Skip to main content

இஸ்மாயில் நதுவியின் கொள்கை இருட்டடிப்புகள்

இஸ்மாயில் நதுவியின் கொள்கை இருட்டடிப்புகள்.

பாகம். 1,

(ஷாபியாக்கள்  மீது இஸ்மாயில் நதுவியின் இருட்டடிப்பு)

தமிழகத்தில் சமீபகாலமாக மண்ணில் தோண்டிப் புதைக்கப்பட்ட வஹாபியிசத்தை தூக்கி நிறுத்துவதற்காக களம் இறங்கியவர் தான் இந்த இஸ்மாயில் நதுவி.

தன்னை ஹம்பலி மத்ஹபைச் சார்ந்தவர் என்று சொல்லிக்கொண்டு இமாம்களின் பெயரில் உள்ளே வருபவர்.

இவர் ஏன் ஹம்பலி மத்ஹப் என்று தன்னைக் கூறிக் கொள்கிறார் என்பதை இன்ஷா அல்லாஹ் நான் வேறு ஒரு தலைப்பில் கூறுகிறேன்.

முன்னோர்கள், சான்றோர்கள், ஸலஃப் ஸாலிஹீன்கள், ஹதீஸ்கலை வல்லுனர்கள், தப்ஸீர் துறை வல்லுநர்கள் என்ற பெரும் கொண்ட கூட்டத்தையே ஷிர்க் மற்றும் வழிகேட்டில் தான் இருக்கிறார்கள் என்று வாதிடக் கூடிய  வஹாபியிஸ கொள்கையில் இருப்பவர்தான் இந்த நதுவியார்.

தனது சவுதி விசுவாசத்தை அடிக்கடி காட்டிக் கொண்டே இருக்கும் இந்த சலஃபிய வஹாபிகள்  அவ்வப்போது நான்கு மத்ஹபுகள் என்ற ஊறுகாயை தொட்டு நக்கிக் கொண்டு இருப்பதுதான் இவர்களின் குள்ள  நரி தனங்களில் ஒன்று.

இவர்களின் பாசறையில் 10 வருடம் இருந்தவன் தான் நான்.

ததஜ, ஜமாஅத் இஸ்லாமீ, தேவ்பந்த், ஸலஃபியா கொள்கைகளில் பத்து வருடம் பயணித்து அவர்களின் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்பட்டு அவர்களின் தர்பியா கிளாஸில் பாடம் எடுத்து அவர்களின் பள்ளிவாசலில் இமாமாக பணியாற்றியவன் தான் நான்.

எனவே இவர்களின் அனைத்துவிதமான திருட்டுத்தனமும் அல்லாஹ்வுடைய அருளால் எனக்கு முழுவதும் தெரியும்.

குர்ஆன் ஹதீஸ் என்பதே இவர்களின் பிரதான வாதம்.

உண்மையில் அதுவல்ல !

குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூன்றாவது இந்த இரண்டையும் புரியக்கூடிய இவர்களின் அறிவு மற்றும் மனோஇச்சை !

 இதுவே இவர்களின் மார்க்கம் !

வரலாற்றில் ஹவாரிஜ் என்ற பிரிவினர் தான் முதன் முதலில் தன்னை தூய்மைவாதிகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் !

இவர்களுக்கு எது தவ்ஹீதாக தெரிகிறதோ அது மட்டும் தான் தவ்ஹீது !

தனக்கு ஒன்று இணைப்பாக தெரிந்துவிட்டால் கண்டிப்பாக மற்ற ஏனையோர் அனைவரும் முஷ்ரிக்கள் !

எனவே குர்ஆன் ஹதீஸிற்கு விளக்கம் தரும் சலஃப்களின் விளக்கம் என்பது இவர்களின் அறிவு மற்றும் மனோ இச்சைக்கு ஒத்து வந்தால் எடுத்துக்கொள்வதும்,

குர்ஆன் ஹதீஸிற்கு ஸலஃப் ஸாலிஹீன்களின் விளக்கம் இவர்களின் அறிவுக்கும் மனோ இச்சைக்கும் ஒத்துவரவில்லை என்றால் நிராகரிப்பதும் தான் இவர்களின் கலாச்சாரம்.

