Skip to main content

தீனிய்யாத்துக்கு பகிரங்க விவாத அழைப்பு

*தீனிய்யாத்துக்கு பகிரங்க விவாத அழைப்பு:*

பதிவுநாள்: 24.10.2021 - ஞாயிற்றுக்கிழமை
நேரம்: சரியாக *12:10pm*

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்....

பேரன்பிற்குரிய காயல் நகர தீனிய்யாத் நிர்வாகிகளுக்கு ஒரு பகிரங்க சவால். கடந்த சில நாட்களாக தீனிய்யாத் குறித்த சர்ச்சைகள் எழுந்து அது அணையாமல் பற்றி எரிவது நாம் அறிந்ததே!. 

அன்வாருஸ் ஸுஃப்பா உடைய தீனிய்யாத்தில் "நாள் குறிப்பிட்டு நடக்கும் ஃபாத்திஹாக்கள் ஹராம்" என்றும், அன்வோ (ANWO) சார்பாக நடக்கும் கன்ஜுல் உலூம் எனும் பெண்களுக்கான பாட கிதாபில் கிதாபில் ஃபாத்திஹா குறித்தும், ஐவேளை தொழுகைக்குப் பின் மற்றும் ஜனாஸா தொழுகைக்குப் பின் உள்ள கூட்டு துஆ விஷயத்தில் அவை பித்அத் என்றும் தவிர்க்கப்பட வேண்டியவை என்றும் உள்ளது. இது போன்ற விஷயங்கள் தீனிய்யாத் சார்ந்த பெண்களுக்கான கிதாபுகளில் உள்ளதால் இவை சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட‌ வேண்டிய சிலபஸாகும் என்பது எமது நிலைபாடு.

"இப்படியான சர்ச்சைக்குரிய மஸ்அலாக்கள் எங்கள் தீனிய்யாத் சிலபஸில் இருந்ததே இல்லை. இப்போது வலைதளங்களில் 'தீனிய்யாத்தில் உள்ளதாக வலம் வரும்' புகைப்படங்கள் பொய்யானவை.  அதுவும் கன்ஜுல் உலூம் என்பது வேறு ஏதோவொரு கிதாப்" என்றும், "தீனிய்யாத்தோடு அதற்கு எந்த சம்பந்தமும் இல்லை"யென்றும் நீங்கள் வலைதளங்களில் வாதிட்டு வருகிறீர்கள். அதற்கான ஆடியோக்கள் நம்மிடம் உள்ளது.

தாங்கள் இது நாள்வரை அழைத்து வந்தது போல நாங்கள் விவாதத்திற்குத் தயார். அடுத்த மாதம் கடைசி செவ்வாய் (30.11.21) நீங்கள் குறிப்பிடுகிற இடத்திலேயே தயார்.  எங்கள் சார்பாக 5 நபர்கள் வருவோம். 

ஆனால், அதில் எங்களுக்கு சில நிபந்தனைகள் உண்டு:

1. உங்கள் சார்பான விவாத அழைப்பு தீனிய்யாத் லெட்டர்ஹெட்டில் தான் வேண்டும். தனிநபர்களோடு நாங்கள் விவாதம் செய்ய வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. 

உங்கள் கூற்றில் உங்களுக்கு உறுதி இருந்தால், லெட்டர்ஹெட்டில் விவாத அழைப்பு தரவும்.

2. விவாதத்தில் இவை உங்கள் தீனிய்யாத்திலும் தீனிய்யாத் சம்பந்தப்பட்ட புத்தகங்களிலும் இருப்பதை நிரூபித்து விட்டால்,  தூத்துக்குடி மாவட்டத்தில் தீனிய்யாத்தை நடத்த மாட்டோம். அப்படி மீறி ஏதேனும் ஒரு ரூபத்தில் வந்தால் அதை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம் என்று உங்கள் சார்பாக விவாதத்தில் கலந்துகொண்டவர்கள் தனித்தனியாக கையெழுத்திட்டுத் தர வேண்டுமென்றும் நிபந்தனை வைக்கிறோம்.

இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் அடுத்த மாதம் 30.11.2021 செவ்வாய்க்கிழமை நீங்கள் முடிவு செய்கிற இடத்தில் நாங்கள் தயார் என்று பகிரங்கமாக அறிவிக்கிறேன்.

இப்படிக்கு,
*ஜாஸிர் மஹ்ழரி*





Comments

Popular posts from this blog

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல்

அடையாறு ஆசானுக்கு பகிரங்க மடல் https://az-zalzalah.blogspot.com/2018/12/blog-post.html மௌலவி  சதீதுத்தீன்  பாகவி , அவர்களுக்கு, மௌலவி, பதுறுத்தீன் ஷர்க்கி, பரேலவி,  எழுதும்  பகிரங்க மடல் தப்லீக் ஜமாஅத் பற்றி  நீங்கள்  பேசிய ஒரு பதிவை  வட்சொப்  தளங்களில்  நான் கேட்டேன். அதில்., இஸ்மாயீல் திஹ்லவி  பற்றியும், அவரது தக்வியத்துல் ஈமான் என்ற நூல் பற்றியும் சிலாகித்துப் பேசியுள்ளீர்கள். இப்பேச்சு  செவிவழிச்  செய்தியாக இல்லாமல் அறிவுபூர்வமானது  என்பதை," தக்வியத்துல் ஈமான்  என்ற  நூல், தன்னிடமிருப்பதையும், அதை நீங்கள் படித்ததையும் உரையில் குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. உங்களின்  இவ்விளக்கத்தின் மூலம் நீங்கள்   தேவ்பந்து  கொள்கையைச் சார்ந்தவர்   என்று உங்களை  விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். மௌலவி, அவர்களே! நீங்கள் படித்த  தக்வியத்து  ஈமான்  என்ற  நூல் தமிழில், "ஏகத்துவமும், இணைவைத்தலும் ."   என்ற பெயரில் 'அப்துல்ஹமீது  ஆமிர...

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி & நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

ஷெய்கனா மலேசியா வாப்பா அவர்கள் அபுதாஹீர் சிராஜி அவர்களுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி உடைய தொடர்பையும் நூரிஷா தரீக்கா உடைய தொடர்பையும் துன்டிக்க சொல்லி எழுதிய கடிதம்

தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்

*தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் கள்ள மௌனம்* *_______________________________* *தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவிற்கு மௌலான மௌலவி M.Kமுஹம்மத் காஷிம் மஹ்ளரி (இமாம் ஏழு லெப்பை பள்ளி - நாஹுர் ஷெஃரிப் ) அவர்கள் மற்றும் 60க்கு மேற்பட்ட உலமாக்கள் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட வஹ்ஹாபிய இயக்கம் என்று அறிவிக்க  வழியுறுத்தி  எழுதிய கடிதம்*  ■─➻ _தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுவரை வழிகெட்ட பி. ஜெ தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறது._ *இல்யாஸ் தப்லீக் ஜமாஅத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை போல் ஒர் வஹ்ஹாபிய பிரிவுதானே.* _தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற சென்னை காஃஷிபுல் ஹுதா, திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள்_ _இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட புனித காரியங்களான_  *மவ்லித், உரூஸ்* _போன்றவற்றை கூடாதென ஃபதவா வழங்கியிருக்கிறார்கள். இந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கின்ற டில்லி குதுப்கானா , பேகம்பூர், தின்டுக்கல் என்ற முகவரியில் இருந்து வெளியிட்ட கலீல் அஹ்மது கீரனூரி எழுதிய தப்லீக் ஜமாஅத்தின் குற்றசாட்டுகளும், தக்கபதில்களும் என்ற தமிழ் மொழிபெயர்ப்...