Skip to main content

கவர் ஸ்டோரி பயங்கரவாதம் தேவ்பந்தியும், பரேல்வியும்

கவர் ஸ்டோரி பயங்கரவாதம் 


தேவ்பந்தியும், பரேல்வியும்


சுதேசி ஜிஹாத்

✍️ உதய் மாஹூர்க்கர்





நம்பக்கூடிய விதத்தில் மறுப்பு - 1980களில் உருவான இந்த அரசியல் உத்தி மூலம்தான் சி ஐ ஏ. நடத்திய ரகசிய நடவடிக்கைகளையும் திட்டமிட்ட கொலைகளையும் அமெரிக்க அதிபரால் சாமார்த்தியமாக மறுக்க முடிந்தது. 

இதே வார்த்தைகள் துணை கண்டத்தில் நடக்கும் நிழலான பயங்கரவாத விளையாட்டுகளிலும் பயன்பாடுத்தப் படுகின்றன.
உதாரணமாக பாகிஸ்தானின் இஸ்டர் சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ) காஸ்ட் அமைப்பு இந்தியாவில் பயங்கரவாதத்தை பரப்பிவிட்டு அதுபற்றி தெரியாது என்று மறுப்பதை சொல்லலாம்.

"லஷ்கரே தைபாவுக்கு (எல்.இ.டி) நிதி  உதவி, பயிற்சி, ஆயுத உதவியை ஐ.எஸ்.ஐ தொடர்ந்து செய்து இந்தியாவுக்குள் அதன் செயல்பாடுகளுக்கு இந்திய முஸ்லிம்களையே சார்ந்திருக்க ஊக்குவிக்கிறது" என்கிறார் பயங்கரவாத நிபுணர் பி.ராமன். அதாவது சுதேசி ஜிஹாத் பிறந்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் மீதும் ,அயோத்தியிலும் தாக்குதல்களை நடத்திய அமைப்புகளான எல்.இ.டி. மற்றும் ஜெய்ஷே முஹம்மத் (ஜே.இ.எம்) போன்றவை அடக்கி வாசிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக ஹர்கதுல் ஜிஹாதுல் இஸ்லாம் ( ஹுஜி)
என்ற பங்களாதேஷ் அமைப்பு மீது கவனம் திரும்பி இருக்கிறது. இந்த அமைப்பு ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் மற்றும் வாரணாசியில் குண்டு வெடிப்புகளை நடத்தி முதன் முதலாக அனைவரது கவனத்தையும் பெற்றது. இப்போது பயன்பாடுத்தப் படும் வெடிபொருட்கள் 
பாகிஸ்தானின் தொடர்பால் கிடைக்கும் ஆர்.டி.எக்க, அல்ல.

பதிலாக உள்ளூரிலேயே கிடைக்கும் அம்மோனியம் நைட்ரேட் மற்றும் ஜெலட்டின் குச்சிகளாகும்.

குஜராத் குண்டு வெடிப்புகள் ஹுஜியால் திட்டமிடப்பட்டு இந்திய முஜாஹிதீனால் செயல்படுத்தப்பட்டன என்று நம்பப்படுகிறது

இந்திய முஜாஹிதன் என்பது தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கத்தின் (சிம்) புதிய பெயர் என்று புலனாய்வாளர்கள் சொல்கிறார்கள், இந்திய முஸ்லிம் சமூகத்திலிருந்து மட்டுமே ஆட்கள் தேர்வு செய்து தனி இந்திய அமைப்பை உருவாக்கும்படி ஹுஜியை ஐ.எஸ்.ஐ. ஊக்குவித்திருக்கிறது என்று கருதப்படுகிறது.

அமெரிக்கா மீதான அடுத்த தாக்குதல் "பொன் நிற" பயங்கரவாதிகளால் நடத்தப்படாலம் என்று அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மைக்கேல் ஷெர்டாஃப் கருதுகிறார். இதேபோல ஐ.எஸ்.ஐயும் பாகிஸ்தானிய அல்லது பங்களாதேஷிய தொடர்பு எதுவும் வெளிப்படையாக இல்லாத, முற்றிலும் இந்திய அமைப்பை பயன்படுத்த நினைத்ததில்  உருவானது தான் இந்தியன் முஜாஹிதினா? தங்களது மோசமான காரியங்களுக்கு தாங்களே பொறுப்பு ஏற்கும் குழு இது. இந்த குழு எப்போதுமே ஒரு இ மெயில் அல்லது ஒரு ஆதாரத்துடனும் "குரு அல் ஹிந்தி" என்ற மர்ம நபரின் கையெழுத்துடனும் தங்களது செயல்களுக்கு பொறுப்பேற்பதாக அறிவிக்கும்.