எனவே ஹம்பளியாக்கள் என்று தங்களை வாதிடக் கூடியவர்கள் ஊறுகாயாய் தான் இமாம்களை பின்பற்றுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

அசத்தியவாதிகளின் கொள்கை இருட்டடிப்பு என்ற பெயரில் பல இருட்டடிப்புகளை ஷேஹுல் இஸ்லாம் இஸ்மாயில் நதுவி அவர்கள் தனது கட்டுரைகளில் செய்துள்ளார்கள்.

இன்ஷா அல்லா இதன் பாகம்-1 பிஸ்மில்லாஹ் என்று ஆரம்பித்துள்ளேன்.

இதன் இறுதி பாகம் எத்தனை ஆயிரத்தில் போய் முடியும் என்பதை நதுவியார் தான் முடிவு செய்ய வேண்டும்.

அந்த அடிப்படையில்,

 நான்கு மத்ஹபுகளின் உலமாக்களும் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்ற பெயரில் பல பொய்களையும், புரட்டுகளையும் கண்மூடித்தனமாக வஹாபிய வலைதளங்களான

 islamqa information,
 islamweb,
multhaqi ahlil hadhees,
 ad durar 

ஆகியவற்றில் இருந்து காப்பி பேஸ்ட் செய்து ஊர்ஜிதம் செய்யாமல் போட்டுக் கொண்டே இருக்கிறார்.

இது இவரின் மனோநிலை மட்டுமல்ல !

அகில உலக வஹாபிகளின் குணங்களாகும் !

இந்த நான்கு தளங்களும் இவர்களின் நான்கு வேதங்கள் ஆகும் !

இதுதான் இவர்களின் நான்கு மத்ஹபுகள் ஆகும் !

இஸ்திஹாஸா, ஷஃபாஅத் விஷயத்தில் நான்கு இமாம்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்ற பெயரில் ஒரு அவதூறை பரப்பியிருக்கிறார்.

ஒன்றன் பின் ஒன்றாக அதை நாம் இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம்.

ஷாபி மத்ஹபினரின் மீது அவர் வைத்த ஒரு பொய் புரட்டை இப்பொழுது பார்க்கலாம்.

ஷாபி மத்ஹபின் பிரபல்யமான அறிஞரான சேஹுல் இஸ்லாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் :

"  இஸ்திஹாஸாவை செய்தவர் காபிராகி விடுவார் " என்பதாக ஒரு மாபெரும் அவதூறை அந்த இமாமின் மீது கூறியிருக்கிறார் இந்த நகைச்சுவை நதுவியார்.

அதற்குண்டான பக்க ஆதாரத்தை கொடுக்காமல் இருப்பதே இவருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு  !

இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் 40 ஹதீஸ்கள் என்ற புத்தகத்திற்கு ஃபத்ஹுல் முபீன் என்ற விரிவுரையை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

அதில் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நபிகளார் செய்த உபதேசங்களில்

إذا سئالت فاسئل الله 

நீ எதை கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள்.

என்ற ஹதீஸிற்கு விளக்கமாக இமாம் இப்னு ஹஜர் அவர்கள் 

من دعا غير الله فهو كافر 

அல்லாஹ் அல்லாத வரை யார் அழைத்தாரோ அவர் காஃபிராகி விடுவார்.

என்று சொன்னதாக சொல்லி எனவே இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இஸ்திஹாஸாவை மறுத்துள்ளார்கள் அவ்வாறு செய்பவரை காபிர் என்று கூறியுள்ளார்கள் என்று நதுவியார் இட்டுக்கட்டி கூறியுள்ளார்.

