Skip to main content

மௌலவி காஜா முகையத்தீன் பாக்கவி மதம் கடந்து விட்டுக்கொடுப்போடு கிறித்தவர்களோடு உறவு கொள்ள ஆசைப்படுகின்றார்

மௌலவி காஜா முகையத்தீன் பாக்கவி மதம்கடந்து விட்டுக்கொடுப்போடு கிறித்தவர்களோடு உறவு கொள்ள ஆசைப்படுகின்றார்.

https://www.facebook.com/watch/?v=218054266490605

இவர் விட்டுக் கொடுக்கத் துணிந்த விடயம் எது?

மதம் கடந்த உறவு என்றால் அதன் பொருள் என்ன?

இவர் சூரத்துல் பாத்திஹா வை கைவிடப்போகின்றாரா?

ولن ترضي عنك اليهود ولا النصاري حتي تتبع ملتهم

யஹூதிகளும் நஸாறாக்களும் அவர்களின் மார்க்கத்தை நீங்கள் பின்பற்றும் வரை நிச்சயமாக உங்களை அவர்கள் திருப்தி காணமாட்டார்கள் என்று அல்லாஹுத் தஆலா திட்டவட்டமாகக் கூறுவதை மறுக்கின்றாரா?

மார்க்கத்தை இழந்தால் மட்டுமே திருப்தியான உறவு வரும் என்று திருக்கூர்ஆன் கூறுகின்றது.

இவர் மதத்தை இழந்து, தௌஹீதை விட்டுக் கொடுத்து உறவு கொள்ள துடிக்கின்றார்.

ஏசு இறை குமாரர் அல்ல !, அவர் சிலுவையில் அறையப்படவில்லை
என்ற அல்லாஹ்வின் கூற்றை மாற்றப் போகின்றாரா?

யஹூதிகளையும், நஸாறாக்களையும் உங்கள் நண்பர்களாக எடுக்க வேண்டாம். என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை கைவிடக் துணிந்த இவர்கள் போன்றவர்கள் தான் உலோகயுதவாதிகள்.

இவர்களைத் தான் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமாகப் பயந்தார்கள்.

இவர்கள் தங்கள் நலனுக்காக ஈமானையும், இஸ்லாத்தையும் விலை பேசத் துணிந்தவர்கள்.

இவர்கள் ஈமானுக்கு ஆபத்தானவர்கள். 

குப்றை விட்டும் தூரமாக இருந்த முஸ்லிம்களை குப்றோடு சங்கமிக்கச் செய்ய திருமறையில் செயல்படும் உளவாளிகள் .

இவர்கள் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தவறினால் ஈமானை இழக்க நேரிடும்.! ஜாக்கிருதை!

Comments

Popular posts from this blog

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல்

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல் https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post.html மௌலவி  சதீதுத்தீன்  பாகவி , அவர்களுக்கு, மௌலவி, பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி,  எழுதும்  பகிரங்க மடல் தப்லீக் ஜமாஅத் பற்றி  நீங்கள்  பேசிய ஒரு பதிவை  வட்சொப்  தளங்களில்  நான் கேட்டேன். அதில்., இஸ்மாயீல் திஹ்லவி  பற்றியும், அவரது தக்வியத்துல் ஈமான் என்ற நூல் பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளீர்கள். இப்பேச்சு  செவிவழிச்  செய்தியாக இல்லாமல் அறிவுபூர்வமானது  என்பதை," தக்வியத்துல் ஈமான்  என்ற  நூல், தன்னிடமிருப்பதையும், அதை நீங்கள் படித்ததையும் உரையில் குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. உங்களின்  இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள்   தேவ்பந்து  கொள்கையைச் சார்ந்தவர்   என்று உங்களை  விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். மௌலவி, அவர்களே! நீங்கள் படித்த  தக்வியத்து  ஈமான்  என்ற  நூல் தமிழில், "ஏகத்துவமும், இணைவைத்தலும் ."   என்ற பெயரில் 'அப்துல்ஹமீது  ஆமிர...

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்...