Skip to main content

றிஸ்வி முப்தியின் வெட்கங் கெட்ட பேச்சு!

றிஸ்வி முப்தியின்
வெட்கங் கெட்ட பேச்சு!
----------------
ஷர்க்கி, பரேலவி
-------------------------

இமாம்கள் பல்லாயிரம், ஏன் இலட்சத்தையும் தாண்டிய மஸாயில்களுக்கு விடை தேடி மக்களுக்குச் சொன்னார்கள். இதன் விளைவாக முஸ்லிம் சமுகம் நான்கு பிரிவுகளானார்கள். 

இந்த பிரிவுகள் அமல்களில் மட்டுமே இருந்தன. அகீதா வில் ஒன்றுபட்டிருந்தனர். ஒருபிரிவாரின் பள்ளிவாசலில் மறு பிரிவார்கள் தொழுதார்கள். இப்போதும் தொழுகின்றார்கள்.

புனித கஃபத்துள்ளாஹ்வில் 1965 வரை நான்கு மத்ஹபுகளுக்குமுரிய ஜமாஅத் தொழுகைகள் நடந்தன. 

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் குறிப்பாக அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் நான்கு மத்ஹபுகளுக்குமுரிய மாணவர்கள் ஒற்றுமையாக ஓதுகின்றார்கள். ஒரே விடுதியில் தங்கியிருக்கின்றனர். 
மஸாயில்களைக் கண்டுபிடித்து தீர்வுகள் சொன்ன இமாம்கள் ஒருவரையொருவர் மதித்து நடந்தார்கள். 
.
இமாமுல் அஃழம் அபூ ஹனீபா றஹ்மதுல்லாஹி அலைஹி ஆலிமுல் மதீனா இமாம் மாலிக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைச் சந்தித்து இமாம் மாலிக் றஹிமஹுல்லாஹ்வை அதிகமாக சங்கை செய்தார்கள்.

சட்டமேதை இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் இமாம் மாலிக் றஹிமஹுல்லாஹ்விடமும் இமாமுல் அஃழம் அவர்களின் சிரேஷ்ட மாணவர்களான இமாம் முஹம்மது, இமாம் அபூயூஸூப் றஹ்மதூள்ளாஹி அலைஹிம் அவர்களிடம் கல்வி கற்றார்கள். 

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இமாம் ஷாபிஈ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கல்வி கற்றார்கள். அவர்கள் வபாத் தாகும் வரை இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ்வுக்கு துஆச்செய்தார்
கள்.

சட்ட மேதை இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் பகுதாதிலிருக்கும் போது இமாமுல் அஃழம் அபூ ஹனீபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்று ஷரீபை தரிசித்தார்கள். தனது தேவைகளை அவ்விடத்தில் கேட்டுப் பெற்றுக்கொண்டார்கள்.

ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்தவர்கள். ஆயினும் சகல மத்ஹபுகளுடைய மத்ரஸாக்களிலும் பாடத்திட்டத்தில்அவர்களின் நூற்கள் இருக்கின்றன. 

கௌதுல் அஃழம் முகையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் ஷாபிஈ மத்ஹபைச்சேர்ந்தவர்கள். இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் வேண்டுதலில் ஹன்பலி மத்ஹபுக்கு மாறி அந்த மத்ஹபை பலப்படுத்தினார்கள். 
பின்னர் இருமத்ஹ பின் படியும் பத்வாக் கொடுத்தார்கள்.

கௌதுல் அஃழம் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி,  ஙரீப் நவாஸ் காஜா முயீனுத்தீன் ஷிஸ்தி; குத்புல் அஸ்ஹர் இமாம் அபுல் ஹஸன் ஷாதுலி; சுல்தானுல் ஆரிபீன் அஹ்மது ல் கபீர் றிபாஈ; ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி; ஷாஹ் பஹாஉல் ஹக் நக்க்ஷ பந்தி; குத்புல் மஜீத் ஷாஹுல் ஹமீது நாகூரி பாதுஷா நாயகம் இப்படி பல்லாயிரம் ஷைகுமார்களை மத்ஹப் வேறுபாடில்லாமல் பின்பற்றி வருகின்றனர். 

இமாம் நவவி, ஹாபிழ் இமாம் அஸ்கலானி, இமாம் ஸூயூத்தி றஹ்மதுள்ளாஹி அலைஹிம் உள்ளிட்டோரை யும் அவர்களின் நூற்களை யும் சகலரும் மதிக்கின்றனர். அவர்களின் நூற்களை வாசிக்கின்றனர்.