அப்படி ஒரு வார்த்தை அந்த புத்தகத்தில் இல்லை, 

இமாம் அவர்கள் உதவி தேடுவது பற்றி அங்கே பேசவில்லை,

கொள்கை நம்பிக்கை சம்பந்தமாக கூறுகிறார்கள்.

{إذا سألت فاسأل الله} أن من اعتقد النفع والضر لغير الله كفر

பிரயோஜனமும் கஷ்டமும் அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை கொள்வாரோ அவர் நிராகரித்து விட்டார் !

இதுதான் இந்த புத்தகத்தில் இடம் பெறும் வாசகம் !

ஆனால் வழக்கம்போல இமாம்களின் மீது இட்டுக் கட்டுகளை செய்து விட்டு பழியை நம் மீது போட்டு விடுவது தான் இவர்களின் குணம் !

இந்த ஹதீஸிற்கு இப்படி அர்த்தம் வைத்தால் மனிதர்களிடம் கூட யாரும் உதவி தேட முடியாது !

அல்லாஹ் அல்லாதவர்களின் மூலம் பிரயோஜனமும், கஷ்டமும் வரும் என்ற நம்பிக்கை கொள்வது குஃப்ரை  ஏற்படுத்திவிடும் என்று சொன்னால் அதை ஏன் நீங்கள் இறைநேசர்கள் இடம் மட்டும் மட்டுப் படுத்துகிறீர்கள் ?

மனிதன், ஜின், மலக்கு என்று யாரிடமும் பிரயோஜனம் கிடைப்பது இல்லை என்ற நம்பிக்கை கொண்டு வாருங்கள் !

வானவர்களிடம் உதவி தேடுவது இணைவைப்பு இல்லை என்பது சலபி முக்காடு முல்லாக்களின் முட்டாள்தனமான தீர்ப்புகளில் ஒன்று !

இந்த ஹதீஸ் மனிதனின் தவக்குல் சம்பந்தமாக பேசப்படுகிறது !

இதை வினயமாக இஸ்திஹாஸா உடன் தொடர்புபடுத்துவது அவதூறு !

நான் ஏற்கனவே சொன்னேன் அல்லவா !

இமாம்களை ஊறுகாயாய் பயன்படுத்துபவர்கள் தான் இவர்கள் !

இவர்களுக்கு உதாரணம்,

ஒருவன் ஒரு புத்தகத்தை பார்த்து தன் நோய்வாய்ப்பட்ட தாய்க்கு மருத்துவம் செய்தான் !

புத்தகத்தில் போடப்பட்டு இருந்ததைப் போல ஒரு கம்பியை பழுக்கக் காய்ச்சி நோய்வாய்ப்பட்ட அவரின் காலில் சூடு வைத்தான் !

தாய் கதறி அழுது அக்கம்பக்கத்தினர் கூப்பிட்டாள் !

வந்த மக்கள் அவனை அடித்து துவைத்து ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டவுடன் இந்த புத்தகத்தை ஆதாரமாகக் காட்டினான் !

அதற்கு மக்கள் : அந்தப் புத்தகத்தின் அட்டையை பாருடா மூதேவி என்று ஓங்கி தலையில் அடித்தார்கள் !

பார்த்தால் அது மாட்டிற்கு மருத்துவம் செய்வது எப்படி என்று போடப்பட்டிருந்தது !

எதற்காக சொல்லப்பட்டது என்றே தெரியாமல் முன்பின் பார்க்காமல் இறைவனாக வணங்கக்கூடிய சிலைகளை தெய்வங்களை அழைப்பது இணைவைப்பு பற்றி பேச பட்டுள்ளதை மறைத்து வஸீலா இஸ்திஹாஸா இது குறிக்கிறது என்று கூறுவது மாட்டுக்கு வைத்தியம் செய்வதற்கு பதிலாக மனிதனுக்கு செய்வதற்கு சமமாகும்.

எனவேதான் இவர்கள் இணைவைப்பாளர்களுக்கு சொல்லப்பட்ட குர்ஆன் வசனங்களை முஸ்லிம்களுடன் தொடர்பு படுத்துகிறார்கள் !

