Skip to main content

விவேகமில்லாத விவாத மாநாடும் வீணான தீர்ப்புகளும்

விவேகமில்லாத  விவாத மாநாடும் வீணான தீர்ப்புகளும் 


அல் ஆரிபு பில்லாஹ் அல்முஹிப்புர் ரஸுல் அஷ்ஷெய்குல் காமில் மௌலானா மௌலவி பாழில் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் ஸித்தீகி காதிரி காஹிரி அவர்களின் 

தப்லீக் ஜமாஅத்தில் வஹ்ஹாபியத்தின் விஷக்கிருமிகள் என்ற நூலில் இருந்து

இலங்கை மாத்தறை கோட்டக்கரை ஜும்ஆ பள்ளியில் 08-08-65 காலை 10 மணியளவில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் விவாத மாநாட்டில் நடந்த உண்மை நிலையை தப்முலீக் ஜமாஅத்தினர்கள் தங்களுக்கு சாதகமாக தப்பும் தவறாக திருத்தி கள்ளத்தனமாக கையெழுத்து வாங்கி வெளியிட்டதற்கு மறுப்பாக வெளியிடப்பட்டதின் மறு பதிப்பு.


    


    



 விவேகமில்லா விவாத மாநாடும்

வீணான தீர்ப்புகளும்


“தப்லீக் ஜமாஅத்து விவாத மாநாடு மாத்தறை” என்ற நோட்டீஸைப் பார்த்தோம். அதில் மாத்தறையில் நடந்த தப்லீக் விவாத மாநாட்டின் நடவடிக்கைகளை தப்புத் தவறுமாக எழுதி வீணான தீர்ப்புக்களும் எழுதப்பட்டிருக்கிறது. மாநாட்டுக்கு நாங்களும் போய் கடைசிவரை இருந்து கவனித்து வந்திருக்கிறோம். மாநாட்டு நடவடிக்கைகளை டேப்ரெக்கோடும் எடுக்கப் பட்டிருக்கிறது.

“தப்லீக் ஜமாஅத்தை உண்டாக்கிய இல்யாஸ் காந்திலவி வஹ்ஹாபி; அவர் வஹ்ஹாபியத்தை பரப்புவதற்காகவே தான் இந்த இயக்கத்தை உண்டாக்கியிருக்கிறார்” என்ற வாதியின் விவாதத்தைப் பரிசீலனை செய்வதற்காகவே தான் மாநாடு நடத்தப்பட்டது.

பிரதிவாதி தரப்பினர்: 

இல்யாஸின் உஸ்தாதுமார்கள் வஹ்ஹாபிகளாக இருந்ததினால் இல்யாஸ் வஹ்ஹாபி யாகிவிடுவாரா ? அவரால் உண்டாக்கப்பட்ட இயக்கத்தில் சேரக்கூடாதா? அலியுல் ஜுபாயி வஹ்ஹாபி முஃதஜலியாக இருந்தும் அவரின் மாணவர் அபுல்ஹஸன் அஷ்அரியுடைய கொள்கையை ஸுன்னத்து வல் ஜமாஅத்து மக்கள் பின்பற்றியிருக்கிறார்களில்லையா? என்றார்.

வாதிதரப்பார்: 

இமாம் அஷ்அரி அவர்கள் வஹ்ஹாபி ஜுபாயிடம் படிக்கத்தான் செய்தார்கள். அவரைத் தனது குருவாக ஏற்று அவர் கொள்கையை சரிகாணவில்லை. அவரின் கொள்கை சரியில்லை என்று   சொன்னார்கள்.                