இப்படி 1200 ஆண்டுகளாக மஸாயில்களினால் வேறுபடாத சமுகம் இப்போது பிளவுபட்டு சிதறி விடுவார்கள் என்று இல்யாஸ் சாஹிபு ஏன் பயந்தார். 

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஹதீஸ் வகுப்பு நடத்தி பல மஸாயில்களை எழுதியும்,  போதித்தும் வந்த  ஸக்கரிய்யா சாஹிபுக்கு அப்போது வராத அச்சம் இப்போது ஏன் வந்தது? 

இப்போதும் தேவ்பந்திலும், ஸஹரான்பூரிலும் பல மத்ஹபைச்சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அவர்கள் பிளவுபட்டு மண்டைகளை உடைத்துக் கொள்ள வில்லையே! 

தொழுகைக்கு அழைத்து வரப்படும் அப்பாவி பொதுமக்களுக்கு மார்க்க சட்டங்களைக் கற்பிக்காமல் சிறப்புக்களை மட்டும் கற்றுக் கொடுத்தால் இவர்களின் தொழுகை சரியாக நிறைவேறுமா? 

மார்க்கத்தைக்கற்பது பர்ளு என்ற கடமை நிறைவேறுமா? 

சட்டங்களைப் போதித்து மக்களின் அமல்களை சீர்செய்யாத ஆலிம் சாஹிப் மார்க்கத்தை மறைத்த குற்றத்திற்கு ஆளாக மாட்டாரா? 

சட்டம் தெரியாமல் தவறாக செயல்பட்ட வரின் பாவத்தில் இவரும் பங்காளியாக மாட்டாரா? 

மௌலவி றிஸ்வி சாஹிபும் தப்லீக் நவீன முல்லாக்களும் தங்களை முப்திகள் என்று அடையாளப்படுத்துவதும், மத்ரஸாக்களில் முப்தி கோஸ் ஏற்பாடு செய்திருப்பதும் ஏன்? ஏன்? 

மக்கள் இது நாள் வரை கற்ற, கேள்விப்பட்ட, எழுதிவந்த வைக்கு முற்றிலும் முரணான கருத்துக்களை போதிப்பதை நோக்கமாகக்கொண்ட மௌலவி இல்யாஸ் உலமாக்களின் வாய்க்குப் போட்ட பூட்டுத் தான் மஸாயில்கள் பேசக்கூடாது என்ற கோசமாகும். இது மார்க்கத்தை நாசப்படுத்தும் திட்டமே அன்றி வேறல்ல! 

மக்களை முட்டாளாக்குவ தில் கைதேர்ந்த தப்லீக் முல்லா க்கள் வெட்கங் கெட்ட தனமாக பேசுகின்றார்கள். செம்மறியாட்டுக் கூட்டங்கள்போன்று தலையசைத்து ஆமாம் சாமி போடுகின்றன.

கியாமத் நாள் நெருங்கி விட்டது என்பதை இவர்களின் வருகையும், போதனைகளும் கட்டியம் கூறுகின்றன. ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

Comments

Popular posts from this blog

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல்

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல் https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post.html மௌலவி  சதீதுத்தீன்  பாகவி , அவர்களுக்கு, மௌலவி, பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி,  எழுதும்  பகிரங்க மடல் தப்லீக் ஜமாஅத் பற்றி  நீங்கள்  பேசிய ஒரு பதிவை  வட்சொப்  தளங்களில்  நான் கேட்டேன். அதில்., இஸ்மாயீல் திஹ்லவி  பற்றியும், அவரது தக்வியத்துல் ஈமான் என்ற நூல் பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளீர்கள். இப்பேச்சு  செவிவழிச்  செய்தியாக இல்லாமல் அறிவுபூர்வமானது  என்பதை," தக்வியத்துல் ஈமான்  என்ற  நூல், தன்னிடமிருப்பதையும், அதை நீங்கள் படித்ததையும் உரையில் குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. உங்களின்  இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள்   தேவ்பந்து  கொள்கையைச் சார்ந்தவர்   என்று உங்களை  விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். மௌலவி, அவர்களே! நீங்கள் படித்த  தக்வியத்து  ஈமான்  என்ற  நூல் தமிழில், "ஏகத்துவமும், இணைவைத்தலும் ."   என்ற பெயரில் 'அப்துல்ஹமீது  ஆமிர...

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்...