துவாவிற்கும் வசீலா விற்கும் கூட வித்தியாசம் தெரியாதா இவர்களுக்கு ?

துவா என்பது நாமாக செய்வது !

பிறரிடத்தில் நமக்காக செய்ய சொல்வதற்கு பெயர் துஆ கிடையாது !

அதற்குப் பெயர் வசீலா !

ஒரு மனிதன் தானாக அல்லாஹ்விடம் கேட்பதற்கு பெயர் துவா !

பிறரிடம் சென்று எனக்காக துவா செய்யுங்கள் என்று அவர்களை நாடினால் அதற்குப் பெயர் வசிலா !

இந்த அடிப்படை அறிவு கூட புரிந்து கொள்ளாமல் துஆவுக்கும், வசீலாவுக்கும் மத்தியில் மண்டையைப் போட்டு குழப்பிக் கொள்கிறார்கள்.

துவாவிற்கும், வஸீலாவுக்கு மத்தியில் வித்தியாசம் தெரியாததால் தான் இவர்களுக்கு இஸ்திஹாஸாவுக்கும், இணைவைப்புக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

இஸ்திஹாஸா, ஷஃபாஅத், வஸீலா விஷயத்தில் என்ன நிலைபாட்டில் இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இருந்தார்கள் இருந்தார்கள் என்று நீங்கள் பார்த்தால் இந்த முக்காடு முல்லாக்கள் எப்பேர்பட்ட பொய்யர்கள் என்பது உங்களுக்கு தெரியும் !

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ழா ஷரீஃபிற்கென்று பிரத்தியேகமாக ஸியாரத் செல்லக் கூடாது !

அங்கு உதவி தேடக் கூடாது !

 என்று இப்னு தைமியா எழுதிய புத்தகத்திற்கு சத்திய போர்வாளாக மறுப்புரை எழுதியவர்கள் தான்  இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்.

அந்த புத்தகத்திற்கு பெயர் 

" அல் ஜவ்ஹருல் முநழ்ழம் ஃபீ ஸியாரதில் கப்ரில் முகர்ரம் " !

ஆனால் இந்தப் பொய்யர்கள் எப்பேர்ப்பட்ட விஷயத்தை மறைத்து விட்டார்கள் எனப் பாருங்கள் !

இமாம் அவர்கள் அந்த புத்தகத்தில் கூறுகிறார்கள் :

இப்னு தைமியாவின் அனாச்சாரங்களில் ஒன்று இதுவரை அவருக்கு முன்னால் உள்ள எந்த ஆலிமும் சொல்லாத ஒன்றாகும்,

 وصار بها بين أهل الإسلام مُثلةً،

(எந்தளவிற்கு என்றால்) முஸ்லிம்களுக்கு மத்தியில் (வழிகேட்டிற்கு) உதாரணம் சொல்லுமளவிற்கு ஆகிவிட்டார்

 أنَّه أنكر الاستغاثة والتوسل به صلى الله عليه وسلم،

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இஸ்திஹாஸா மற்றும் வஸீலா தேடுவதை நிராகரிக்கிறார்,

 وليس كما افترى 

(இப்னு தைமியா) இட்டுக்கட்டி சொல்வது போல எல்லாம் கிடையாது, 

بل التوسل به صلى الله عليه وسلم حَسَنٌ في كل حال، 

எல்லா நிலையிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வஸீலா தேடுவது அழகிய விஷயமாகும்,

قبل خَلْقهِ وبعده، في الدنيا والآخرة).

அவர்கள் படைப்பதற்கு முன்னும் அதற்குப் பின்னும் இம்மையிலும் மறுமையிலும் ( எல்லா நிலைமையிலும்.)

நூல் : அல் ஜவ்ஹருல் முநழ்ழம்,
பக்கம் : 171,
ஆசிரியர் : இப்னு ஹஜர் அல் ஹைதமீ.