  (துஹ்பதுல் முரீது 62-ம் பக்கம் பார்க்க) 


இல்யாஸ் வஹ்ஹாபிகளிடத்தில் படித்தார்; அவர்களை நல்லவர்கள் என்று, அவர்களின் கொள்கையை சரிகண்டு அவர்களைத் தனக்கு குருவாக்கி அவர்களிடம் முரீதானார். அவர்களை வலி, குதுபு என்றும் சொன்னார். அவர்களைப் பின்பற்றினார். வஹ்ஹாபியைப் பின்பற்றிய இவரும் வஹ்ஹாபி; அவரின் குருமார்கள் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் திட்டி ஏசி அவர்களின் நூல்களில் எழுதியிருக்கிறார்கள்;    அந்த நூல்களெல்லாம் இதோ எங்களிடமும் இருக்கிறது இப்படி எழுதியதினால் அவர்கள் காபிர்கள் என்றும் அவர்களைக் காபிர்கள் என்று சொல்ல சந்தேகித்தவனும் தயங்கியவனும் கூட காபிர் என்றும் மக்கா, மதீனாவிலுள்ள உலமாக்கள் பத்வா கொடுத்திருக்கிறார்கள்; அந்த பத்வாகிதாபுக்கு "ஹுஸாமுல் ஹறமைன்" என்று பெயர். அதுவும் இதோ எங்களிடமிருக்கிறது என்றார்.


பிரதி வாதி தரப்பினர்: 

மக்கா, மதீனாவிலுள்ள உலமாக்களே தான் அவர்களை முஸ்லிம்கள், நல்லவர்கள் என்றும் பத்வா கொடுத்திருக்கிறார்களே என்று கலீல் அஹ்மது அம்பேட்டியால் எழுதப்பட்ட “அல்முஹன்னது” என்ற பத்வா கிதாபிலிருந்து ஷெய்கு முஹம்மது ஸஈது பாபஸில் அவர்கள் எழுதியதாக காட்டப்பட்ட பத்வாவை வாசித்துக் காட்டச் சொல்லி வாசிக்கப்பட்டது.


வாதி தரப்பினர்: 

இது கள்ள பத்வா; கலீல் அஹ்மது அவரே சுவாலும் ஜவாபும் எழுதி , அப்படியானால் நீங்கள் நல்லவர்கள், முஸ்லிம்கள் என்றும் அவரே எழுதி, இந்தியா, தேவுபந்தி உலமாக்களின்  கைஒப்பங்களுடன் மக்கா, மதீனாவிலுள்ள உலமாக்களுடைய கை எழுத்துக்களென்று அவரே கற்பனையாக எழுதி வைத்திருக்கிறார் என்றார்.


பிரதிவாதி தரப்பினர்: 

இல்யாஸ் வஹ்ஹாபியோ காபிரோ ஆகட்டும்; அவர் மவுத்தாகி விட்டார், இலங்கையில் நடக்கிற தப்லீகில் வஹ்ஹாபியத்து இருக்கிறதாவென்று கேட்டார். 


வாதி தரப்பினர்: 

அதைப்பற்றி இங்கு பிரச்சனை இல்லை தப்லீக் ஜமாஅத்தை உண்டாக்கினது வஹ்ஹாபியத்தைப் பரப்புவதற்காகத்தான் என்றானால்; அது எங்கு நடந்தாலும் வஹ்ஹாபியத்து பரவத்தான் செய்யும் என்றார்.


பிரதிவாதி தரப்பினர்: 

நேரமாகிவிட்டது; மாநாட்டை முடித்து விடுங்கள் என்றும், “மக்கள் முடிவு சொல்லிவிட்டுப் போங்கள்” என்றும் கூச்சல் போட்டுக் கொண்டுமிருக்க, முடித்துவிட்டு ஆளுக்கொரு பக்கமாக ஓடிவிட்டார்கள். “மாநாட்டில் தப்லீக் ஜமாஅத்தை உண்டாக்கிய இல்யாஸ் வஹ்ஹாபி; வஹ்ஹாபியத்தைப் பரப்புவதற்காகவே தான் இந்த இயக்கத்தை உண்டாக்கியிருக்கிறார்” என்ற வாதியின் விவாதத்தைப் பிரதிவாதி தரப்பினர் ஒப்புக்கொண்டுவிட்டார்கள். இலங்கை தப்லீகில் வஹ்ஹாபியத்து இருக்கிறதா? என்று கேட்க, அதைப்பற்றி இங்கு பிரச்சனை இல்லை என்று வாதி சொல்லிவிட்டார். இது தான் மாநாட்டில் நடந்தது.