இந்தக் குழுக்களில் இருப்பவர்கள் யார் ? 2002ல் குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து குஜராத்தில் இருக்கும் தேவ்பந்தி- தப்லீக் ஜமாஅத் மற்றும் அஹ்லெ ஹதீஸ் குழுக்களில் உள்ள தீவிர மதவாத சக்திகள் பழிவாங்கப் போவதாக சபதமிட்டன. தெற்கு குஜராத்தில் தேவ்பந்தி மதரஸாக்களில் படிக்கும் 24 மாணவர்கள் பெரும்பாலானவர்கள் காஷ்மீரிகள். கலவரத்திற்குப் பின் ஆயுதம் மற்றும் வெடிமருந்து பயிற்சிகள் பெறுவதற்காக பாகிஸ்தான் போனார்கள். இவர்களில் 12 பேர் பருச் அருகே கந்தாரியாவில் தாருல் உலூம் அரேபியா இஸ்லாமிய எனப்படும் தேவ் பந்த் மதரஸாவை சேர்ந்தவர்கள்.( போலீஸ் நிர்பந்தத்தினால் இந்த மதரஸாக்கள் இப்போது காஷ்மீரிகளின் சேர்ப்பதில்லை) இதில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் காட்டிய கை வரிசையாக இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

ஹுஜியின் அதிகம் அறியப்பட்ட கமாண்டர்களில் ஒருவரும் அதன் ஔரங்காபாத் தலைவருமான ஜாவீத் காஷ்மீரி, மகாராஷ்டிரா போலீசிடம் சிக்காமல் தப்பித்து வருபவர். இவர் பரூச் அருகே இதேபோன்ற மதரசாவில் தான் மதக்கல்வி பயின்றார்.சூரத் அருகே இருக்கும் தபோலில் உள்ள 101 ஆண்டு பழமையான தேவ்பந்த் மதரஸா மதவாதத்தை பரப்புவதாக குற்றம் சாட்டப்படுகிறது. பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை சந்தித்துள்ள இரண்டும் மௌலவிகளும் தபோலில் தான் படித்தனர்.

குஜராத்தில் கோத்ரா கலவரத்திற்குப் பின் நடந்த அக்ஷர்தம் தாக்குதல் மற்றும் 2002இல் 13 பேர் காயம் அடைந்த பஸ் குண்டு வெடிப்பு உட்பட பயங்கரவாத செயல் சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் தேவ்பந்திகள் தான். அதனால் தான் கடந்த வாரம் அகமதாபாத் குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரங்களில் மதவாத அஹ்லெ ஹதீஸின் மௌல்வி அப்துல் ஹலீமை போலீஸ் கைது செய்தது ஆச்சரியமாக இல்லை. குஜராத் கலவரத்தை தொடர்ந்து ஹலீம் சில இளைஞர்களை பாகிஸ்தானுக்கு ஆயுதப் பயிற்சிக்காக அனுப்பினார் என்று பழைய நிருவிக்கப்படாத குற்றச்சாட்டு அவர் மீது இருக்கிறது.

அவர்கள் அனுப்பும் இ மெயில்களின் மையக்கரு ஒரே மாதிரியானதாகத் தான் இருக்கிறது. அதாவது இந்திய முஸ்லிம்கள் அதிரடியான முறைகள் மூலமே ஜிஹாதை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். 1993 மும்பை குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டதையும் முஸ்லிம்களுக்கு கொடுமைகள் புரிந்ததாகவும் சொல்லப்பட்ட இந்து போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். 2002ம் ஆண்டு குஜராத் கலவரம் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஜே.இ.எம். காரர்கள் மீது சில வக்கீல்கள் நடத்திய தாக்குதல் மற்றும் கிரிமினல் நீதி அமைப்பு முஸ்லிம்களை கடுமையாக நடத்துகிறது என்றும் இந்துக்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறது என்றும் அந்த இ மெயில்களில் குறிப்பிடுகிறார்கள்.