இந்த இமாம் என்ன கூறியிருக்கிறார்கள் ?

இந்தப் பொய்யர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் ?

وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏

ஆகவே, பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

(அல்குர்ஆன் : 77:19)

ஷாஃபி மதுஹபில் இஸ்திஹாஸா ஷஃபாஅத் வஸீலா என்பது முஸ்தஹப்பாகவும் அழகியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது !

அதை இணைவைப்பு என்று நீங்கள் சொல்கிறீர்கள் ?

உங்களுக்கும் ஷாபி மத்ஹபுக்கும் என்ன சம்பந்தம் ?

இன்னும் இதுவெல்லாம் எங்களுக்கு பத்தாது !

ஏனெனில் ஷாபி மத்ஹபிலும் முன்னால் வாழ்ந்த சுன்னத் வல் ஜமாஅத் ஷாஃபியாக்கள் இருக்கிறார்கள் !

தற்காலத்தில் வந்திருக்கும் ஷாபி மத்ஹபைச் சார்ந்த வஹாபிய தேவ்பந்திய மற்றும் நதுவிய ஷாபியாக்களும் இருக்கிறார்கள் !

என்று நமக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் ,

நம் அனைவருக்கும் பொதுவான இரண்டாம் ஷாபி என்று அழைக்கப்பட்ட சேஹுல் இஸ்லாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கருத்து நமக்கு போதுமானது !

அதைத் தாண்டி வேறு இமாம்களின் சொல் நமக்கு தேவையில்லை !

ஷாஃபி மதுஹபில் இஸ்திஹாஸா என்பது முஸ்தஹப்பு என்று இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சட்டம் இயற்றி உள்ளார்கள் !

ஷாஃபி‌ மதுஹபில் முஸ்தஹப்பானது உங்களுக்கு எப்படி ஷிர்க் ஆனது ? வஹாபிய ரவுடிகளே !

உங்களுக்கும் ஷாபி மத்ஹபுக்கும் என்ன சம்பந்தம் ?

முஸ்தஹப் என்று எங்கள் உலமாப் பெருமக்கள் எழுதி வைத்திருக்க உங்களுக்கும் எங்களுக்கும் என்னப்பா சம்பந்தம் ?

இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்கள் கிதாபுல் மஜ்மூஃயில் கூறுகிறார்கள்.

ما يستحب أن يقوله من يزور النبي (صلى الله عليه وسلم)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஜியாரத் செய்யக்கூடிய நபருக்கு விரும்பத்தக்க முஸ்தஹப்பான காரியம் என்னவென்றால், 

إذا وقف أمام القبر الشريف مخاطبا رسول الله (صلى الله عليه وسلم)،

கண்ணியத்திற்குரிய அந்த மண்ணறைக்கு முன்னால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருகில் பேசக் கூடியவராக நிற்கவேண்டும்,

ما نصه: ثم يرجع إلى موقفه الأول قبالة وجه رسول الله صلى الله عليه وآله وسلم

பிறகு தன்னுடைய முதலாவது நிலைக்கு நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய முகத்திற்கு முன்னால் வந்து நிற்க வேண்டும்,

ويتوسل به في حق نفسه

அவர்களுடைய உன்னதத்தை வைத்து அவர்களிடம் வஸீலா தேட வேண்டும்,

ويستشفع به إلى ربه سبحانه وتعالى,

பிறகு அல்லாஹு ஸுபுஹானஹு தஆலாவிடம் அவர்களைக் கொண்டு ஷபாஅத்து தேடவேண்டும்,

ومن أحسن ما يقول

அவ்வாறு அவர் (வசீலா தேடுவதிலேயே) மிகவும் அழகிய சொல் என்னவென்றால்

ما حكاه الماوردي والقاضي أبو الطيب وسائر أصحابنا - يعني سائر الشافعية - عن العتبي مستحسنين له