 “தப்லீக் ஜமாஅத்து விவாத மாநாடு" மாத்தறை என்ற நோட்டீஸில் வாதியிடம் “இலங்கை தப்லீகில் வஹ்ஹாபியத்து இருக்கிறதா? என்று கேட்கப்பட்டதற்கு வாதி தரப்பார் பதில் சொல்லவில்லையென்று தவறாக எழுதிக்கொண்டு, அதனால் “இலங்கை தப்லீகில் வஹ்ஹாபியத்து இல்லை; அதில் எல்லா மக்களும் சேரவேண்டும்” என்று தீர்ப்புக் கூறியிருப்பதாகிறது. இவன் கள்ளன்; களவெடுக்கும் நோக்கத்திலேயே வந்திருக்கிறான்”. என்று வாதிப்பவருடைய விவாதத்தை பரிசீலனை செய்வதற்காக மாநாடு கூடி வாதியிடம் “இவன் என் வீட்டில் களவெடுத்திருக்கிறானா? என்று கேட்டோம். “ அவர் ஒன்றும் பதில் சொல்லவில்லை” என்று சொல்லி, ஆகையினால் “கள்ளனோடு அண்டிப் பழகுங்கள்; சேர்ந்து இருங்கள்”. என்று தீர்ப்புக் கூறுவது போலாகிறது. இது விவேகமான தீர்ப்பா? அல்லது வீணான தீர்ப்பா? கள்ளன் தானா? களவெடுக்கும் நோக்கத்தோடு தானா வந்திருக்கிறான் என்பதைப் பரிசீலனை பண்ண சபை கூடினீர்களா? அல்லது உங்கள் வீட்டில் களவெடுத்திருக்கிறானா என்பதைப் பரிசீலனை செய்ய கூடினீர்களா? இதுவா இப்போதுள்ள பிரச்சனை? கள்ளன் களவெடுக்கும் நோக்கத்திற்காகத்தான் வந்திருக்கிறான் என்றானால் உங்கள் வீட்டில் இப்போது களவாடாதிருந்த போதிலும் எப்போதாவது களவெடுக்கத்தானே செய்வான். நோக்கத்திற்குப் புறம்பானதைப் பற்றி தீர்ப்புக் கூறுவது நேர்மையான தீர்ப்பாகுமா?


மாநாட்டில் இமாம் அஷ்அரி அவர்களின் உ.ஸ்தாது யார்? என்றுகேட்டதற்கு, வஹ்ஹாபி அலியுல் ஜுபாயி என்று சொல்லப்பட்டிருக்க, நோட்டீஸில் அஷ்அரி இமாம் அவர்களுடைய ஷெய்கு யார்? என்று கேட்டதற்கு ஜுபாயி வஹ்ஹாபி என்று சொன்னதாகவும் எழுதி இருக்கிறது. (அஸ்தஃபிறுல்லாஹ்) எங்கள் இமாம் அஷ்அரி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஜுபாயி வஹ்ஹாபியுடைய கொள்கையை நல்லதென்று சரிகண்டு அவரிடம் முரீதாகி, அவரையா தங்களுக்கு ஷெய்காக (குருவாக) ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்? இப்படித்தானா இமாம் அவர்களைப் பற்றி நீங்கள் நம்பியிருக்கிறீர்கள்? இப்படித்தானா மாநாட்டில் கேட்கப்பட்டது? ஏன் இப்படி இமாம் அவர்கள் பெயரில் பொய் சொல்கிறீர்கள்,


நோட்டீஸில் 3 நீதிபதிகளும் தீர்ப்புக் கொடுத்ததாக எழுதியிருக்கிறது. இது சுத்தப் பொய்யாகும். நீதிபதிகளில் ஒருவரான மவுலவி பாஜில் முஹம்மது கவுஸ் பாகவி அவர்கள் தாங்கள் அப்படி தீர்ப்புக் கொடுக்கவில்லை என்றும், தனது ஒப்பத்தை புளொக் செய்து கள்ளத்தனமாக தீர்ப்பில் உபயோகிக்கப்பட்டிருக்கிறது; அதைப்பற்றி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் சொல்லி, தாங்கள் சபைத் தலைவருக்கு ஏற்கனவே ரிஜிஸ்டரில் அனுப்பி வைத்திருக்கிற தங்களின் தீர்ப்பின் நகலையும் தந்தார்கள். அதையும், அவர்கள் ஸூபி ஹஜ்ரத் அவர்களுக்கு எழுதிய தபாலையும் இதனுடன் இணைத்திருக்கிறோம்.