சமூகத்தை நோகடிக்காமல் எப்படி பயங்கரவாதிகளை அடையாளம் காண்பது என்பது தான் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளின் முன் உள்ள சவால்.

குஜராத் போலீஸ் DIG டி ஜி வன்ஸாரா வஹாபிகளின் செயல்பாடு பற்றி நன்கு அறிந்து கொண்ட பின்னர் இதில் நிபுணரானவர்.

இவர் பயங்கரவாத எதிர்ப்பு படையில் பொறுப்பு வகித்தவர். இவரது பதவிக் காலத்தில் இவர் மதவாத வாஹாபிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் என்று கூறப்படுகிறது ஆனால் சோராபுதீன் என்கவுன்டர் வழக்கில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 11 போலீஸ்காரர்கள் உடன் ஜூன் 2007 இவர் கைது செய்யப்பட்ட போது இந்த முயற்சிகள் தடைபட்டன.

சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் அவரது அறிவு மற்றும் திறனை பயன்படுத்தி முஸ்லிம் சமுதாயத்திற்கு உள்ளேயே மிதவாத சக்திகளை கொண்ட சொந்த உறவு நெட்வொர்க்கை அமைத்துக் கொண்டார். இந்த நெட்வொர்க் தந்த தகவல்களை வைத்து வஹாபிகளை அவர் கண்காணிப்பார். அவர் பயன்படுத்திய சர்ச்சைக்குரிய இன்னொரு வழி பயங்கரவாத சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் நபரின் உறவினர்களை தனது சொந்த பாதுகாவலில் வைத்துக் கொள்வார். குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸிடம் ஆஜராகும் வரை அவர்கள் இவர் வசம் இருப்பார்கள். இவை சட்டத்திற்கு புறம்பான வழிகளாக இருக்கலாம்.
ஆனால் அவை மதவாத இஸ்லாமிய சக்திகளை இறுக்கிப் பிடித்தது என்பது உண்மை. வன்ஸாராவின் செயல்பாடுகள் முஸ்லீம் சமூகத்தினரை துன்புறுத்துவதாக அர்த்தம் கற்பிக்கப்பட்டது. ஆனால் பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க இவையெல்லாம் தேவையான நடவடிக்கைகள் என்று போலீஸ் அதிகாரிகள் சொல்கிறார்கள். கடந்த வாரத்து சம்பவங்களில் அதிக அளவில் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டிருந்ததால் அதை போலீசின் உளவு அமைப்பு விட்ட மிகப்பெரிய கோட்டை என்று சொல்கிறார்கள்.

கடந்த வார அகமதாபாத் குண்டு வெடிப்பு புலனாய்வில் வன்ஸாரா இல்லாத குறையை அடிக்கோடிட்டுக் காட்டியது. இந்த பயங்கரவாத செயலில் உள்ளூர்வாசிகள் அதிகமானோர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படும் ஹலீமை மட்டுமே போலீஸ் கைது செய்திருக்கிறது.

ஒரு போலீஸ் அதிகாரி சொல்வது போல "இத்தகைய சம்பவங்களை தொடர்ந்து வலை மிகப்பெரியதாக விரிக்கப்பட வேண்டும். அப்படி ஏராளமான மீன்கள் மாட்டும் போது தேவையான மீன்களை வைத்துக்கொண்டு, தேவையில்லாதவற்றை மீண்டும் ஏரியிலேயே விட்டு விடலாம்" சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளுக்கு எச்சரிக்கை என்பது புதிய தாரக மந்திரம்.

வளரும் தீவிரவாதம்


பதினைந்து வயது இருக்கும் போது உஜ்ஜையின் பாலிடெக்னிக்கில் படித்துக் கொண்டிருந்த சஃப்தர் நகோரிக்கு ஹபீஸ் நிஃமதுல்லாஹ் நத்வியின் தொடர்பு கிடைத்தது. நத்வி உஜ்ஜைன் ஃபதே மசூதியின் இமாமாகவும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் (ஜே .ஐ.எச்) தலைவராகவும் இருந்தார். மத்திய பிரதேச போலீஸ் அதிகாரிகள் இளைய மகனான நகோரிக்கு நத்வி தனிப்பட்ட முறையில் நிறைய அறிவுரைகள் தந்தார். விரைவிலேயே மதவாத அமைப்பான இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கத்தில் (சிமி) நகோரி சேர்த்துக்கொள்ளப்பட்டார்.நகோரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் கில் டிப்ளமோவும் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியலில் முதுநிலை பட்டமும் பெற்றதோடு தாலிபான்களின் சித்தாந்தங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அதிதீவிர சிமியின் தலைவராகவும் ஆனார். கடந்த மார்ச் மாதம் 38 இந்தூரில் கைது செய்யப்பட்டார்.