இமாம் மாவுர்தீ, அல் காழீ, மேலும் ஷாபி மத்ஹபைச் சார்ந்த எங்களுடைய அனைத்து தோழர்களும் உத்பாவை தொட்டும் பதிவு செய்திருக்கும் ஹதீஸ் (அதில் வரும் வாசகத்தை போல் சொல்லுதல் மிக அழகானது)
அந்த ஹதீஸ் ஆனது,

قال: (كنت جالسا عند قبر رسول الله صلى الله عليه وآله وسلم فجاء أعرابي

நான் நபி ஸல்லல்லாஹு இஸ்லாம் அவர்களுடைய ரவ்லாவுக்கு அருகில் அமர்ந்து இருந்தேன் அப்பொழுது ஒரு காட்டரபி வந்தார்,

(அவருடைய பெயர் பிலால் இப்னு ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறுகிறார்கள்)

فقال: السلام عليك يا رسول الله،

அந்த சஹாபி கூறினார்:
அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்,

سمعت الله يقول:

அல்லாஹ் தஆலா சொல்லியிருக்கிறதை நான் கேட்டுள்ளேன்,

‌ وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَـهُمُ الرَّسُوْلُ  لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا‏ 

ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து விட்டு உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் அவர்கள் மன்னிப்பைக்கோரி  அவர்களுக்காக தூதராகிய (நீங்களும்) மன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.

(அல்குர்ஆன் : 4:64)

وقد جئتك مستغفرا من ذنبي مستشفعا بك إلى ربي.....)

(அல்லாஹ்வின் தூதரே)
நான் உங்களிடத்தில் எனக்காக அல்லாஹ்விடம் நீங்கள் மன்னிப்பு தேட வேண்டும் என்று வந்துள்ளேன்.
மேலும் உங்களை வைத்து அல்லாஹ்விடம் நான் பரிந்துரை தேட வேண்டும் என்றும் வந்துள்ளேன்.

 
நூல் : கிதாபுல் மஜ்மூஃ
பாகம் : 8, பக்கம் :274,
ஆசிரியர் : இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ்.

ஏம்ப்பா நதுவி,

 ஷாபி மத்ஹபுக்கும் உமக்கும் என்னப்பா சம்பந்தம் ?

மேலே வரும் அந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து  ஒட்டுமொத்த ஷாபியாக்களும் இஸ்திஹாஸா ஷஃபாஅதை முஸ்தஹப் என்று கூறியுள்ளார்கள் என்று இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் !

ما حكاه الماوردي والقاضي أبو الطيب وسائر أصحابنا - يعني سائر الشافعية - عن العتبي مستحسنين له

இமாம் மாவுர்தீ, அல் காழீ, மேலும் ஷாபி மத்ஹபைச் சார்ந்த எங்களுடைய அனைத்து தோழர்களும் உத்பாவை தொட்டும் பதிவு செய்திருக்கும் ஹதீஸ் (அதில் வரும் வாசகத்தை போல் சொல்லுதல் மிக அழகானது)

இவ்வாறு இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியிருக்க !

இந்த ஹதீஸை உங்களுடைய  சவுதி முக்காடு முல்லாக்கள் லயீஃப் என்று சொன்னது மட்டுமல்லாமல் அதில்  ஷிர்கும் இருக்கிறது என்று வாதிடுகின்றனர் !

ஆனால் எங்களுடைய ஷாபியீ இமாம்கள் இந்த அறிவிப்பை அழகிய அறிவிப்பு என்று சொன்னது மட்டுமல்லாமல் இது முஸ்தஹப்பான காரியம் என்று ஷாபி மத்ஹபில் சட்டம் இயற்றியுள்ளார்கள் !

எனவேதான் திரும்ப நான் கேட்கிறேன் ஷாபி மத்ஹபிற்கும் உமக்கும் என்ன சம்பந்தம் ?

وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏

ஆகவே, பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

(அல்குர்ஆன் : 77:19)

மேலும் நதுவியார் மேற்கோள் காட்டிய புத்தகத்தை இவர்கள் முழுவதும் படித்தால் இவர்களின் சலபி வஹ்ஹாபி கொள்கைக்கு மரண அடி இப்னு ஹஜர் அவர்கள் வைத்துள்ளார்கள்.

அதே புத்தகத்தில் 222 பக்கத்திலிருந்து 224 வரை பிதுஅதுன் ஹஸனா பற்றி மிக அழகாக கூறியிருக்கிறார்கள் !

மேலும் அந்த பிதுஅதுன் ஹஸனாவில் மீலாது பெருவிழாவும் என்பதையும் இணைத்தே கூறியுள்ளார்கள் !

பிதுஅத் ஹஸனாக்கள் ஆகுமானவைகளே என்று இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்,

والحاصل : أن البدع الحسنة متفق على ندبها ؛ وهي : ما وافق شيئا مما مر ولم

மேலும் இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பிதுஅத்தை  ஐந்து வகையாகப் பிரித்தார்கள்

பார்க்க,

https://m.facebook.com/story.php?story_fbid=2857574551191780&id=100008177886567&sfnsn=wiwspmo

அதே போல இமாம் இப்னு ஹஜர் அவர்களும் ஐந்தாக பிரிக்கிறார்கள்,

(۱) واعلم أن البدعة تعتريها الأحكام الخمسة ؛ فتارة تكون واجبة كضبط المصاحف والشرائع إذا خيف عليها

الضياع ، وتارة تكون محرمة كالمكوس وسائر المحدثات المنافية للقواعد الشرعية ، وتارة تكون مندوبة كصلاة

التراويح جماعة ؛ ولذلك قال سيدنا عمر رضي الله عنه في التراويح : ( نعمت البدعة هي ) ، وتارة تكون مكروهة

كزخرفة المساجد وتزويق المصاحف ، وتارة تكون مباحة كاتخاذ المناخل للدقيق ؛ ففي الآثار : ( أن أول شيء

أحدثه الناس بعد رسول الله صلى الله عليه وسلم اتخاذ المناخل ) وإنما كانت مباحة ؛ لأن لين العيش وإصلاحه من

المباحات ، فوسائله مباحة . اهـا تحفة المزيد » ( ص٣٤٣)

يلزم من فعله محذور شرعي ، ومنها ما هو فرض كفاية ؛ كتصنيف العلوم ونحوها مما

قال الإمام أبو شامة شيخ المصنف رحمهما الله تعالى : 

இமாம் அபூஷாமா சொன்னதாக இமாம் இப்னு ஹஜர் கூறுகிறார்கள் :

( ومن أحسن ما ابتدع في زماننا ما يفعل كل عام في اليوم الموافق ليوم مولده صلى الله عليه وسلم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தநாளில் வருடந்தோறும் செய்யக்கூடிய அழகிய பிதுஅத்களைச் சார்ந்தவை

 من الصدقات ، والمعروف ، وإظهار الزينة والسرور ؛ 

தானதர்மங்கள், நன்மையான காரியங்கள், அலங்காரங்களை வெளிப்படுத்துதல், மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல் போன்றவைகளாகும்.

فإن ذلك مع ما فيه من الإحسان إلى الفقراء مشعر بمحبته صلى الله عليه وسلم ،

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மஹப்பத்தை உணர்த்துவதற்காக ஏழைகளுக்கு நாம் உதவி உபகாரங்கள் செய்வது இதன் மூலம் பெறப்படுவதாகும்,

 وتعظيمه ، وجلالته في قلب فاعل ذلك ،

பெருமானாரின் அந்தஸ்தும் மகத்துவமும் அதை செய்பவருடைய உள்ளத்தில் ஏற்படுகிறது,

 وشكر الله سبحانه وتعالى على ما من به من إيجاد رسوله صلى الله عليه وسلم ،

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை (இப்பூஉலகிற்கு) கொண்டு வந்ததற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதாகவும் அது இருக்கும்,

 الذي أرسله رحمة للعالمين صلى الله عليه وسلم )) .