மேலும் தீர்ப்பில் ஸூபி ஹஜரத் அவர்களை வீண் துஷ்பிரசாரம் செய்யாது விட்டு விடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது என்றும் எழுதியிருக்கிறது. ஸூபி ஹஜ்ரத் அவர்கள் துஷ் பிரசாரம் செய்கிறார்களா? அல்லது ஆலிம், மவுலவி, பாஜில், அதிபர், ஜேபி, என்று வைத்துக்கொண்ட தப்லீக் அபிமானிகளா? ஸூபி ஹஜரத் அவர்கள் நம் ஸுன்னத்துவல் ஜமா அத்து மக்களில் வஹ்ஹாபியத்து பரவி, மக்களிடையில் குழப்பம் உண்டாகக் கூடாது என்று, இப்போது வந்திருக்கிற தப்லீக் ஜமாஅத் என்ற இயக்கம் வஹ்ஹாபியத்தை பரப்புவதற்காக வந்திருக்கிறது; அதன் ஸ்தாபகரும் அவரின் குருமார்களும் வஹ்ஹாபிகள்; அவர்களின் கெட்ட வஹ்ஹாபிக் கொள்கைகளை அவர்களின் நூல்களில் எழுதியிருக்கிறார்கள்; றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இப்லீஸை விடவும் அறிவில் குறைந்தவர்கள்; அவர்களுக்கு தெரிகிற அறிவைப் போல பேயன், பைத்தியக்காரன், மதளை, மிருகங்களுக்குக்கூட தெரியும் என்றும்

அவர்கள் ஒரு அற்ப அணுவுக்கு கூட சமமாக மாட்டார்கள்; செம்மானை விடவும் குறைந்தவர்கள்; அவர்களின் நினைப்பு வருகிறதானது, கழுதை மாட்டினுடைய நினைப்பில் மூழ்குவதை விடவும் கெட்டது; என்றும் அவர்கள் மவுத்தாகி மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள் அவர்கள் தேவுபந்தி உலமாக்களிடத்தில் உருது பாஷை கற்ற மாணவர் என்றும் இன்னும் பலவாறாக ஏசி திட்டி, அவர்களின் இன்னின்ன நூல்களில் இன்னின்ன விதமாக எழுதி இருக்கிறார்கள் என்று அவர்கள் எழுதிய நூலின் பக்க நம்பர் வாசகத்தோடு எடுத்துக்காட்டி, அவர்களின் சீடர் இந்த இயக்கத்தின் ஸ்தாபகர் இல்யாஸ் அவர்களை எல்லாம் தனக்கு குருமார்களென்று ஏற்றுக்கொண்டு, அவர்களை வலி, குதுபு என்றும் அவரின் இன்னின்ன நூல்களில் சொல்லியிருக்கிறார்; அவரின் நோக்கம் தொழுகைக்கு அழைப்பதில்லை என்று சத்தியம் செய்து சொல்லி, அவரின் நோக்கம் அவரின் குருமார்களுடைய வஹ்ஹாபிக் கொள்கையை பரப்புவதுதான் என்றும், அவர் வாயாலேயே சொல்கிறார்; ஆகையால் இந்த இயக்கத்தில் சேராதீர்கள். சேர்ந்தால் உங்களுடைய ஈமானுக்கு ஆபத்து உண்டாகும் குறைந்தது அதன் ஸ்தாபகர் இல்யாஸையும் குருமார்களான கொங்கோஹி, தானவி, அம்பேட்டி, நானுத்தவி இவர்களையெல்லாம் முஸ்லிம்கள், நல்ல மனிதர்கள் என்றாவது மனதில் நம்பிக்கை வரும் ; இவர்களையெல்லாம் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏசியவர்கள்; றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏசியவன் காபிர்; அவனை காபிர் என்று சொல்ல சந்தேகித்தவனும், தயக்கம் கொண்டவனும் காபிராவான் என்றால் அவனை முஸ்லிம், நல்ல மனிதன் என்று சொன்னவன் யாராகும்? ஆகையால் அதில் சேராதீர்கள் என்று பிரச்சாரம் செய்து கொண்டேயிருக்கிறார்கள் அவர்களின் பிரச்சாரத்தினால் அநேக மக்கள் அந்த இயக்கத்தின் மர்மத்தைத் தெரிந்து அதைவிட்டும் நீங்கிவிட்டார்கள். அவர்களின் தளராத பிரச்சாரமில்லாதிருந்தால் இன்று முழு இலங்கையிலும் வஹ்ஹாபியத்து பரந்து இருக்கும்.