நகோரி நடத்திய அமைப்பு டாக்டர்கள், எஞ்சினியர்கள், வெப் டிசைனர்களாக இருக்கும் இளைஞர்களை மூளை சலவை செய்து அவர்களுக்கு திட்டமிட்டு படுகொலைகள் செய்யவும், குண்டுகள் வைப்பதற்கும் பயிற்சி அளித்தது. அந்த இளைஞர்கள் சதித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பே பிடிபட்டு விட்டார்கள்.

இவர்கள் அனைவரும் இஸ்லாமின் கடுமையான மதக் கோட்பாடுகளை பின்பற்றும் தேவ்பந்தி பிரிவின் தீவிர போக்கை கொண்ட வஹாபி சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள். இது இஸ்லாமின் மிக ஆச்சாரமான பிரிவு இப்பிரிவினர் இஸ்லாமின் இன்னொரு பிரிவான சூஃபிஸத்தின் செயல்பாடுகள் இஸ்லாத்தின் தூய்மையை கெடுப்பவை என்று கருதுவதோடு முஹம்மத் நபியை மதிக்கப்பட வேண்டிய இறைத்தூதராக பார்க்கலாமே தவிர அவரை வழிபடலாகாது என்று நம்புபவர்கள்.

தேவ்பந்திகளும் அவர்களது சேவை பிரிவானவான தப்லீக் ஜமாத்தும் ( நீண்ட வெள்ளை ஜிப்பா,தலைப்பாகை மற்றும் நீண்ட தாடியும் தரிப்பது இவர்களது வழக்கம்) தேசம் பிராந்தியம் போன்றவற்றை தாண்டிய உலகளாவிய இஸ்லாமிய அடையாளத்திற்கு அழைப்பு விடுத்தது அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இவர்களிடமிருந்து மிகவும் வித்தியாசப்படுபவர்கள் பரேல்வி பிரிவினர் .இந்தியாவின் 15 கோடி முஸ்லிம்களில் மூன்றில் இரு பங்கினர் இந்தப் பிரிவை பின்பற்றுபவர்களே.

பரேல்வி பிரிவினர் வளமான உள்ளுர் கலாச்சாரத்துடனான தொடர்பு நபிகளை வழிபடுவதோடு சூஃபிகளின் வழக்கமான தர்காவுக்கு செல்வது,இசையை ரசிப்பது போன்றவற்றையும் பின்பற்றுபவர்கள். இவர்களது போராட்டம் இவர்களது தொடக்கம் போலவே மிகவும் பழமையானது. இந்த இரு இந்த இரு பிரிவுகளுமே 19வது நூற்றாண்டில் இன்றைய உ.பி பகுதியில் உள்ள தேவ்பந்த் மற்றும் பரேல்வி ஆகிய இடங்களில் உதித்தவை. தேவ்பந்தி -தப்லீக் ஜமாஅத் விஷயம். சில சமயம் கைகலப்பு நடக்கும் அளவுக்கு வேறுபாடுகள் ஆழமானவை. பரேல்விகள் தனியாக ரிஃபாய் கமிட்டி என்ற ஒன்றை வைத்துள்ளனர். 

தேவ்பந்திகளின் தீவிர இஸ்லாமிய மதவாத பிரச்சாரங்களை எதிர்ப்பது தான் இக்கமிட்டியின் ஒரே வேலை. அஜ்மீர் ஷரீப் மற்றும் மாலேகாவ்னில் பரேல்வி பிரிவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆச்சாரமான தேவ்பந்தி அல்லது அஹ்லெ ஹதீஸின் கொள்கைகளை பின்பற்றும் தீவிர வஹாபி குழுக்களால் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது.

