீங்கள் படித்த  தக்வியத்து  ஈமான்  என்ற  நூல் தமிழில், "ஏகத்துவமும், இணைவைத்தலும் ."   என்ற பெயரில் 'அப்துல்ஹமீது  ஆமிர...

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்...