நீங்கள் மவுலவி, பாஜில், அதிபர், ஜேபீ இன்னும் என்னென்னமோ பெயர்களுள்ள பெரியார்களாக இருந்தும், ஸூபி ஹஜரத்தால் இல்யாஸ், அவரின் குருமார்களைப் பற்றி எழுதிக்காட்டிய குற்றச்சாட்டுகளில் ஒன்றையாவது இல்லையென்று மறுக்க முடிந்ததா? (உள்ளதை எப்படி மறுக்கவோ மறைக்கவோ முடியும்) மக்கள் எப்படி கெட்டுப்போனாலும் சரி; நாம் பிடித்ததை விடக்கூடாது என்ற பிடிவாதத்தோடு எப்படி வேண்டுமானாலும் சொல்லத் தயங்குகிறீர்களில்லை. இலங்கை தப்லீகில் வஹ்ஹாபியத்து இல்லை; கொழும்பு தப்லீகில் வஹ்ஹாபியத்து இல்லை; என்று எப்படியாவது சாக்குப் போக்கு சொல்லி குழப்பிவிட்டு மக்களை

வழிகேட்டில் இழுபட வைக்காதீர்கள். நீங்கள் றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்ளுடைய அனந்தரக்காரர்கள் என்று சொல்கிறீர்கள்; றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏசியவனுடைய இயக்கத்தில் மக்களை சேரும்படி சொல்கிறீர்களே, உங்களுக்கு உரோசமில்லையா? உங்கள் தாய் தகப்பன் உறவினர்களை ஏசியவனோடு யாரையாவது அண்டிப்பழகச் சொல்வீர்களா? இலங்கை தப்லீகில் வஹ்ஹாபியத்து இல்லை; சேருங்கள் என்று சொல்கிறீர்கள்; இலங்கை தப்லீக் வேறே இல்யாஸ் தப்லீக் வேறேயா? இல்யாஸ் தப்லீக்கைத்தானே செய்கிறோம் என்றும் சொல்கிறீர்களே; இலங்கை தப்லீக் வஹ்ஹாபியத்தைப் பரப்புவதற்காக உள்ளதில்லை; தொழுகைக்கு கூப்பிடுவதும் ஏவல் விலக்கல் செய்வதும் தான் இதன் நோக்கம் என்றால் இதற்கு “தப்லீக்” என்ற பெயர் தான் சொல்லலாமா? வஹ்ஹாபிக் கொள்கையை அது எட்டாத ஸுன்னத்து ஜமா அத்து மக்களிடத்தில் அதை எட்டி வைப்பதற்காகவல்லவா இல்யாஸ் “தப்லீக் ஜமா அத்து” என்று பெயர் வைத்து இருக்கிறார்? தொழுகைக்கு கூப்பிடுவதற்கு “தொழுகைக்கு அழைப்பது” என்றல்லவா சொல்ல வேண்டும்? எட்டிவைப்பது என்றா சொல்வது? மாத்தறை மாநாட்டில் எத்தனை பேர்கள் இல்யாஸுக்கு "றஹ்மத்துல்லாஹ் என்று தெரியாதவர்கள்  தானா சொன்னார்கள்.