இந்தியா மீது அழைக்கப்படுவது இஸ்லாமிய பயங்கரவாதம் அல்ல அது "வஹ்ஹாபி பயங்கரவாதம்" என்கிறார் இமான் ( இந்திய முஸ்லிம் சங்கம் நூரி) என்ற மிதவாத இஸ்லாமிய அமைப்பு நடத்தும் அரசு ஊழியரான முகமது ஹமீது. 

பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் நடந்த வகுப்புக் கலவரத்திற்கு பழிவாங்கும் வகையில் 1993ல் நடந்த மும்பை குண்டு வெடிப்புகளை தவிர வேறு எந்த பயங்கரவாத தாக்குதல்களிலும் ஈடுபடவில்லை.

ஜெய்ஷெ முகமது,ஹுஜி,லஷ்கரெ கைமா, ஹர்கதுல் அன்ஸார் போன்ற பெரும்பான்மையான பயங்கரவாத குழுக்கள் இந்தியாவில் வஹாபிஸத்தின் 3 துணை குழுக்களை ஆதரிக்கின்றன.


"கிட்டத்தட்ட அனைத்து பயங்கரவாதிகளும் எப்படி வஹாபிகளை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்" என்கிறார் பரூச்சில் இருக்கும் பரேல்வி போதகரான அப்துல்லா படேல்.பாகிஸ்தானில் உள்ள வஹாபிகள் மிதவாதிகள் மீது போர் பிரகடனம் செய்திருக்கிறார்கள். அந்தப் போர் இதை விட சற்று ஆபத்தானது. 2006 ஏப்ரல் 11ஆம் தேதி கராச்சியில் நடந்த மதக்கூட்டம் ஒன்றில் குண்டு வெடித்ததில், பாகிஸ்தானின் தேவ்பந்திகளை எதிர்க்கும் ஸலபி சன்னி அமைப்பான சன்னி தஹ்ரீக்கின் மூத்த தலைவர்கள் அனைவரும் பலியானார்கள். இவர்களுடன் தஹ்ரீகின் கீழ்மட்ட தலைவர்கள் உட்பட 50 அப்பாவி சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள். இந்தியாவிலும் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்ளனர். பரேல்விகள் அதிகம் செல்லும் அஜ்மீர் தர்காவில் கடந்த வருடம் நடந்த குண்டு வெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

பெரும்பான்மையான பயங்கரவாதிகள் தேவ்பந்தி - தப்லீக் அல்லது அஹ்லெஹதீஸை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். "பயங்கரவாத அமைப்புகள் இந்த குழுக்களிடம் இருந்து தான் தங்களுக்கு வேண்டிய ஆட்களை தேர்ந்து எடுப்பது போல தெரிகிறது" என்கிறார் அகமதாபாத் குற்றப் பிரிவின் முன்னாள் ஏ.சி.பி ஆன ஜி.எல். சிங்கல். இஸ்லாத்துக்காக தற்கொலை வெடிகுண்டை அணிந்து உடல் சிதறி பலியாக வேண்டும் என்று இந்தக் குழுக்கள் தங்களது தொண்டர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. தற்போதைய முஸ்லிம் சமூகம் உட்பட அனைத்து சமூகங்களில் இருந்தும் வெளியே வந்து உலகளாவிய முஸ்லிம் சமூகத்தை மறு உருவாக்கம் செய்யும் கனவுள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களை கையாள்வதில் உள்ள சவால்களில் இருந்து தான் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் முளைக்கின்றன.


இந்த இரண்டாம் தலைமுறை முஸ்லிம்கள் அனைவரும் அல்ல.சிலர் மட்டுமே- தங்களது தாத்தாக்களின் தூய்மையான கலாச்சாரத்தில் இருந்து அந்நியப்பட்டு இருப்பதாக உணர்கிறார்கள். மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்தும் தங்களை மிகவும் அந்நியமாக உணர்கிறார்கள். இவற்றோடு கலந்து விடாமல் "எந்த சமூகத்தையும் கண்டு கொள்ளாதீர்கள், அரசியல் பற்றி கண்டு கொள்ளாதீர்கள். ஒரு நல்ல முஸ்லிமாக மட்டும் இருக்க முயலுங்கள். உண்மையான முஸ்லிம் சமூகத்தை உருவாக்க முயலுங்கள்" என்று சொல்லும் புதிய மதவாத இயக்கத்தில் சேர்வது அவர்களுக்கு பிடித்திருக்கிறது. இதுதான் என் அடையாளம் என்று அவர்கள் சொல்கிறார்கள்" என்கிறார் தீ ஃபெயிலியர் ஆப் பொலிட்டிக்கல் இஸ்லாம் என்ற நூலை எழுதிய ஆலிவர்ராய். இந்த புதிய அடையாளத்தை வலுப்படுத்த தான் தங்கள் சமூகத்திற்கு எதிரான அநீதிகளை அவர்கள் முன் உதாரணமாக வைக்கிறார்கள். சமீப வருடங்களில் பாபர் மசூதி இடிப்பு, 2003 மும்பை கலவரம் ,2002 குஜராத் கலவரம் ஆகியவை இவர்களது சக்திவாய்ந்த பிரச்சார ஆயுதங்களாகி விட்டன.