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தகையோரென்றால் அவர்களையே இந்த அகிலத்தின் அருட்கொடையாக அல்லாஹ் அனுப்பினான்.

நூல் : ஃபத்ஹுல் முபீன்,
பக்கம் : 224,
ஆசிரியர் : இப்னு ஹஜர் அல் ஹைதமீ.

இஸ்மாயில் நதுவியைப் பொறுத்தவரை அசத்தியவாதிகளின் கொள்கை இருட்டடிப்பு என்ற அவருடைய கட்டுரைகளில் மீலாது கொண்டாடுபவர்கள் வழிகேடர்கள் என்றும் அதை ஷியாக்கள் தான் செய்கிறார்கள் என்றும் நான்கு மத்ஹபு அறிஞர்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றும் அண்டப்புளுகு ஒன்று விட்டிருந்தார்.

ஆனால் இப்னு ஹஜர் இமாம் சொன்னதை வெளியே சொல்லவில்லை !

நான் தான் சொன்னேன் அல்லவா இமாம்களை இவர்கள் ஊறுகாயை நக்கிக் கொள்வார்கள் என்று !

ஷாஃபி மதுஹபில் மீலாதை சிறப்பிப்பது முஸ்தஹப்பானது  என்று சொல்லப்பட்டுள்ளது !

இந்த நதுவி வஹ்ஹாபி அவர்கள் மீலாது என்பது கடுமையான பிதுஅத் என்று கூறுகிறார் !

உங்களுக்கும் எங்களின் ஷாஃபி மத்ஹபுக்கும் என்ன சம்பந்தம் ?

وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏

ஆகவே, பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

(அல்குர்ஆன் : 77:19)

இன்ஷா அல்லாஹ் அஹ்லுஸ் ஸுன்னாவின் வாள் சுழலும் !

அல்லாஹு வரஸூலுஹு அஃலம் .

 - இப்னு கபீர்.

Comments

Popular posts from this blog

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் 136 பக்கத

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழ்நாடு அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் உலமா பெருமக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். Download  Pdf 1. புனித ஹரமைனுஷ் ஷரீஃபைன் மற்றும் இந்தியாவின் உலமா பெருமக்களால் குஃப்ரு ஃபத்வா வழங்கப்பட்ட வழிகேடர்களான 1.குலாம் அஹ்மத் காதியானி 2.காஸிம் நானோத்தவி 3.கலீல் அஹ்மத் அம்பேட்வி 4.அஷ்ரஃப் அலி தானவி 5.ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆகியோர்களும் அவர்களைப் பின்பற்றுவோரும் காஃபிர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 2. நூரி ஷாஹைதராபாத்தில் ஜாமிஆ இலாஹியாத்தே நூரியா என்ற மதரஸாவை, வழிகெட்ட தேவ்பந்து வஹ்ஹாபி மதரஸாவை ஸ்தாபித்த காஸிம் நானோத்தவியின் பேரரான மௌலவி காரி தையப் காஸிமியை வைத்து நடத்திய திறப்பு விழா கல்வெட்டு ஆதாரம் (பார்க்க தர்கா இதழ் ஜனவரி - 2021) கிடைத்துள்ள படியாலும், நூரிஷா மதரஸாவின் பைலாவில் மதரஸாவை தொடர்ந்து நடத்தமுடியாமல் போனால் தேவ்பந்து அதை தத்தெடுத்துக் கொள்ளும் என்னும் ஷரத்து உள்ளது என்ற செய்தி தெரியவந்திருப்பதாலும் ஹைதராபாத் நூரிஷா தரீகாவினருக்கும், வழிகேடர்களான தேவ்பந்து வஹ்ஹாபிய முல்லாக்களுக்கும் உள்ள தொடர்பு வெளிச்சமாகியுள்ள படியாலும், மேலும் நூரிஷா தரீக்காவின்