மவுலவிகளுந்தானே சொன்னார்கள். றஹ்மத்துல்லாஹ் என்று முஸ்லிமுக்கல்லவா சொல்வது ! இல்யாஸுக்கு றஹ்மத்துல்லாஹ் என்று சொன்னால் அவரை முஸ்லிமென்று ஒப்புக்கொண்டதாகிறது. றஸூலுல்லாஹ்வை ஏசியவன் காபிர் அவனைக் காபிர் என்று எல்லா உலமாக்களும் சொல்லியிருக்கிறார்கள். ஏன்? நீங்களும் தான் இந்த மாநாட்டில் அப்படிச் சொன்னீர்கள்; அப்படியானால் றஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ஏசியவனை ஒலி குதுபு என்று சொன்னவன் யார்? அவனை முஸ்லிம் என அவனுக்கு “றஹ்மத்துல்லாஹ்” என்று சொன்னவர்கள் எப்படியாவார்கள் (நவூது பில்லாஹி மின்ஹா) தவுபா செய்யுங்கள் அம்பேட்டின் "அல்முஹன்னது” என்ற கற்பனை பத்வாவில் இல்யாஸின் குருமார்களை அவர்கள் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை திட்டி ஏசி எழுதியதினால் அவர்களைக் காபிர்கள் என்று பத்வா கொடுத்த அதே உலமாக்கள் அவர்களை எல்லாம் முஸ்லிம்கள் நல்லவர்கள் என்று பத்வா கொடுத்திருப்பதாக சொல்வதை நம்பாதீர்கள். அது சுத்தப் பொய்யான கற்பனையான பத்வாவாகும். ஒருவரைக் காபிர் என்று சொல்வது இலேசான காரியமில்லை. மரண தண்டனைத் தீர்ப்புக் கொடுப்பதைவிடவும் கடினமானது. பொறுப்பில்லாது சும்மா இலேசாகத் தீர்ப்பு கூறிவிட முடியாது சரியான காரணமில்லாது ஒரு முஸ்லிமை காபிர் என்று பத்வா கொடுத்தால் கொடுத்தவன் காபிராகிவிடுவான். மக்கா, மதீனாவிலுள்ள பெரும் உலமாக்களும் முப்திமார்களுமாக 35 பேர்களும் இந்தியாவில் பலபாகங்களிலுமுள்ள 268 உலமாக்களும் சரியான காரணமில்லாது பொறுப்பில்லாமல் ஒருவர் பேரில் குப்ரு பத்வா கொடுப்பார்களா? அவர்கள் என்ன காரணத்தைப் பொறுத்து இல்யாஸின் குருமார்களை காபிர்கள் என்று பத்வா கொடுத்தார்களோ அதே காரணங்களான குப்ரியத்தான வாசகங்கள் அவர்களின் கிதாபுகளில் அச்சாகி உலகமெல்லாம் வெளியாகி இருக்கும் போது அந்த கிதாபுகள் எங்களிடத்திலுமிருக்கிறது. இப்படி இருக்கும்போது காபிர்களென பத்வா கொடுத்த அதே உலமாக்கள் திரும்ப காபிர்களில்லை. உண்மையான முஸ்லிம்கள் என்று பத்வா கொடுப்பார்களா? ஒருபோதும் அப்படிச் செய்யவே மாட்டார்கள். அல்முஹன்னது என்ற பத்வா சுத்தப் பொய்யான கற்பனை. அதைப் பற்றி “அல்முஹன்னதின் அண்டப்புளுகு” என்ற நாமத்தோடு ஒரு கட்டுரை சீக்கிரமாக வெளிவரும். (கட்டுரை புஸ்தகம் இப்போது வெளியாகிவிட்டது.) 

இந்த மாத்தறை மாநாட்டில் இல்யாஸுக்கு "றஹ்மத்துல்லாஹ் என்று சொன்னது இலங்கை தப்லீகிலுள்ளவர்களும் அதன் அபிமானிகளும்தானா? அல்லது வேறெங்குமுள்ளவர்களா? 