மேலெழுந்த வாரியாக பார்த்தால் பிரச்சனை இல்லை என்று தோன்றும். முஸ்லிம் சமூகத்தில் 80 சதவீதத்தினர் வஹாபிகள் அல்லாதவர்கள் தான். இவர்களுக்கு பெரிய ஆபத்தில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அவர்களது மிதவாத குரல் முழ்கடிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வகையான இஸ்லாத்துக்காக வஹாபிகள் அதி தீவிரமான பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்க,பிற பிரிவுகள் நிரந்தரமாக இவற்றை எதிர்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. ஜிஹாத் சித்தாந்தத்திற்கு வன்முறை சார்ந்த அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. இதற்கு ஆட்களை உருவாக்கவும் திரட்டவும் இந்தியாவில் தீவிரவாத இயக்கத்தின் தளத்தை தேர்வு செய்யும் ஏராளமான வளு இருக்கிறது" என்கிறார் இன்ஸ்டிடியூட் ஃபார் காஃப்ளிக்ட் மேனேஜ்மென்டடின் நிர்வாக இயக்குனரான அஜய் சஹானி


வஹாபி சித்தாந்தத்தை பரப்புவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு 3 இணையதளங்கள் தான் இருந்தன. இன்று ஆயிரம் என்கின்றார் இந்தியாவில் இஸ்லாமிய சித்தாந்தம் பற்றி ஆய்வு செய்து வரும் மும்பை ரஜ்வி கல்லூரியில் பேராசிரியராக இருப்பவருமான ஷாஹிப் ரஜ்வி.

நிதி இல்லாமல் பரேல்வி மசூதிகள் தடுமாறு கையில் சவுதி பணத்தில் உருவாகும் தப்லீக் மசூதிகள் ஹரியானாவில் இருந்து கேரளா வரை, தெற்கு குஜராத்தில் இருந்து மேற்கு வங்கம் வரை நாடு முழுவதும் தோன்றி பளிச்சிடுகின்றன. பெரும்பான்மையான பரேல்வி சன்னி மசூதிகள் மோசமான நிலையில் இருக்கின்றன. அதனால் தீவிர போக்கு கொண்டவர்கள், அதை பழுது பார்க்க நன்கொடைகள் கொடுத்து தங்கள் மத குருக்களை நியமனம் செய்து படிப்படியாக அதை தங்கள் வசம் எடுத்துக் கொள்கிறார்கள்" என்கிறார் ரஸ்வி. கடந்த பத்தாண்டுகளில் 30 சதவீத மசூதிகள் வஹாபி சித்தாந்த முன்னணி அமைப்புகளால் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன. ஆனால் தப்லீகிகள், தேவ் பந்திகள்,ஜமாத்தே இஸ்லாமி, அஹ்லெ ஹதீஸ், பிரிவினரும் அவர்களது போதகர்களும் உள்ளே வரக்கூடாது என்று எச்சரிக்கும் அறிவிப்புப் பலகையை பரேல்வி மசூதிகள் வைத்திருக்கின்றன.

தங்களது சித்தாந்தம் முஸ்லிம் இளைஞர்களிடம் மதவெறியை பரப்புவதாக சொல்லப்படுவதை தேவ்பந்தி தப்லீக்கின் போதகர்கள் மறுக்கிறார்கள். ஒரு சிலரது வன்முறை நடத்தைக்கு ஒரு சித்தாந்தமோ அல்லது மதபோதனை கூடமோ எப்படி பொறுப்பாக முடியும் ? என்று கேட்கிறார் தப்லீக் போதகரான முகமது படேல்

ஸவாத்யாயா பரிவார் அல்லது காயத்ரி பரிவார் போன்ற மத இயக்கத்துடன் தப்லிகை ஒப்பிடுகிறார். "இந்துக்களை சரியான வழியில் கொண்டு வர அவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே தான் நாங்கள் முஸ்லிம்களுக்கு செய்கிறோம். இதில் என்ன தவறு என்கிறார் அவர்.


