Skip to main content

புனிதமிகு மவ்லித்களை ஹராம் என்பதாக பகிரங்கமாக பத்வா கொடுத்த அன்வாருல் உலூம் மதரஸாவை திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா எவ்வாறு ஆதரிக்கிறது

நம் உயிரினும் மேலான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி கண்ணியக் குறைவாக ஃபத்வா கொடுத்த திருச்சி அன்வாருல் உலூம் மதுரசாவைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி(ரஹ்),மாதிஹுர் ரஸூல் ஸதக்கத்துல்லா அப்பா (ரஹ்), அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) போன்ற மாமேதைகளால் இயற்றப்பட்டு அறிவார்ந்த உலமா பெருமக்களால், மௌலவிகளால் உலகளாவிய அளவில் பள்ளிவாசல்களிலும், மதுரஸாக்களிலும்,வீடுகளிலும் நெடுங்காலமாக ஓதப்பட்டு வரும் புனிதமிகு  மவ்லித்களை ஹராம் என்பதாக பகிரங்கமாக பத்வா கொடுத்த அன்வாருல் உலூம் மதுரஸாவை திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா எவ்வாறு ஆதரிக்கிறது ; அங்கீகரிக்கிறது என்பது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

அன்வாருல் உலூம் பத்வாவை திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை ஏற்றுக்கொள்கிறதா? மவ்லிது ஓதுவது ஹராம் என்று சொல்கிறதா?

திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா ஆலிம்கள் எங்கும் மவ்லிது ஓதுவதே இல்லையா? அவ்வாறு ஓதுவதை ஹராம் என்று நீங்களும் சொல்கிறீர்களா?

உங்களது உண்மையான நிலைப்பாடு என்ன?

மவ்லித் ஓதுவதையே ஹராம் என்று ஃபத்வா கொடுக்கும் அன்வாருல் உலூம் மதுரஸா மவ்லித்களை இயற்றிய மேற்கூறப்பட்ட மார்க்க மாமேதைகளுக்கு என்ன ஃபத்வா கொடுக்கப் போகிறது.

மவ்லித் ஓதுவது ஹராம் என்றால், மவ்லிது ஓதும் மௌலவிகளைப் பின்பற்றி தொழுவது பற்றி திருச்சி ஜமாஅத்துல் உலமாவின் நிலைப்பாடு என்ன?

சுன்னத் ஜமாஅத் சொந்தங்களே !
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழுக்கு "களங்கம் விளைவிக்கும்"
இந்த கூட்டத்தாரை இஸ்லாமிய மக்களுக்கு அடையாளம்  காட்டுங்கள்; பகிருங்கள்
 
புனித சுப்ஹான மௌலிது பற்றி அன்வாருல் உலூம் மதுரஸா அளித்த ஃபத்வாவை கனத்த இதயத்துடன் தங்களின் மேலான பார்வைக்கு வழங்குகிறோம்.

Comments

Popular posts from this blog

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல்

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல் https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post.html மௌலவி  சதீதுத்தீன்  பாகவி , அவர்களுக்கு, மௌலவி, பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி,  எழுதும்  பகிரங்க மடல் தப்லீக் ஜமாஅத் பற்றி  நீங்கள்  பேசிய ஒரு பதிவை  வட்சொப்  தளங்களில்  நான் கேட்டேன். அதில்., இஸ்மாயீல் திஹ்லவி  பற்றியும், அவரது தக்வியத்துல் ஈமான் என்ற நூல் பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளீர்கள். இப்பேச்சு  செவிவழிச்  செய்தியாக இல்லாமல் அறிவுபூர்வமானது  என்பதை," தக்வியத்துல் ஈமான்  என்ற  நூல், தன்னிடமிருப்பதையும், அதை நீங்கள் படித்ததையும் உரையில் குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. உங்களின்  இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள்   தேவ்பந்து  கொள்கையைச் சார்ந்தவர்   என்று உங்களை  விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். மௌலவி, அவர்களே! நீங்கள் படித்த  தக்வியத்து  ஈமான்  என்ற  நூல் தமிழில், "ஏகத்துவமும், இணைவைத்தலும் ."   என்ற பெயரில் 'அப்துல்ஹமீது  ஆமிர...

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்...