ஆகவே, நம் ஸுன்னத்து ஜமாஅத்து சகோதரர்களை வேண்டிக்கொள்கிறோம். நீங்கள் இந்த இயக்கத்தில் சேராதீர்கள். இந்த  இயக்கத்தில் சேர்ந்தால் நம்மிடமிருந்து திருடப்படத்தான் செய்யும். எதை? பொருளையல்ல எங்கிலும் பொருளிலும் உயிரிலும் பிரதானமாகிய ஈமானை, ஏன் திருடுதல் என்றால் தெரியாதபடி எடுப்பது தானே? இந்த இயக்கத்தில் சேர்ந்தால் நமக்குத் தெரியாமல் நமது ஈமான் பறிக்கப்படத்தானே செய்யும். ஏன் றஸூலுல்லாஹி ஸல்லல்லாலும் அலைஹி வஸல்லம் அவர்களை ஏசியவர்களின் உகப்பு நம் மனதில் வரத்தானே செய்யும். வந்தால், றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உகப்பு பறிக்கப்பட்டுத் தானே போகும்; ஈமான் பறிக்கப்பட்டுத்தானே போகும். ஆகையால் நீங்கள் இதில் அறவே சேராதீர்கள். அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் றஹ்மத்து செய்வானாக ஆமீன்.





1) ஏ.ஸீ.எம். கலீல்                                                  இக்பாலிஸ்டான் தர்கா டவுண்.

2) மவுலவி எம்.ஏ.எம். நசம்                            கஹட்டோவிட்ட, ருக்கஹவில.

3) எம்.ஏ. ஆமிர்                                                          9 சக்வீதி லேன் கொழும்பு-5.

4) ஏ.எல்.எம். முகம்மது                                       54/1 கிறிப்ஸ் றோட், காலி,        

5) எ.எச்.எம். ஹுஸைன்                                    23/1 கட்டுக்கொடை, காலி,

6) பி.எம். ஷாஹுல் ஹமீது                           6/1 றிச்மன் ஹில்றோட், காலி.

7) அல்ஹாஜ் எம்.ஏ. எம் நிலாம்                  30, விவேகானந்த ரோட், கொழும்பு-6.

8) எம்.ஐ.ஏ-ரஹ்மான்                                            புதிய தெரு, வலிகாமம்.

9) எம். எல். ஏ. ரஹீம்                                         கெட்டப்பிட்டிய, அக்குறஸ்ஸ.

10) ஏ.எம். ஸஹீத்                                                    மதுரகொட, வலிகாமம்.






  



 






   



   


Comments

Popular posts from this blog

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் 136 பக்கத

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். Download  Pdf 1. புனித ஹரமைனுஷ் ஷரீஃபைன் மற்றும் இந்தியாவின் உலமா பெருமக்களால் குஃப்ரு ஃபத்வா வழங்கப்பட்ட வழிகேடர்களான 1.குலாம் அஹ்மத் காதியானி 2.காஸிம் நானோத்தவி 3.கலீல் அஹ்மத் அம்பேட்வி 4.அஷ்ரஃப் அலி தானவி 5.ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆகியோர்களும் அவர்களைப் பின்பற்றுவோரும் காஃபிர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 2. நூரி ஷாஹைதராபாத்தில் ஜாமிஆ இலாஹியாத்தே நூரியா என்ற மதரஸாவை, வழிகெட்ட தேவ்பந்து வஹ்ஹாபி மதரஸாவை ஸ்தாபித்த காஸிம் நானோத்தவியின் பேரரான மௌலவி காரி தையப் காஸிமியை வைத்து நடத்திய திறப்பு விழா கல்வெட்டு ஆதாரம் (பார்க்க தர்கா இதழ் ஜனவரி - 2021) கிடைத்துள்ள படியாலும், நூரிஷா மதரஸாவின் பைலாவில் மதரஸாவை தொடர்ந்து நடத்தமுடியாமல் போனால் தேவ்பந்து அதை தத்தெடுத்துக் கொள்ளும் என்னும் ஷரத்து உள்ளது என்ற செய்தி தெரியவந்திருப்பதாலும் ஹைதராபாத் நூரிஷா தரீகாவினருக்கும், வழிகேடர்களான தேவ்பந்து வஹ்ஹாபிய முல்லாக்களுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சமாகியுள்ள படியாலும், மேலும் நூரிஷா தரீக்காவின்