குஜராத்தின் பாவ்நகர் ,ஜுனாகட், சூரத்,தோஹத், ஆகிய இடங்களில் தேவ்பந்தி தப்லீக்கிகளுக்கும் மிதவாத பரேல்வி பிரிவை சேர்ந்த அஹ்லே சுன்னத் போதகர்களுக்கும் இடையே கடந்த பத்தாண்டுகளாகவே மோதல்கள் நடந்து வருகின்றன. தெற்கு குஜராத்தில் பரூச்சில் படேல் முஸ்லிம்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை மிதவாதிகளாக இருந்து வந்தனர். ஆனால் தேவ்பந்தி போதகர்கள் இப்பகுதியில் தங்கள் நம்பிக்கைகளை பரப்பவே இன்று பெரும்பான்மையான முஸ்லிம் வஹாபிகளாகி விட்டனர்.

தென் இந்தியாவில் ஜே.ஐ.எச்.சும் கேரளா நத்வத்துல் முஜாஹீதீனும் இரண்டு கோஷ்டிகளாக பின்பற்றப்படுகின்றன. இஸ்லாமிய அரசுகள் அமைக்க மௌலானா மௌதூதி அழைப்பு விடுத்து 1941இல் லாகூரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஆரம்பித்தது ஜே.ஐ.எச் இப்போது தீவிரமான மன நிலை மாற்றத்தில் இருக்கிறது .புதிய புதிய பாதைகளை பின்பற்றுகிறது தனிப்பட்ட சீர்திருத்தங்களை வலியுறுத்துகிறது. அரசியல் இஸ்லாம் என்கிற அதன் முந்தைய கோஷங்களை கைவிடுகிறது. மந்தமான ஆர்வலர்களை கொண்ட பெற புதிய மதவாத குழுக்கள் போல் அல்லாமல் ஜே ஐ எச் சில் துடிப்பான ஆர்வலர்கள் இருக்கிறார்கள். முதலாளித்துவ எதிர்ப்பு பன்னாட்டு எதிர்ப்பு போன்றவற்றை போதிக்கிறார்கள்.

இஸ்லாத்தை தங்கள் குறுகலான பார்வையில் பொருள் கொள்வது பயங்கரவாதத்தை தூண்டி விடுவதாக தேவ்பந்திகள் கருதுகிறார்கள். இப்போக்கு அதிகரிப்பதால் அவர்கள் பயங்கரவாத செயல்பாடுகளில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டு முதன் முறையாக அதனை கண்டிக்கிறார்கள். பிப்ரவரி 25-ஆம் தேதி தாருல் உலூம் தேவ்பந்த் மற்றும் பிற அமைப்புகள் பயங்கரவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது குர்ஆனுக்கு எதிரானது என்று முழங்கி பேரணி ஒன்று நடத்தின. முஸ்லிம்களையும் மதரஸாக்களையும் களங்கப்படுத்துவதை கண்டித்தன. தாய் நாட்டுக்கு தொடர்ந்து விசுவாசம் காட்ட வேண்டும் என்று முஸ்லிம்களை அவை கேட்டுக் கொண்டன. தேவ் பந்தின் தாக்கம் எல்லை தாண்டி உலகெங்கிலும் இருக்கும் முஸ்லிம்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வலுவானதாக இருக்கிறது. இன்னும் அடுத்த சில வாரங்களில் பிற முஸ்லிம் அமைப்புகள் இதே மாதிரியான மாநாட்டை நடத்தவிருகின்றன.

இவை பயங்கரவாதத்திற்கு எதிராக முழங்கினாலும் தீவிர போக்குக் கொண்டவர்கள் இஸ்லாத்தின் கடுமையான விதிகளை போதிப்பதன் மூலம் மதவாதம் மற்றும் தீவிரவாதத்தை பிரிக்கும் நூலிழைக்கு இளைஞர்களை தள்ளிவிடும் ரிஸ்க் எடுக்கிறார்கள் அல்கொய்தா போன்ற குழுக்கள் குறுகிய பார்வையுடன் இஸ்லாமிய போதனைகளை பின்பற்றும் குழுக்களிடமிருந்து தொண்டர்களை பெறுகின்றன என்றும் இவற்றின் பின்னணி பாரம்பரிய இஸ்லாமிய போதனைக்கு சம்பந்தம் இல்லாதது என்கிறார்கள் புதிய மதவாத இயக்கங்களை விமர்சிப்பவர்கள்.


மதவாதம் பரவுவதை தடுப்பதற்கான தீர்வு மிதவாதிகளை ஊக்கப்படுத்துவதில் இருக்கலாம். ஜூன் 2,3,4 தேதிகளில் பிரிட்டன் மற்றும் இந்திய உள்துறை அமைச்சகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பல தொடர் கூட்டங்களை நடத்தி பயங்கரவாதம் பற்றிய தங்களது அனுபவங்களை பற்றி பேசினார்கள். இக்கூட்டங்களில் இந்திய உளவுத்துறையினர், பிரிட்டன் M15 அதிகாரிகள், சீனியர் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களின் முடிவு ஒரே மனதாக இருந்தது. இருதரப்பும் மிதவாதிகளை ஊக்குவிக்க துடிப்பாக செயல்பட வேண்டும். இது பிரிட்டனில் சிறப்பாக நடந்திருக்கிறது. இந்தியாவில் இதற்கு சூஃபிகளை ஊக்குவிப்பது என்று அர்த்தம். சூஃபி தாழ்வாரம் அமைக்க வேண்டும் என்று துடிப்புடன் செயல்படும் ஹஜ்ரத் சையத் முகமது ஜிலானி அஷ்ரப் கச்சோசவி தலைமையிலான இந்திய சூஃபி பவுண்டேஷனிடம் இருந்து அமைதி முயற்சிகள் வருகின்றன. மதவாதத்திற்கு எதிரான பெரும் போரில் வெற்றி கிடைக்க வேண்டுமானால் வெறும் வார்த்தைகள் ஆகாது காரியங்கள் நடந்தாக வேண்டும்.


ஃபசர்சாந்து அகமது, உதய் மாஹுர்க்கர், ஷஃபி ரஹ்மான் உதவியுடன்..

இவன்

தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபை
திருச்சி-8 

நன்றி
இந்தியா டுடே 13-08-2008..






Comments

Popular posts from this blog

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் 136 பக்கத

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். Download  Pdf 1. புனித ஹரமைனுஷ் ஷரீஃபைன் மற்றும் இந்தியாவின் உலமா பெருமக்களால் குஃப்ரு ஃபத்வா வழங்கப்பட்ட வழிகேடர்களான 1.குலாம் அஹ்மத் காதியானி 2.காஸிம் நானோத்தவி 3.கலீல் அஹ்மத் அம்பேட்வி 4.அஷ்ரஃப் அலி தானவி 5.ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆகியோர்களும் அவர்களைப் பின்பற்றுவோரும் காஃபிர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 2. நூரி ஷாஹைதராபாத்தில் ஜாமிஆ இலாஹியாத்தே நூரியா என்ற மதரஸாவை, வழிகெட்ட தேவ்பந்து வஹ்ஹாபி மதரஸாவை ஸ்தாபித்த காஸிம் நானோத்தவியின் பேரரான மௌலவி காரி தையப் காஸிமியை வைத்து நடத்திய திறப்பு விழா கல்வெட்டு ஆதாரம் (பார்க்க தர்கா இதழ் ஜனவரி - 2021) கிடைத்துள்ள படியாலும், நூரிஷா மதரஸாவின் பைலாவில் மதரஸாவை தொடர்ந்து நடத்தமுடியாமல் போனால் தேவ்பந்து அதை தத்தெடுத்துக் கொள்ளும் என்னும் ஷரத்து உள்ளது என்ற செய்தி தெரியவந்திருப்பதாலும் ஹைதராபாத் நூரிஷா தரீகாவினருக்கும், வழிகேடர்களான தேவ்பந்து வஹ்ஹாபிய முல்லாக்களுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சமாகியுள்ள படியாலும், மேலும் நூரிஷா தரீக்காவின்